சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்
Updated on : 23 September 2024

சமீபகாலமாக தமிழ் சினிமா சந்தித்திருக்கும் மாபெரும் ஒரு சவால்தான் OTT மற்றும் SATELLITE வியாபாரம். கடந்த வருடங்கள் போல் இல்லாமல் மிகக் கடினமான சூழ்நிலையில் தமிழ்த் திரைப்படங்கள் இந்த வியாபாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பிறகே OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம் முடிவாகும் என்ற சூழல் இப்போது உருவாகியுள்ளது. இந்த காலக் கட்டத்தில் திரைக்கு வரும் முன்னரே திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்து இதயம் கரைந்து  இந்தப் படம் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாகவும் மனதை நெகிழவைக்கும் படமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து ஜீ தமிழ் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்...



 



 



மிக விரைவில் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிற திரு.மாணிக்கம் படத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, நாசர்,  தம்பி ராமையா, இளவரசு, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், சாம்ஸ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்... சீதாராமம் பட புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்... 



 



 



இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை அப்படியே பதிவு செய்து கண்ணுக்கு விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுகுமார்... விறுவிறுப்பான திரைக்கதையில் இயக்குனர் நந்தா பெரியசாமி திரு.மாணிக்கம் திரைப்படத்தை இயக்கியுள்ளர்... ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் தயாரித்துள்ளனர்...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா