சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்
Updated on : 30 December 2024

சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய " ஒன்வே" என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக நடிக்க இளம்நடிகர் தேர்வு நடக்கிறது.



 



கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல்படமாக இயக்கும் ராஜா பரணிதரபிரபு படத்தைப் பற்றி கூறியதாவது, :- " எல்லாம் நன்மைக்கே படத்தில் காதல், திரில்லர், காமெடி, குடும்பம், பாசம் உள்ளடக்கிய படமாக படமாக்குகிறேன். மக்களுக்கு பிடித்த கதை இது என்று அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன். தம்பிராமையா, அனுமோகன் , கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். அம்பிகாவின் மகளாகவும் கதாநாயகியாகவும் நடிக்க அம்பிகாவின் முகத்தோற்றத்தில் இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம். இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்து விட்டது. அப்படி தேவைப்படும் ஒன்றை வைத்து காமெடி, காதல், திரில்லர் கலந்து திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறேன். "  என்று இயக்குனர் ராஜாபரணிதரபிரபு கூறினார்.



 



படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொழிஞ்சாம் பாறையில் துவங்கி பொள்ளாச்சி, வால்பாறையில் வளர்ந்து சென்னையில் முடிவடைகிறது. 



 



ஜான் பாபு நடன பயிற்சியையும், முருகானந்தம் ஒளிப்பதிவையும், யானி. ஆர். இசையையும் கவனிக்கின்றனர்.



 



ஜி குரூப் புரொடக்சன் சார்பில் தனசேகரன் - கோழிக்கடை கோபால் சேர்ந்து தயாரிக்கின்றனர்.



 



முன்னணி இயக்குனர்கள் பலரிடம் டைரக்சன் பயின்ற ராஜா பரணிதரபிரபு இதன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தமது முதல் படமாக இயக்குகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா