சற்று முன்

தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |   

சினிமா செய்திகள்

என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன் - இயக்குநர் சீனு ராமசாமி
Updated on : 27 November 2024

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின்  இடை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. 



 



இந்நிகழ்வினில்…



நாயகன்  முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது…



ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக்கும் நன்றி. சைலண்ட் படம் மிக மிக அழகான படம். சமயமுரளி சாரை வெகு காலமாகத் தெரியும். மிக மிக நேர்மையான மனிதர். அவர் நிறையப் பேருக்கு உதவி செய்து வருகிறார். கணேஷ் சார் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. திரு நங்கைகள் பற்றி நிறையச் சர்ச்சைகள் இருக்கிறது அதைத் தெளிவாக்குவது போல் இந்தப்படம் இருக்கும். திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும். எனக்கும் நண்பியாக திருநங்கை  நமீதா இங்கு இருக்கிறார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 



 



திருநங்கை நமீதா பேசியதாவது…



எனக்கு வாய்ப்பு தந்த சமயமுரளி சார், இயக்குநர் கணேஷா இருவருக்கும் நன்றி. திருநங்கைகள் வாழ்க்கையை எடுத்துக்கூறும் கதை என்று சொன்னார்கள். அதனால் உடனே ஒப்புக்கொண்டேன். இந்தப்படத்தின் பாடலில் நடித்தது மகிழ்ச்சி. பாடல் மிக நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 



 



இசையமைப்பாளர் சமய முரளி பேசியதாவது…



முதல் மேடை மிக மகிழ்ச்சியாக உள்ளது. காலேஜ் காலத்தில், மியூசிக் ட்ரூப்பில் சேர்த்துக்கொள்வார்களா? என ஏங்கியிருக்கிறேன். ஆனால் இன்று இசையமைப்பாளராக இங்கு மேடையில் நிற்கிறேன். எனக்கு வாய்ப்பு  தந்த கணேஷா பாண்டிக்கு நன்றி. அவர் தான் ஊக்கம் தந்தார். என் மனைவிக்கு, என் அப்பாவுக்குத் தான் முதன் முதலில் பாடல் எழுதினேன். என் அம்மாவுக்காகப் பாடல் எழுதியதில்லை. இந்தப்படத்தில் கணேஷா பாண்டி ஒரு சிச்சுவேசன் சொன்ன போது, தாய் தான் கடவுளை விட ஒரு படி மேல் எனப் பாடல் எழுதியுள்ளேன். மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் ஆனால் ராகம் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இசையமைத்துள்ளேன் இயக்குநர் நன்றாக இருப்பதாக பாராட்டினார். ஆண்டவனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 



 



இயக்குநர் கணேஷா பாண்டி பேசியதாவது… 



சைலண்ட் என் முதல் குழந்தை. இந்த தலைப்புக்கும் எனக்கும் நிறையப் பந்தம் இருக்கிறது. சின்ன வயதில் அதிகம் பேச மாட்டேன், அதன் பிறகு வறுமை, அதன் பின் போராட்டம் இந்த அனைத்துக்கும் இந்த சைலண்ட் பதிலாக இருக்கும். ராம் பிரகாஷ் சார் இந்த வாய்ப்பிற்கு நன்றி சார். பத்திரிக்கையாளர்கள் இந்த சைலண்ட் படத்திற்கு ஆதரவு தந்து தூக்கி விட வேண்டும். இங்கு வந்து வாழ்த்திய பிரபலங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். என் பெற்றோர் இன்று உயிருடன் இல்லை. உங்கள் அனைவரையும் என் பெற்றோராக நினைத்து வணங்குகிறேன் நன்றி. 



 



இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது.. 



உண்மையில் இது ஆச்சரியமான மேடை. ஒரு நியூஸை இரண்டு பி ஆர் ஓவிற்கு அனுப்பினால்,  அது பத்திரிக்கையில் வராது ஆனால், இந்த மேடையில், அனைத்து பி ஆர் ஓக்களும் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. ஹேமானந்த் அழைப்பின் பேரில் தான் இந்த விழாவிற்கு வந்தேன். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.  சைலண்ட் என ஒரு ஆங்கில படம் பார்த்தேன், அந்த மாதிரி படமாக இருக்குமென நினைத்து வந்தேன். ஆனால் இந்தப்படம் மிகப்பெரிய விசயத்தைப் பேசுகிறது. திருநங்கையை வைத்து எந்த ஒரு இயக்குநரும் இவ்வளவு தைரியமாக முதல் படம் செய்ய மாட்டார்கள். நானும் என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன். இவர்கள் அதே போல் மிகவும் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். நான் சிறு வயதிலிருந்தே விமர்சனம் பார்த்து படம் பார்க்க மாட்டேன் யார் சொல்லும் விமர்சனத்தையும் கேட்க மாட்டேன். பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் படிப்பேன், தியேட்டரில் படம் பார்த்த பிறகு தான் விமர்சனம்  படிப்பேன். ஆனால் அப்போதிலிருந்து இப்போது வரை சிறு முதலீட்டு படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான். ரிவ்யூ இல்லாததால் சின்ன படங்கள் வருவதே தெரியவில்லை. மக்கள் கருத்தை வாங்கி ஒளிபரப்ப மீடியாக்களை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.  தொடர்ந்து சிறு படங்களுக்கு ஆதரவு தாருங்கள். இப்படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



 



இயக்குநர் கணேஷ் K பாபு  பேசியதாவது.. 



இப்படத்தை ரிலீஸ் செய்யும் ராஜா சேதுபதி என் நண்பர், அவர் சினிமாவை மிகவும் நேசிப்பவர். அவர் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் கண்டிப்பாக நல்ல படமாகத்தான் இருக்கும். இயக்குநர் கணேஷா பாண்டி மிக நன்றாக இயக்கியிருக்கிறார்.  மிக நன்றாக நடித்துள்ளார். பட்ஜெட் கேட்டேன் நம்ப முடியவில்லை. சின்ன பட்ஜெட்ட்டில் மிக நன்றாக எடுத்துள்ளார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி. 



 



தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி  பேசியதாவது 



இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். அருமையான படம்.  இப்படத்திற்கு இசையமைத்துள்ள சமயமுரளி எனக்கு நண்பர். அவர் ஒரு அரசு அதிகாரி. ஆனால் சினிமா இசை ஆர்வத்தில் தொடர்ந்து முயன்று, இசையமைப்பாளராக மாறியுள்ளார். வாழ்த்துக்கள். இயக்குநர் கணேஷா பாண்டி மிக  நன்றாக இயக்கியுள்ளார். அதை விட நன்றாக நடித்துள்ளார். இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மிக மிகக் கடினம். அதை நன்றாகச் செய்துள்ளார். இப்போது சினிமாவில் விமர்சனம் வரக்கூடாது எனச்  சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை எப்போதும் வரவேற்பேன். இன்றைய காலகட்டத்தில் முதல் ஷோவில் கூட்டம்  வரவில்லை எனும் போது அடுத்த ஷோ காலியாகி விடுகிறது. இந்த நிலையில் விமர்சனங்கள் வர வேண்டும், வர வில்லையெனில் அந்தப்படம் வருவதே தெரிவதில்லை. இந்த விசயத்தில் திரைத்துறையினர்  முறையாகப் பேசி  முடிவெடுக்க வேண்டும். 



 



உடலால் ஆணாகவும் உடை நடவடிக்கையில் பெண்ணாகவும் தோற்றத்தை மாற்றிக்கொண்ட  ஒருவன் இருக்கும் படத்தில், தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதிகாரியிடம்  ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பதை பரபரப்பாக சொல்லும் திரைப்படம் தான் சைலன்ட். 



 



இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி நடித்துள்ளார். 



 



மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், சமயமுரளி, அறம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 



 



சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையராக பனியாற்றி வரும் திரு T சமய முரளி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 



 



“சைலண்ட்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரப்பாக நடந்து வருகிறது. படத்தை வரும் 29 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. 



 



SP ராஜசேதுபதி SPR பிலிம்ஸ் சார்பில் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா