சற்று முன்

“டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |   

சினிமா செய்திகள்

சீனா திரையரங்குகளில் தமிழ் பிளாக்பஸ்டர் படமான 'மகாராஜா'!
Updated on : 27 November 2024

Yi Shi Films  நிறுவனம் Alibaba Pictures உடன்  இணைந்து, தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படமான மஹாராஜா படத்தினை,  சீனா முழுதும் திரையரங்குகளில் வெளியிடுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. இயக்குநர்  நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை, பேஷன் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரித்துள்ளது.



 



மஹாராஜா திரைப்படம் மாறுபட்ட கதைக்களத்தில், அதிரடியான இசை, அற்புதமான காட்சியமைப்பு, என அனைத்து தரப்பிலும் பரவலான பாராட்டுக்களைக் குவித்தது. Yi Shi Films  நிறுவனம் Alibaba Pictures உடன்  இணைந்து,  தமிழ், இந்திய கலாச்சார பன்முகத்தன்மையை, உலகமெங்கும் அறிமுகப்படுத்தும் வகையில், சீனா முழுதும் திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிடுகிறது. சீனா வெளியீட்டில், Home Screen Entertainment மற்றும்  Nine Knots Entertainment மிக முக்கிய பங்காற்றி, இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன.



 



அலெக்ஸி வூ,  Yi Shi Films கூறியதாவது… "மகாராஜாவை சீனாவிற்கு கொண்டு  வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படம் மூலம்  சீனாவில் தமிழ் சினிமாவின் கலைத்திறனை, புதிய பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து, உலகின் சிறந்த சினிமாக்களை, உலகம் முழுக்கவுள்ள பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி. 



 



பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில்.. “மகாராஜா   எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியான படைப்பாகவும், பெருமையின் அடையாளமாக மாறியது. சிறந்த கதையம்சம் கொண்ட நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை, பல்வேறு பின்னணியில் உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும்படியான படங்களை, உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்.  மகாராஜா பெரும் அன்பையும், வரவேற்பையும் பெற்றது. தற்போது இப்படம் சீனாவில் உள்ள ரசிகர்களைக்  கவரும் வகையில்,  நவம்பர் 29 ஆம் தேதி வெளியாவது மகிழ்ச்சி.   மகாராஜா படத்தினை சீனாவில் மிகப்பெரிய அளவில் வெளிடுயிடும் Yi Shi Films  மற்றும் Alibaba Pictures நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்றி.  உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன், அதிரடி திருப்பங்களுடன் இப்படம் சீனா ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். சீன ரசிகர்களது வரவேற்பைக் காண ஆவலுடன் உள்ளோம். இந்த நேரத்தில் இப்படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கிய விஜய் சேதுபதி, இயக்குநர் நித்திலன் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி.



 



ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் அனிஷ் வாத்வா, கூறியதாவது.. “சீனாவில் உள்ள திரையரங்குகளுக்கு மகாராஜாவைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி. தமிழ் சினிமாவின் துடிப்பான மற்றும் தனித்துவமான உலகத்தை புதிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி. உலகளவில் மறக்க முடியாத சினிமா அனுபவத்தை, Yi Shi Films  மற்றும் Alibaba Pictures உடன் இணைந்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். 



 



மகாராஜா திரைப்படம் நவம்பர் 29, 2024 அன்று சீனா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  திரைப்பட ஆர்வலர்கள் உள்ளூர் ரசிகர்களைக் கவரும் வகையில், சிறப்பு விளம்பரங்கள் மற்றும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா