சற்று முன்
சினிமா செய்திகள்
தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!
Updated on : 21 September 2024
பிரைம் வீடியோவிலிருந்து வெளியான தலைவெட்டியான் பாளையம் சீரிஸின் அருமையான டிரெய்லரைத் தொடர்ந்து, இந்த சீரிஸ் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஜி.பி. முத்துவும் அபிஷேக் குமாரும், இந்த சீரிஸில் நடிக்கும் கதாப்பாத்திரங்களை ஒட்டி ஒரு அட்டகாசமான புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஜி.பி. முத்து, அபிஷேக்குமாருக்கு தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங்காக மாற ஐந்து அருமையான ஐடியாக்களைத் தருகிறார்.
ஜி.பி. முத்துவுக்கும் அபிஷேக்குமாருக்கும் இடையிலான உரையாடலில் அவர் தரும் ஐந்து ஐடியாக்கள் இதோ !
1. எப்போதும் ஸ்ட்றெஸ் ஆகக்கூடாது
2. சம்பிரதாயமாக நடந்து கொள்ளக் கூடாது ஏனெனில் இந்த கிராமத்தில் யாரும் புதியவரில்லை
3. இயல்பாக பழக வேண்டும் அதே நேரம் புத்திக் கூர்மையுடன் இருக்க வேண்டும்.
4. பிரச்சனைகளிலிருந்து எப்போதும் ஒதுங்கி இரு
5. முக்கியமாக பேய் மரத்தை விட்டு எப்போதும் ஒதுங்கியே இரு
இதையெல்லாம் ஒழுங்காக பின்பற்றினால், தலைவெட்டியான் பாளையத்தின் விசித்திரமான கிராமவாசிகளுக்கு பிடித்தவனாக இருப்பாய் என்கிறார். முத்துவின் இந்த விதிகளைப் பின்பற்றி இந்த சவாலில் அபிஷேக்கின் கதாபாத்திரமான சித்தார்த் வெற்றி பெறுவாரா?
தலைவெட்டியான் பாளையம் என்பது எட்டு எபிசோடுகள் கொண்ட காமெடி சீரிஸாகும், இது பெரிய நகரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், தலைவெட்டியான் பாளையம் என்ற தொலைதூர கிராமத்தில், தனது புதிய பணியில், அறிமுகமில்லாத சூழலின் சவால்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைச் சொல்கிறது. இயக்குநர் நாகா இயக்கியுள்ள இந்த சீரிஸை, பாலகுமாரன் முருகேசன் தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். இந்த குடும்ப பொழுதுபோக்கு சீரிஸில், திறமையான நடிகர்களான அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி மற்றும் பால் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தலைவெட்டியான் பாளையம் பிரீமியர் செய்யப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில சப்டைட்டில்களுடன் இது திரையிடப்பட உள்ளது.
சமீபத்திய செய்திகள்
பிரைம் வீடியோ வெளியிட்ட ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் டிரெய்லர்
இந்த ஒரிஜினல் தமிழ் தொடரானது, கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் (இது ஒரு ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது
இந்தத் தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்த முதல் தமிழ் டார்க்-ஹியூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும், 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவையில் பிரத்யேகமாக அக்டோபர் 18 முதல் தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது, மும்பை, இந்தியா, 09, 2024 — இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, அதன் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரான ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தொடரின் மனதைக் கவரும் டிரெய்லரை இன்று வெளியிட்டது. கல்யாண் சுப்ரமணியன் (ஒரு ஸ்டோன்பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj), தொகுத்த இந்த தமிழ் ஒரிஜினல் தொடர் அசோக் வீரப்பன், பரத் முரளீதரன் (Ashok Veerappan, Bharath Muralidharan) மற்றும் கமலா அல்கெமிஸ் இயக்கத்தில், கமலா அல்கெமிஸ் & திவாகர் கமல் (Kamala Alchemis & Dhivakar Kamal) ஆகியோரால் உருவாக்கப்பட்டது. எதிர் வரவிருக்கும் இந்த டார்க் ஹியூமர் த்ரில்லரில் நவீன் சந்திரா (Naveen Chandra), நந்தா (Nandha), மனோஜ் பாரதிராஜா (Manoj Bharathiraja), முத்துக்குமார் (Muthukumar), ஸ்ரீந்தா(Srinda), ஸ்ரீஜித் ரவி (Sreejith Ravi), சம்ரித் (Samrith), சூர்யா ராகவேஷ்வர் (Surya ragaveshwar), சூர்யகுமார்,(Surya kumar), தருண் மற்றும் சாஷா பரேன் (Tarun and Sasha Bharen) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளதை பெருமையோடு அறிவிக்கிறது..
2000 ஆண்டு கால மத்தியில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட இந்த திரில்லர் கதைக் களம்.. நட்பை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடுகிறது. கடினமான வாய்ப்புகளினூடே லாகவமாக செல்லவும், சிக்கலான மர்மங்களை கட்டவிழ்க்கவும், தங்களின் மிக மோசமான தேர்வுகளை எதிர்கொள்ளவும் வலுக்கட்டாயமாக நிர்பந்திக்கப்படும் நான்கு பள்ளி நண்பர்களின் வாழ்க்கைப் பயணத்தை இது பின்தொடருகிறது.
இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழிலும் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டும் அக்டோபர் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும். இந்த ஒன்பது-எபிசோடுகளைக் கொண்ட த்ரில்லர் பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு ₹1499 மட்டும் செலுத்தி, சேமிப்பு, வசதி மற்றும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங் களையும் அனுபவித்து மகிழலாம் நான்கு பள்ளி மாணவ நண்பர்கள் -கில்லி, இறை, சாண்டி மற்றும் பாலா - தங்களின் கவனக்குறைவால் ஒரு புதிரான சூழலில் சிக்கி, அதிலிருந்து விடுபட போராடும் நிகழ்வுகளின் ஒரு பார்வையை.. இந்த டிரெய்லர் காட்சிப்படுத்துகிறது. காவல்துறையினர் மற்றும் ரௌடி கும்பல்களால் துரத்தப்படும் அவர்கள் தப்பிச்செல்லும் பாதையில் ஒரு மர்மமான மற்றும் புத்திசாலித்தனமான கதாபாத்திரம், லியோ (நவீன் சந்திரா) வை சந்திக்க நேரும் போது சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்ப்படுகிறது, அவரது கணிக்க முடியாத வித்தியாசமான ஒவ்வொரு செயல்பாடுகளின் போதும், அதிரடி திருப்பங்கள் ஏற்ப்படுகின்றன. இதன் கதாபாத்திரங்கள் அனைவரும் கால அவகாசமின்றி நேரத்திற்கு எதிராக இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் சோக நிகழ்வுகளை நகைச்சுவையாக சித்தரிக்கும் காட்சிகள் நிறைந்த, இந்த த்ரில்லர்… பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி அவர்களின் மனதைக் கட்டிப்போட்டு, இருக்கையின் விளிம்பில் அமரவைக்கும் சாகசங்கள் நிறைந்த ஒன்றாகவும் இருப்பதற்கு உத்திரவாதம் அளிக்கிறது.
நடிகர் நவீன் சந்திரா தனது கதாபாத்திரம் குறித்த தனது நுண்ணறிவை பகிர்ந்து கொண்டு கூறினார், “அதன் எதிர்பாரா திருப்பங்கள், தீவிரமான கதாபாத்திரங்களின் இயக்க ஆற்றல் மற்றும் அடுக்கடுக்காக வெளிப்படும் மர்மங்கள் நிறைந்த கதைக்களத்தைக் கொண்ட இந்தத் தொடர், சாகசம், டிராமா மற்றும் மர்மம் ஆகியவற்றின் சில்லிடவைக்கும் ஒரு அற்புதமான கலவையாகும். அனைவரையும் முழுமையாக கவர்ந்திழுக்கும் என் கதாபாத்திரம் கதைக்கு ஒரு உத்வேகத்தை அளித்து தொடர் முடியும் வரை முழுவதுமாக பார்வையாளர்களை கட்டிப்போட்டுவிடும். விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இன்ஸ்பெக்டர் ரிஷியின் குறிப்பிடத்தக்க அமோக வெற்றிக்குப் பிறகு, பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நட்பு, ஆபத்து மற்றும் தன்னை அறிதலின் உணர்வுகள் நிறைந்த ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தொடரை அனைவரும் ஆழ்ந்து அனுபவிப்பதை காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்!"
வெற்றிமாறனின் தலைசிறந்த இயக்கம் 'விடுதலை பார்ட்2' பட டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்!
நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் இன்று (அக்டோபர் 10, 2024) சென்னையில், 'விடுதலை பார்ட்2' படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர் என்பதை இயக்குநர் வெற்றிமாறன் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது, “திரைப்படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது, அதன் கதை சொல்லலுக்கு ஆத்மார்த்தமான உயிர் கொடுப்பது டப்பிங்தான். இருப்பினும், 'விடுதலை பார்ட்2' படத்தின் டப்பிங் தொடங்குவதற்கு முன்பே படத்தின் அழகையும் ஆன்மாவையும் எங்களால் உணர முடிந்தது. படத்தின் இறுதி வெளியீட்டை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில், இந்தப் படத்தைப் பார்வையாளர்களும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார்.
'விடுதலை பார்ட் 1' படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து 'விடுதலை பார்ட் 2' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறனின் தலைசிறந்த இயக்கம், சூரியின் அற்புதமான நடிப்பு, விஜய் சேதுபதியின் திரை இருப்பு, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என இவை அனைத்தும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில், நடிகை மஞ்சு வாரியர் விஜய் சேதுபதியுடன் முக்கிய காட்சிகளில் இணைந்து நடித்துள்ளார். அவரின் திறமையான நடிப்பு கதைக்கு இன்னும் ஆழத்தையும் தீவிரத்தையும் சேர்த்துள்ளது. கூடுதலாக, நடிகர்கள் அனுராக் கஷ்யப் மற்றும் கிஷோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தின் முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்புகள் இப்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் படத்தை டிசம்பர் 20, 2024 அன்று வெளியிட இலக்கு வைத்துள்ளனர்.
'விடுதலை பார்ட் 2' படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கவுதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், பவானி ஸ்ரீ, வின்சென்ட் அசோகன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
PVCU3 இன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ 'மஹாகாளி'
பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் திரைப்படமாக பிரசாந்த் வர்மா எழுதி இயக்கிய ஹனுமான் பான் இந்தியா பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. PVCU3 சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ 3வது திரைப்படத்தை அறிவித்துள்ளார். RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் இப்படத்தை தயாரிக்க, RK துக்கல் வழங்குகிறார். RKD Studios இந்தியாவின் முன்னணி மோஷன் பிக்சர் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கையகப்படுத்தும் நிறுவனமாகும், இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பில் களமிறங்குகிறது. கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் வர்மா எழுத, பெண் இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லுரு இப்படத்தை இயக்குகிறார். ஆன்மீகம் மற்றும் புராணங்களை சமகால சிக்கல்களுடன் கலந்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருந்து வரும் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் மற்றும் இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் அசத்தலான சூப்பர் ஹீரோவாகும்.
இப்படத்திற்கு வங்காளத்தின் வளமான கலாச்சார பின்னணியில் அமைக்கப்பட்ட "மஹாகாளி" என்ற தலைப்பை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த சக்திவாய்ந்த மற்றும் சமூகம் சம்பந்தப்பட்ட திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரே மாதிரியான கருத்துக்களை உடைத்து, அழகு தரத்தை மறுவரையறை செய்து, முக்கிய பாத்திரத்தில் கருமை நிற நடிகையால் காளி தேவியின் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சித்தரிப்பைக் கொண்டிருக்கும்.
காளி தேவியை அதிகமாக வழிபடும் பிராந்தியமான வங்காளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், அந்நிலத்தின் சாரத்தையும் அதன் ஆழமான வேரூன்றிய மரபுகளையும், அதிர்ச்சியூட்டும் காட்சியமைப்புகள் மற்றும் உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் கதையுடன் படம்பிடிக்கும்.
அறிவிப்பு போஸ்டரில் ஒரு பெண், புலியின் தலையை மெதுவாகத் தொடும் காட்சி இடம்பெற்றுள்ளது. பின்புலத்தில் குடிசைகளும் கடைகளும் தெரிகின்றன, மக்கள் பீதியில் ஓடுகிறார்கள். ஒரு பெர்ரிஸ் சக்கரம் தீப்பிழம்புகளில் காணப்படுகிறது. பெங்காலி எழுத்துருவில் வடிவமைக்கப்பட்ட டைட்டில் போஸ்டர் நடுவில் வைரம் போன்ற வடிவத்தைக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, அந்த பிரம்மாண்டத்தில், போஸ்டர் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது.
காளி தேவியின் கடுமையான மற்றும் இரக்க குணத்தால் ஈர்க்கப்பட்ட, அதிகாரம், நம்பிக்கை ஆகியவற்றின் காவியப் பயணமாக "மஹாகாளி" இருக்கும். இத்திரைப்படம் அவரது தெய்வீக சக்தியை மட்டுமல்ல, பாகுபாடு, உள் வலிமை மற்றும் ஒருவரின் அடையாளத்தை மீட்டெடுப்பது போன்ற கருப்பொருள்களையும் தொடும், இது பெரும்பாலும் கருமையான சருமத்தின் மதிப்பை மறுவரை செய்யும்.
இந்தியப் பெண்களின் பன்முகத்தன்மை மற்றும் அவர்களின் அடங்காத மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திரைப்படம், ஒருவரின் அடையாளத்தை முழுமையாகத் தழுவுவதில் உள்ள வலிமையை எடுத்துக்காட்டுகிறது. சமூக நெறிமுறைகளுக்கு சவால் விடும் வகையிலும், ஒதுக்கப்பட்ட அல்லது குறைவான பிரதிநிதித்துவம் பெற்றவர்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகச் செயல்படும் வகையிலும் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இணைந்து பணியாற்றுகிறார்கள். ஸ்மரன் சாய் இசையமைக்க, ஸ்ரீ நாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். படத்தின் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
“மஹாகாளி” திரைப்படத்தை, இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஐமேக்ஸ் 3டியில் கண்டுகளிக்கலாம். இந்த யுனிவர்ஸில் “ஹனுமான்” சமீபத்தில் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
"மகாகாளி" வெறும் திரைப்படம் அல்ல. இது உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை நோக்கிய இயக்கம்!
தெருக்கூத்துக்கலையை மையப்படுத்தி ஒரு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’
வடலூர் J சுதா ராஜலட்சுமி தயாரிப்பில் ஜனா ஜாய் மூவீஸ் மற்றும் குழுவின் சார்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யமாலா’. ‘பீச்சாங்கை’ புகழ் ஆர்.எஸ்.கார்த்தி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். எண்பதுகளில் நடக்கும் விதமாக தெருக்கூத்து கலையை மையப்படுத்தி அதன் ஊடாக ஒரு அழகான காதல் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவான் நடிகர்களான பி.யு.சின்னப்பா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றோர் நடித்து பிரபலமான ஆர்யமாலா-காத்தவராயன் என்கிற புராண நாடகத்தை பின்னணியாக கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஆர்யமாலா என்கிற டைட்டில் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மனிஷா ஜித். இவர் சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் அவரது மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் விந்தை, பிழை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த அனுபவம் கொண்டவர்.
பீச்சாங்கை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆர்.எஸ்.கார்த்திக் இந்தப்படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார். மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி இந்தப்படத்தில் அத்திப்பூவப்போல என்கிற பாடலை பாடியுள்ளார். அவர் கடைசியாக பாடல் பாடியது இந்தப்படத்திற்காகத்தான்.
வரும் அக்-18ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தநிலையில் இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், தாங்கள் மேற்கொள்ள இருக்கும் வித்தியாசமான புரமோஷன் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார் நாயன் ஆர்.எஸ்.கார்த்தி.
“இந்த படத்தில் காதல் என்பது வெறும் பேச்சாக இல்லாமல் கண்கள் பரிமாற்றத்திலேயே நடக்கும். அது தான் இந்த படத்தின் சிறப்பு. காத்தவராயன் வேஷம் போடும் தெருக்கூத்து கலைஞனாக இதில் நடித்துள்ளேன். ஆச்சரியம் என்னவென்றால் படத்தின் இடைவேளைக்கு பிறகு தான் நான் என்ட்ரி ஆவேன். முதல் பாதி முழுவதும் கதாநாயகியை சுற்றி நிகழும் நிகழ்வுகளும் இடைவேளைக்கு பின் அவரது எண்ணங்களுக்கு உணர்வுகளுக்கு ஆறுதலாக வடிகாலாக எனது கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. எனக்கு தெருக்கூத்து கலைஞராக வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பிலேயே இருந்தது. அது மட்டுமல்ல சில வீதி நாடகங்கள் மூலமாக தெருக்கூத்தில் நடித்த அனுபவமும் இருந்தது. எனது கதாபாத்திரம் இடைவேளைக்கு பின் தான் வருகிறது என்றாலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கதை வலுவாக இருந்ததாலும் ஒப்புக்கொண்டு நடித்தேன்.
படப்பிடிப்பு சமயத்தில் தான் படத்திற்காக பணியாற்ற வந்த தெருக்கூத்து கலைஞர்களிடம் அவர்களுடைய நடை உடை பாவனைகள் குறித்து கொஞ்சம் முழுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதுமட்டுமல்ல இந்த படத்தில் கூத்து கலைஞராக மறைந்த சிவசங்கர் மாஸ்டரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. கிராமங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியபோது குறிப்பாக இந்த ஆர்யமாலா நாடகத்தை நாங்கள் நிஜமாகவே நடத்துகிறோம் என்பதாகவே உணர்ந்து அந்த கிராமத்து மக்கள் அனைவருமே பார்வையாளர்களாக வந்து அமர்ந்து தினசரி எங்களை உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சியாகவும் ஆச்சரியம் தருவதாகவும் இருந்தது.
அக்டோபர் 18ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதால் இதன் புரமோஷனின் ஒரு பகுதியாக, அக்டோபர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு நான் நடித்துள்ள அதே கூத்துக் கலைஞன் கெட்டப்பிலேயே சென்று இந்த படத்தை பற்றி மக்களுக்கு விளம்பரப்படுத்த முடிவு செய்து இருக்கிறேன். குறிப்பாக அந்த சமயத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என்பதால் அந்த படம் ஓடும் திரையரங்குகள் முன்பாக கூடும் ரசிகர்களிடம் எங்களது ‘ஆர்யமாலா’ படத்தை அறிமுகப்படுத்தும்போது இந்த படம் குறித்து ரசிகர்களுக்கு அழகாக கொண்டு செல்ல முடியும் என நினைக்கிறேன்” என்கிறார்.
பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது. விரைவில் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டைட்டிலுக்கான மோசன் போஸ்டர்... என படத்தைப் பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே படத்தின் நாயகனான நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்திற்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டது என்பதும், அதில் நடிகர் சூர்யாவின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால்.. அந்த காணொளி நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’
நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற சில கிரிமினல் சம்பவங்களின் பின்னணியில், எமோஷனல் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது 'யாத்ரீகன்'. தனலட்சுமி கோபாலன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் மாளவிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் கூறும்போது, “நாங்கள் திரைப்படங்களைத் தயாரிக்க முடிவு செய்தபோது, நல்ல தரமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இயக்குநர் பிரேம் நசீர் 'யாத்ரீகன்' கதையை சொன்னபோது நாங்கள் எதிர்பார்த்தபடியே இருந்தது. மேலும் அவர் இயக்குநர்கள் சீனு ராமசாமி, முத்தையா மற்றும் எஸ்.ஆர். பிரபாகரன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களிடம் பணி புரிந்தவர். நல்ல தரமான திரைப்படங்களை இயக்கி, உறுதியளித்தபடி சரியான நேரத்தில் இறுதி வெளியீட்டை கொடுப்பதில் இந்த இயக்குநர்கள் பெயர் பெற்றவர்கள். பிரேமுடன் பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் 'யாத்ரீகன்' எங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத படமாக இருக்கும்" என்றார்.
இயக்குநர் பிரேம் நசீர் பேசுகையில், “தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி மற்றும் ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் திரைப்படங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்களுக்காக ஒரு படத்தை இயக்க என்னைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி. 'யாத்ரீகன்' திரைப்படம் ஒரு travel vlog அடிப்படையிலான திரைப்படம். இரண்டு வெவ்வேறு நபர்கள் மற்றும் அவர்களின் வெவ்வேறு சித்தாந்தங்களைப் பற்றியது. ஒரு மர்மமான நிகழ்வு அவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு பிணைக்கிறது என்பது படத்தின் மையக்கரு. இந்தக் கதையின் நாயகன் துறுதுறுவென எனர்ஜியுடன் தேவை எனும்போது பிக் பாஸ் தர்ஷன் அதற்கு சரியான தேர்வாக இருந்தார். ஏனெனில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே அவரைப் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் மாளவிகா கதாநாயகியாக நடிக்கிறார். சமீபகாலங்களில் நடிகர் காளி வெங்கட் தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரம் மூலம் அந்தப் படத்தை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார். என்னைப் போன்ற ஆர்வமுள்ள இயக்குநர்கள் அவருக்கான கதைகளை எழுதத் தொடங்கியதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் விரைவில் நடிகர் நாசர் சார் போன்ற பன்முகம் கொண்ட நடிகராகப் போகிறார். அவர் இந்தப் படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
அக்டோபர் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படம் 'வாழை'!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வரும் அக்டோபர் 11 ஆம் தேதி முதல், இயக்குநர் மாரி செல்வராஜின் ப்ளாக்பஸ்டர் வெற்றித்திரைப்படமான “வாழை” திரைப்படத்தை ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம், இயக்குநர் மாரி செல்வராஜின் மிகச்சிறந்த படைப்பாக அனைவராலும் கொண்டாடப்பட்டது.
இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இதயத்தைத் தொடும் ஒரு அற்புதமான படைப்பாக உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது.
தன் விதவை தாய் (ஜானகி) மற்றும் அவரது மூத்த சகோதரி வேம்பு (திவ்யா துரைசாமி) ஆகியோருடன் வசிக்கும் இளம் சிறுவன் சிவனைந்தனின் (பொன்வேல்) வாழ்க்கையைச் சுற்றி, இப்படத்தின் கதை சுழல்கிறது.
சிவனைந்தனின் தாய் மற்றும் சகோதரி இருவரும் வாழை வயல்களில் கூலிகளாக கடுமையாக உழைக்கிறார்கள், மேலும் சிறுவன் சிவனைந்தனும் பள்ளி விடுமுறை தினங்களில், அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.
ஒரு நாள், சிவனைந்தனின் தாயார் நோய்வாய்ப்பட்டு, அவருக்குப் பதிலாக தனது இளம் மகனை வேலைக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் வாழை.
இப்படத்தில் குழந்தை நட்சத்திரமான பொன்வேல் கதாநாயகனாக நடித்துள்ளார் மற்றும் நடிகர்கள் நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் கலையரசன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர் மற்றும் இசை சந்தோஷ் நாராயணன். கலை இயக்கம் குமார் கங்கப்பன் மற்றும் படத்தொகுப்பு சூர்யா பிரதாமன் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.
முழுக்க முழுக்க திருநெல்வேலியில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே, அப்பகுதி மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை, ஆழமாக பிரதிபலிக்கிறது.
நடிகர் K C பிரபாத் அவர்களுக்கு படப்பிடிப்பின் போது மாரடைப்பு!
தயாரிப்பாளர், நடிகர் K C பிரபாத், யாமம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். படக்குழு அவரை உடனடியாக மருத்துவமைனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் உடல்நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார்.
K C பிரபாத் பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த்துறையில் தயாரிப்பாளராக கால்பதித்தார். அப்படத்தில் வில்லன் பாத்திரத்திலும் நடிகராக கலக்கியிருந்தார். தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரகன் போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கருப்பு பெட்டி எனும் திரைப்படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார்.
நடிகர் K C பிரபாத் “யாமம்” எனும் திரைப்படத்தில், முக்கிய பாத்திரத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் இரவுபடப்பிடிப்பில் கலந்துகொண்ட போது, திடீரென இதயத்தில் வலி ஏற்பட, அவரை படக்குழு சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யபட்டு, உடல்நலம் தேறி, சிசிச்சை பெற்று வருகிறார்.
நடிகர் K C பிரபாத் முதல் முறை கதாநாயகனாக நடித்துள்ள “கருப்பு பெட்டி” திரைப்படம் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’
நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலருமான அஜித்குமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தொழில்முறை ரேஸிங் டீமை அறிமுகப்படுத்தினார். ஒரு வருடத்திற்கு முன்பாக அவரது சுற்றுலா நிறுவனமான வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைட் ஏற்பாடு செய்ததற்காக மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஐலேண்ட் ரம்பிள் என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று நிகழ்வில், ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் தீவுகளில் பயணித்தது அனைவரையும் ஈர்த்தது.
இந்தியா, ஸ்காட்லாந்து, போர்ச்சுகல், வியட்நாம், தாய்லாந்து, அரேபியன் ஒடிஸி (யுஏஇ, ஓமன்), பெஸ்ட் ஆஃப் ஆல்ப்ஸ் (ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி) போன்ற சிலிர்ப்பான நாடு கடந்த பயணங்களையும் அஜித்தின் வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours வழி நடத்தியுள்ளது. ஒவ்வொரு பயணமும் கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தில் ரைடர்ஸ் இயற்கைக்காட்சிகள் மற்றும் இதுவரை பார்க்காத இடங்கள் என இரண்டிலும் சிறந்த அனுபவத்தை பெற உறுதி செய்கிறது. மோட்டார் சைக்கிள் பயணம் மட்டுமல்லாது கூடுதலாக கார் மற்றும் சைக்கிள் பயணங்களுடன் வீனஸ் மோட்டார் சைக்கிள் Tours ஒவ்வொரு வகையான பயணிகளுக்கும் ஒரு சாகசத்தை உறுதி செய்கிறது.
அந்தமானின் ரம்பிள் தீவில் ஹார்லி-டேவிட்சன் நிகழ்வில் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனத்தின் இந்த சமீபத்திய முயற்சி சாதனை படைத்தது. ஹார்லி-டேவிட்சன் மெரினா பிரிவு, சென்னை மற்றும் ஹார்லி-டேவிட்சன் பஞ்சாரா பிரிவு, ஹைதராபாத் ஆகியவற்றுடன் இணைந்து வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours இந்த நிகழ்வை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நடத்தியது. ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் மூலம் போர்ட் பிளேர் வழியாக சவாரி செய்து, மறக்க முடியாத பயணத்தை உருவாக்கியது.
இந்த ரம்பிள் தீவு பயணத்தின் த்ரில்லோடு அந்தமான் தீவுகளின் கண்கொள்ளா அழகையும் ரைடர்களுக்குக் கொடுத்து வருகிறது வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours. இந்த வரலாற்று நிகழ்வு எல்லைகளைக் கடந்து புதிய பயண அனுபவங்களை உருவாக்குகிறது.
இந்த நிகழ்வு வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது மட்டுமல்லாது, இந்தியாவின் வளர்ந்து வரும் மோட்டார் சைக்கிள் சுற்றுலா துறையின் திறனையும் எடுத்துக்காட்டுகிறது.
அக்டோபர் 18 முதல் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரின் உலகளாவிய ப்ரீமியர் காட்சி
இந்த ஒரிஜினல் தமிழ் தொடரானது, கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் (இது ஒரு ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
இந்தத் தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்த முதல் தமிழ் டார்க்-ஹூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் , 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவையில் பிரத்யோகமாக அக்டோபர் 18 முதல் தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது,
மும்பை, இந்தியா, 07, 2024 — இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, அதன் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரான ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்தது . கல்யாண் சுப்ரமணியன் (ஒரு ஸ்டோன்பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ்(Karthik Subbaraj), தொகுத்த இந்த தமிழ் ஒரிஜினல் தொடர் அசோக் வீரப்பன், பரத் முரளீதரன் (Ashok Veerappan, Bharath Muralidharan) மற்றும் கமலா அல்கெமிஸ் இயக்கத்தில், கமலா ஆல்கெமிஸ் & திவாகர் கமல் (Kamala Alchemis & Dhivakar Kamal) ஆகியோரால் உருவாக்கப்பட்டது. எதிர் வரவிருக்கும் இந்த டார்க் ஹ்யூமர் த்ரில்லரில் நவீன் சாந்ரா (Naveen Chandra), நந்தா (Nandha), மனோஜ் பாரதிராஜா (Manoj Bharathiraja), முத்துக்குமார் (Muthukumar), ஸ்ரீந்தா(Srinda), ஸ்ரீஜித் ரவி (Sreejith Ravi), சம்ரித் (Samrith), சூர்யா ராகவேஷ்வர் (Surya ragaveshwar), சூர்யகுமார்,(Surya kumar), தருண் மற்றும் சாஷா பரேன் (Tarun and Sasha Bharen) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளதை ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டிப்போடவிருக்கும் இந்த திரில்லர் பெருமையோடு அறிவிக்கிறது. மர்மங்கள் மற்றும் சூழ்ச்சிகள் நிறைந்த ஒன்பது எபிசோடுகளுடனான இந்த சீரீஸ் இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழிலும் மற்றும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டும் அக்டோபர் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யோகமாக ஸ்ட்ரீம் செய்யப்படவிருக்கிறது. இந்த ஒன்பது-எபிசோடுகளைக் கொண்ட த்ரில்லர் பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு வெறும் ₹1499 செலுத்தி, சேமிப்பு, வசதி மற்றும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவித்து மகிழலாம்
2000 ஆண்டு கால மத்தியில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட இந்த இயற்கைக்கு மாறான அதேசமயம் மனதைக் கவரும் டார்க் ஹ்யூமர் திரில்லர் காலம் நட்பை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடுகிறது. தங்களின் கவனக்குறைவால் ஒரு புதிரான சூழலில் சிக்கி அதிலிருந்து விடுபட போராடும் கில்லி, இறை, சாண்டி மற்றும் பாலா ஆகிய நான்கு பள்ளி நண்பர்களின் சாகச வாழ்க்கைப் பயணத்தை இது பின்தொடருகிறது. சவால் மிகுந்த சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் வழி நெடுக தவிர்க்க முடியாத அடையாளங்களை விட்டு, செல்லும் வழியில் கேள்விக்குரிய தேர்வுகளை மேற்கொண்டு லாகவமாக கடந்து செல்லும் அவர்களின் இந்தப் பயணம் இறுதியாக எதிர்பாராத விதமாக தன்னைத் தானே அறிந்து உணரும் பாதைக்கு அவர்களை இட்டுச்செல்கிறது.
“பிரைம் வீடியோவில் நாங்கள், ஆழமற்ற மேற்போக்காக சொல்லப்படும் கதைகளுக்கும் அப்பால் சென்று எங்கள் பார்வையாளர்களின் அனைத்து அனைத்து உணர்வுகளையும் துல்லியமாகத் தாக்கி அவர்களின் ஆர்வைத்தைத் தூண்டும் அதிகாரபூர்வமான கதைகளை வழங்க உறுதிபூண்டுள்ளோம். திரைப்படத்தின் இறுதியில் நன்றி தெரிவிக்கும் காட்சிக்குப் பிறகும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் வகையிலான பலதரப்பட்ட வாழ்க்கைச் சூழலை கச்சிதமாகக் காட்சிப்படுத்தும் கதைகளை ஊக்குவித்து அவற்றை வழங்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் ,” என்று திரு நிகில் மதோக், தலைவர் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் இந்தியா, கூறினார். அவர் மேலும் கூறியதாவது, “பிராந்தியம் சார்ந்த கதைகளை குறிப்பாக தமிழ் உள்ளடக்கங்களை சொல்வதில் எங்களுக்கிருந்த தீராத ஆர்வமே சமீபத்தில் சுஷால்- தி வோர்டெக்ஸ், வதந்தி ஃபேபிள் ஆஃப் வேலோனி மற்றும் இன்ஸ்பெக்டர் ரிஷி ஆகியவற்றின் பிரமாண்டமான வெற்றிக்கு வழிவகுத்து எங்களின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டது. கலாச்சார ரீதியாக ஆழம் வரை ஊடுருவிசென்று வேரூன்றிய இந்தக் கதைகள், இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பார்வையாளர்களின் மனதோடு ஒத்திசைந்து எதிரொலிக்கும் வளமான மற்றும் அழுத்தமான கலைப்படைப்புக்களை உருவாக்க எங்களுக்கு உதவியுள்ளன. எங்களின் சமீபத்திய தொடரான ஸ்னேக்ஸ் & லேடர்ஸ் மூலம், எங்கள் தொகுப்புக்களை மேலும் விரிவடையச் செய்து எங்கள் உள்ளடக்க இயக்க சுழற்சியை வளமாக்கிக் கொள்வதில் நாங்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளோம்”
இந்தத் தொடரை தொகுத்து நிர்வகித்த கார்த்திக் சுப்பராஜ், கூறினார் “ஸ்னேக்ஸ் & லேடர்ஸ் இல் பணிபுரிந்ததில் நான் முழுமையான மகிழ்ச்சியை உணர்ந்தேன். மற்றும் இந்த செயல்திட்டத்தில் பிரைம் வீடியோவுடன் கூட்டிணைந்து பணிபுரிய கிடைத்த வாய்ப்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த நான்கு நண்பர்களின் கதைக்கு உயிரூட்டிய அனுபவம் நம்பவே முடியாத அளவு உற்சாக்கத்தை அளித்தது. இந்தத் தொடரின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பதின்பருவ வயதினரின் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் தனித்துவம் மிக்க ஆளுமை மற்றும் சிக்கலான உறவுகளை வெளிப்படுத்துகிறது. அவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் மர்மத்தை விடுவிக்க முயற்ச்சிக்கும் அவர்களின் இந்தப் பயணம் பார்வையாளர்களை தொடக்கத்திலிருந்து இறுதி வரை கவர்ந்திழுத்து கட்டிப்போடும்நட்பின் உணர்வு பூர்வமான நுணுக்கங்கள், தனிநபர் வளர்ச்சி மற்றும் பார்வையாளர்காலோடு ஒத்திசைந்து எதிரொலிக்கும் அர்த்தமுள்ள உணர்ச்சிப் பிணைப்புகள் மற்றும் பாடங்கள் ஆகியவற்றின் நுணுக்கங்களை தூண்டுவதோடு பொழுதுபோக்காகவும் இருக்கக் கூடிய ஒரு கதையை உருவாக்குவதை எங்கள் கிரியிலாக்காக்க் கொண்டிருந்தோம். . பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்தத் தொடர் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும் என்று நான் நம்புகிறேன்”.
- உலக செய்திகள்
- |
- சினிமா