சற்று முன்

பிரைம் வீடியோ வெளியிட்ட ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் டிரெய்லர்   |    வெற்றிமாறனின் தலைசிறந்த இயக்கம் 'விடுதலை பார்ட்2' பட டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்!   |    PVCU3 இன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ 'மஹாகாளி'   |    தெருக்கூத்துக்கலையை மையப்படுத்தி ஒரு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’   |    பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’   |    அக்டோபர் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படம் 'வாழை'!   |    நடிகர் K C பிரபாத் அவர்களுக்கு படப்பிடிப்பின் போது மாரடைப்பு!   |    உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’   |    அக்டோபர் 18 முதல் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரின் உலகளாவிய ப்ரீமியர் காட்சி   |    பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா   |    'பிளாக்’ படம் குறித்து சஸ்பென்ஸை உடைத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு   |    காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |   

சினிமா செய்திகள்

திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!
Updated on : 17 September 2024

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திகில் ஹாரர் கிளாசிக்கின்  இரண்டாம் பாகமான  ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம்,  வரும் செப்டம்பர் 27 அன்று வெற்றிகரமாக ZEE5 இல் பிரத்தியேகமாகத் தொடர்ந்து ஸ்ட்ரீமாகவுள்ளது.



 



பி.டி.ஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’.



 



இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான, ZEE5 தென்னிந்தியாவில் உள்ள பார்வையாளர்களைக் கவரும் வகையில், தொடர்ச்சியாகப் பல அற்புதமான படைப்புகளை வழங்கி வருகிறது.  சமீபத்திய வெளியீடுகளான 'ரகுதாத்தா', 'நுனக்குழி' உள்ளிட்ட அசத்தலான படைப்புகளை அடுத்து,  இந்த ஆண்டின் அதி பயங்கரமான ஹாரர் பிளாக்பஸ்டர் "டிமான்ட்டி காலனி 2" படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  வரும் செப்டம்பர் 27 முதல் ZEE5 இல்  "டிமான்ட்டி காலனி 2" படத்தைக் கண்டுகளிக்கலாம். சஸ்பென்ஸ் மாஸ்டர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்  இந்தப் படம், ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி,  ரசிகர்களை மிரட்டிய நிலையில், தற்போது டிஜிட்டலில்  ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.  அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில், மிக மாறுபட்ட திரைக்கதையில்,  பார்வையாளர்களை இருக்கைகளின் நுனியில் நிறுத்திய, 'டிமான்ட்டி காலனி 2', ஒரு பயங்கரமான தலைசிறந்த ஹாரர் படைப்பாகக் கொண்டாடப்பட்டது.  இப்படம் திரையரங்குகளில் 55 கோடிக்கு மேல் வசூலித்து,  தமிழ் சினிமா வரலாற்றில் பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களின் வரிசையில் இடம்பெற்றது. செப்டம்பர் 27 முதல் ZEE5 இல் மட்டும், லார்ட் டிமான்டேவின் வருகையைக்  கண்டுகளிக்கத் தயாராகுங்கள்!



 



ZEE5 இன் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், 



'டிமான்ட்டி காலனி 2' படத்தினை எங்கள் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், குறிப்பாக ZEE5 இல் தமிழ் மற்றும் தென்னிந்திய உள்ளடக்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த திரைப்படம் முந்தைய படத்தின் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, முதல் படத்தினை விடவும் ஒரு மிரட்டலான ஹாரர் அனுபவத்தை வழங்குகிறது. இப்படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 



 



டிமான்ட்டி காலனி 2 படத்தின் இயக்குநர் ஆர். அஜய் ஞானமுத்து கூறுகையில்.., 



திரையரங்குகளில் பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், இப்போது ZEE5 இல் பெரிய அளவிலான பார்வையாளர்களே சென்றடைவது மகிழ்ச்சியளிக்கிறது. ZEE5 மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்த அனுபவத்தை விரிவுபடுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய ZEE5 நம்பமுடியாத தளத்தை வழங்குகிறது.  இந்த பரந்த ரீச் எங்கள் படத்தை, இன்னும் கூடுதலான திகில் ஆர்வலர்களுக்குக் கொண்டு சேர்க்கும், மேலும் அனைவரும் தங்கள் வீடுகளில் அமர்ந்து, இந்த அட்டகாசமான அனுபவத்தைப் பெறலாம். ரசிகர்களின் வரவேற்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். 



 



டிமான்ட்டி காலனி 2 படத்தின் முன்னணி நடிகரான அருள்நிதி கூறுகையில்.., 



“டிமான்ட்டி காலனி 2 படத்தில், இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, முதல் படத்திலிருந்த ஸ்ரீனியின் கதாபாத்திரம் இந்த பாகத்திலும் தொடர்கிறது.  மேலும்  ஸ்டைலிஷான மற்றும் அலட்சியமாக இருக்கும் ரகு எனும் இன்னொரு  பாத்திரத்தில் நடித்தது, மகிழ்ச்சி. இந்த இரண்டு வித்தியாசமான பாத்திரங்களில் நடித்தது, மிக சவாலாக இருந்தது.   திரையரங்குகளில் எங்களுக்குக் கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ், மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ZEE5 மூலம்  இந்தக் கதாபாத்திரங்களின் ஆழத்தையும் மாறுபாட்டையும் பரந்த பார்வையாளர்கள் அனுபவிப்பதைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா