சற்று முன்

மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |    பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 'பறந்து போ'
Updated on : 01 February 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராமுடன் இணைந்துள்ளது. ராமின்  இயக்கத்தில்  ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்,  அடுத்த படமான ‘பறந்து போ’ படத்தை இணைந்து வழங்குகிறது.  இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.



 



நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம்,  மனதை  இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில்  வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.



 



ஒரு  பிடிவாதமான பள்ளி மாணவனும், பண வசதி இல்லாத  அவனது அன்பான அப்பாவும், கவலைமிக்க உலகிலிருந்து விடுபட,  ஒரு ரோட் டிரிப் மேற்கொள்கிறார்கள். அவர்களின் பயணம் தான் இந்தப்படத்தின் கதை. 



 



ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு 'பறந்து போ' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது குறித்து இயக்குநர் ராம் பேசுகையில்…, 'பேரன்பு' மற்றும் 'ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் பிரீமியர்  ரோட்டர்டாம் (IFFR) திரைப்பட விழாவில் அரங்கேறியதைக்  காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டாம் IFFR 2024 இல் 'ஏழு கடல் ஏழு மலை' திரையிடப்பட்டபோது, 'பறந்து போ' (ஃப்ளை அவே) திரையிடப்படுமா என்றும், ரோட்டர்டாமுக்கு வருவோமா? என்றும் மிதுல் ரியான் கேட்டார். ஒரு வருடம் கழித்து அவருடைய ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘பறந்து போ’ (ஃப்ளை அவே) IFFR 2025 இன் லைம்லைட் பிரிவில் ப்ரீமியர் செய்யப்படுகிறது. சிவாவும் நானும் வரும் பிப்ரவரி 4, இரவு 8 மணிக்கு de Doelen Jurriaanse Zaal இல் நடக்கும் பிரீமியரில் கலந்து கொள்கிறோம் .



 



மேலும் படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பற்றிப் பேசிய ராம், “சிவாவும் நானும் 2007 இல் எங்கள் திரை வாழ்க்கையைத் தொடங்கினோம் - அவருக்கு ‘சென்னை 28’  பட மூலமும், எனக்கு ‘கற்றது தமிழ்’ படம் மூலமும் திரை வாழ்க்கை துவங்கியது. அப்போது ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவா, என்னைப் பேட்டி எடுத்தார். அப்போதிருந்தே நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம், இணைந்து வேலை செய்ய இருவருமே மிகவும் விரும்பினோம். இறுதியாக, அது 2024 இல் 'பறந்து  போ' படம் மூலம் நடந்தது.



 



‘பறந்து போ’ படம் மூலம் இயக்குநர் ராம்,  முதன்முறையாக காமெடி ஜானரில் களமிறங்கியுள்ளார்.



 



“இந்தத் திரைப்படம், காமெடி ஜானரில் வித்தியாசமான புதிய குழுவுடன் எனது முதல் முயற்சி. மலையாளத் திரையுலகில் பிரபலமான கிரேஸ் ஆண்டனி, இப்படத்தில் மிகச்சரியான ஒரு அற்புதமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.  எப்போதும் போல, அஞ்சலி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்.  அஜு வர்கீஸ் மற்றும் விஜய் யேசுதாஸ் இருவரும் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் ஆகியவற்றில், சிறப்பான பணியைச் செய்துள்ளனர். மாஸ்டர் மிதுல் ரியானை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு திறமையான இளம் நடிகரின் இயல்பான நடிப்பு நிச்சயமாகப் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். ஹாட்ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது - அவர்கள் எனது பார்வையை நம்பி, எனது திரைக்கதைக்கு முழுமையான ஆதரவு தந்தனர். ஒட்டுமொத்த குழுவிற்கும், இப்படம் ஒரு அமைதியான மற்றும் இனிமையான பயணமாக அமைந்தது,” என்று ராம் கூறினார்.



 



பிரபல இயக்குநர் ராமுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய மிர்ச்சி சிவா கூறுகையில்…, 



“ராம் சாருடன் பணிபுரிந்தது ஒரு அருமையான  மற்றும் சிறந்த அனுபவம். நான் எப்பொழுதும் ராம் சார் தனித்துவ மிக்கவர் என்றே சொல்வேன். அவர் நம் தமிழ் திரையுலகின் சொத்து. இந்த அருமையான வாய்ப்புக்காக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் பிரதீப் சார் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்தில் நான் கையெழுத்திட்டபோது, இந்தக் கூட்டணி எப்படி இருக்கும் என்று நிறையப் பேர் என்னிடம் கேட்டார்கள். ராம் சார் என்னை அணுகியபோது, நானும் அதே கேள்வியைத் தான் கேட்டேன்.



 



“இப்படத்தின் கதை அருமையாக உள்ளது. இது ஒரு சிறப்பான படைப்பாக  உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறிய சிவா, இயக்குநர் ராமிற்கு நன்றி தெரிவித்தார். 



 



இயக்குநர் ராம் எழுதி இயக்கியுள்ள ‘பறந்து போ’ திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து வழங்குகிறது. செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.



 



படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார், இசை சந்தோஷ் தயாநிதி. மதி VS படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த படத்திற்கு, NK ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.



 



படத்தின் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.  சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைத்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா