சற்று முன்

வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் தான் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுப   |    'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!   |    'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’   |    2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்!   |    சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!   |    டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “ரெட்ட தல”   |    உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!   |    21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |   

சினிமா செய்திகள்

நவம்பர் 29 முதல் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'பாராசூட்' சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது!
Updated on : 19 November 2024

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான  'பாராசூட்' டிரெய்லரை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த சீரிஸ்,  இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமாகும் என்றும் அறிவித்துள்ளது.



 



ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான பாராசூட் சீரிஸ், இரண்டு இளம் சிறார்களின் உலகை பற்றியதாக  உருவாகியுள்ளது. குழந்தைகளின் மீது பெரும் அன்பை வைத்திருக்கும் பெற்றோர்கள், அவர்கள் நன்றாக வளர வேண்டுமென அவர்கள் மீது கண்டிப்பு காட்டுகிறார்கள். இரு சிறுவர்களும் பெற்றோருக்கு தெரியாமல்,  பாராசூட் எனும் மொபட் பைக்கை எடுத்துக்கொண்டு பயணம் செல்கிறார்கள்.  அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் 'பாராசூட்'. 



 



இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கியுள்ள இந்த சீரிஸில், தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை  'குக்கு வித் கோமாளி' புகழ் கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  கிருஷ்ணா குலசேகரன் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதோடு, இந்தத் சீரிஸின் தயாரிப்பையும் கையாண்டுள்ளார்.



 



இந்த சீரிஸில் நடிகர்கள் காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பாவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.



 



ஶ்ரீதர் K எழுதியுள்ள 'பாராசூட்' சீரிஸிற்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த சீரிஸிற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் செய்துள்ளார்கள். இந்த சீரிஸிற்கு கலை இயக்கம் ரெமியன், ஸ்டண்ட் மற்றும் உடைகளை டேஞ்சர் மணி மற்றும் ஸ்வப்னா ரெட்டி ஆகியோர் செய்துள்ளனர்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா