சற்று முன்

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |    நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’   |    அன்போடு 'ஸ்வீட்டி' என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிரபாஸ் வாழ்த்து பதிவு!   |    100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா - அத்தியாயம் 1’!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில்!   |    கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!   |    ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

'கருப்பு பெட்டி' தலைப்பை வைக்க இதுதான் காரணம்! - இயக்குனர் எஸ்.தாஸ்
Updated on : 15 October 2024

ஜேகே பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பி. மிதுன் சக்ரவர்த்திதயாரித்துள்ள படம் "கருப்பு பெட்டி". பரபரப்பான அரசியல்வாதியாக வலம் வரும் கே.சி.பிரபாத் கதை நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாகதேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார்.



 



இந்த ஆண்டு சிறுபட்ஜெட், பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வெளியான படங்களில் கதையம்சம் உள்ள படங்களே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள "கருப்பு பெட்டி" படத்தை இயக்கியுள்ள எஸ்.தாஸ் படம் பற்றிகூறுகிறபோது குடும்பஸ்தனான நாயகனுக்கு ஏற்படும் ஒரு சாதாரணப் பிரச்சினை அவரது குடும்பத்துக்குள் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதுதான் படம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம்.



 



மனரீதியான பிரச்சினை ஒன்றை இதில் பேசியிருக்கிறோம். விமானத்துக்கும், அதன் இயக்கத்தையும் பதிவு செய்கிற கருவி கறுப்பு பெட்டி. அதே போன்று இந்தக் கதையிலும் கருப்பு பெட்டி போன்ற முக்கியமான ஒன்றுதான் கதையில் ட்விஸ்ட்டாக இருக்கிறது. அதனால் இந்தத் தலைப்பை வைத்துள்ளோம். 2 மணி நேர படம்தான். படம் பார்க்க வரும் பார்வையாளர் மனம் விட்டு இரண்டு மணி நேரம் சிரித்து வீட்டு போகலாம். ஏனென்றால் படம் திரையில் ஓடும் நேரமும் இரண்டு மணி நேரம்தான் என்றார்.



 



கதையின் நாயகனாக நடித்திருக்கும் கே.சி. பிரபாத் "பில்லா பாண்டி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் அப்படத்தை தயாரித்ததோடு, படத்தின் திருப்புமுனையான வில்லன் வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர், தொடர்ந்து "தேவராட்டம்", "புலிக்குத்தி பாண்டி", "அங்காரகன்" யாமம் ஆகிய படங்களில் நடித்து வருபவர். படவெளியீட்டையொட்டி கறுப்பு பெட்டி பட விளம்பர வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



 



விளம்பர சுவரொட்டிகளில் கே.சி.பிரபாத் மற்றும் கதாநாயகி இருவரும் கைவிலங்குடன் நீதிமன்றத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருக்கும் இப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக இருக்கும், என்கிறார் கதை நாயகன் கே.சி. பிரபாத். இப்படத்தில் சரவண சக்தி, சித்தா ஆர்.தர்ஷன், தேவிகா வேணு, அனிதா, கீர்த்தி, நிஷா, சர்மிளா, கண்ணன், ராஜதுரை, சிற்றரசு, காமராஜ், சாய் வைரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.



 



கே.சி.பி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை எழுதி எஸ்.தாஸ் இயக்கியிருக்கிறார். அருண் இசையமைக்க, சிற்றரசு பாடல்கள் எழுதியுள்ளார். ஆர்.மோசச் டேனியல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலசிவா படத்தொகுப்பு செய்துள்ளார். திவாகர் கலை இயக்குநராக பணியாற்ற ரவி ராஜா சண்டைக்காட்சிகளையும், மாஸ்டர் சக்ரவர்த்தி நடனக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.



 



வரும் அக்டோபர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள "கருப்பு பெட்டி" படத்தை  தென்னிந்தியா முழுவதும் கே.சி.பி. புரொடக்க்ஷன்ஸ் வெளியிடுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா