சற்று முன்

'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |   

சினிமா செய்திகள்

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு!
Updated on : 27 November 2024

பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள, “கேம் சேஞ்சர்” திரைப்படம், இந்தியாவெங்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.  இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் தமிழ் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிறது. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப்பாளர்களான திரு.தில்ராஜு & திரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 



 



இந்திய சினிமாவில் முதன்முறையாக, கேம் சேஞ்சர் திரைப்படக்குழு, அமெரிக்காவில் டிசம்பர் 21, 2024 அன்று டெக்சாஸின் கார்லண்டில் உள்ள கர்டிஸ் குல்வெல் மையத்தில், ஆடம்பரமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. கரிஸ்மா ட்ரீம்ஸின் ராஜேஷ் கல்லேபள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கொண்டாட்டம், தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவிற்கு ஒரு வரலாற்றுத் தருணமாகும். அமெரிக்காவின் டல்லாஸை தளமாகக் கொண்ட ராஜேஷ் கல்லேபள்ளி, ஒரு தொழில்முனைவோர் மற்றும் சமூகத் தலைவராக குறிப்பிடத்தக்க பாரம்பரியத்தை உருவாக்கிய ஒரு முன்மாதிரியான நபர். தகவல் தொழில்நுட்ப ஆலோசனை, உணவகச் சங்கிலிகள், ரியல் எஸ்டேட், திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகம் போன்ற பல்வேறு துறைகளைக் கொண்ட ராஜேஷ் கல்லேபள்ளி, இம்மாதிரி நிகழ்வை மிகப் பெரிய அளவில் நடத்துவதில் சிறந்தவர்.



 



ராம் சரண் மீதான அபிமானத்தால்  ராஜேஷ் கல்லேபள்ளி இந்த மிகப்பெரிய பணியை மேற்கொண்டுள்ளார், இது திரைத்துறை  எங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து ராஜேஷ் கூறுகையில்.., "இந்தியப் படமொன்றுக்கு அமெரிக்காவில் முதன்முறையாக இந்த அளவிலான ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை நடத்துவது பெருமையாக உள்ளது. இந்த வாய்ப்பினை வழங்கிய ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும்  ஷிரிஷ் ஆகியோருக்கு நன்றி. இந்த நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்ய திட்டமிட்டுள்ளோம்.



 



முன்னதாக வெளியான போஸ்டர்கள், 'ஜருகண்டி ஜருகண்டி' மற்றும் 'ரா மச்சா ரா' பாடல்கள் மற்றும் டீசர் அட்டகாசமான வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் பெற்ற ஷங்கர் இயக்கத்தில்  பிரம்மாண்டமான புதுமையான சினிமா அனுபவத்தை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.



 



கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். எஸ்.எஸ்.தமனின் இசை, சாய் மாதவ் புர்ராவின் வசனங்கள் மற்றும் நட்சத்திரத் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில், படம் மிக அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும். படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி  காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்!



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா