சற்று முன்

'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |    32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகும் நேச்சுரல் ஸ்டார் நானி!   |    'சுப்ரமண்யா', படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!   |    வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்பே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படம்   |    ஆண்ட்ரியாவின் இந்த பதிலால் ஏமாற்றம் அடைந்த நிருபர்கள்!   |    ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது   |    பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ள துருவா சர்ஜாவின் 'மார்டின்'   |    உலகமெங்கும் திரை ரசிகர்களிடையே பெரும் அலையைக் கிளப்பியுள்ள 'மனோரதங்கள்'   |    GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு 'பாம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    'கூலி' படத்திற்காக தற்காப்பு கலைக்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஸ்ருதிஹாசன்!   |    100 கோடி ரூபாய் வசூலை கடந்த 'தங்கலான்'   |    டொவினோ தாமஸ் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில்  தோன்றும் 'ஏஆர்எம்' பட டிரெய்லர்   |   

சினிமா செய்திகள்

கடுமையாக உழைத்த தங்கலான்' பட குழுவினருக்கு விருந்து கொடுத்து நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்
Updated on : 28 August 2024

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'தங்கலான்'. சீயான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்து  பாராட்டுகிறார்கள். இந்த தருணத்தில் சீயான் விக்ரம் 'தங்கலான்' படத்தின் வெற்றிக்காக படத்தில் கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி  இயக்குநர்கள், கலை இயக்குநர்கள் , அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். 



 



இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சீயான் விக்ரம் வரவேற்றார். பின்னர் படத்தில் கடுமையாக உழைத்ததற்காக அங்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் தம்முடைய நன்றியை தெரிவித்தார் சீயான் விக்ரம். இதற்கு முன் 'தங்கலான்' படக்குழுவினருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை சீயான் விக்ரம் அவர்களிடமே கேட்டு அறிந்து தேர்வு செய்து, அந்த உணவு வகைகளை பிரபலமான சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜிடம் வழங்கியிருந்தார். அவருடைய கைப்பக்குவத்தில் உருவான சிறப்பு விருந்தினை தன்னுடைய நன்றியினை தெரிவிக்கும் வகையில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது கையாலேயே உணவினை பரிமாறினார் சீயான் விக்ரம்.



 



சீயான் விக்ரமின் இந்த செயலால் படத்தில் பணியாற்றிய அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக தொழிலாளர் குடும்ப உறுப்பினர்கள் சீயான் விக்ரமுடன் பேசி மகிழ்ந்ததுடன், செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். 



 



இந்த நிகழ்வில் சீயான் விக்ரமுடன் 'தங்கலான்' படத்தில் நடித்த நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி, நடிகர் பசுபதி, படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் திருமதி. நேகா ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தந்தை கே. ஈஸ்வரன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்ஜெயன், இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



 





 



பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் வெற்றி பெற செய்தமைக்காக ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிப்பது வழக்கம்… ஆனால், சீயான் விக்ரம் 'தங்கலான்' பட வெற்றிக்காக அப்படத்தில் கடுமையாக உழைத்த அனைவருக்கும் மற்றும்  அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, விருந்தோம்பல் செய்து, நன்றி தெரிவித்தது, அனைவரது கவனத்தையும் கவர்ந்ததுடன் ஆச்சரியத்தையும் அளித்தது!



 



சீயான் விக்ரம் அளித்த விருந்து, திருமண விருந்தை விட தடபுடலாக சிறப்பாக இருந்தது என வருகை தந்த அனைவரும் உண்டு, மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் தங்கலானுக்கு ( சீயான் விக்ரம் ) நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா