சற்று முன்
சினிமா செய்திகள்
'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின், அதிரடியான டீசரை வெளியிட்டுள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
Updated on : 27 August 2024
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், 'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின், அதிரடியான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உருவாக்கியுள்ள இந்த சீரிஸில் நடிகர்கள் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் SN அருண்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் K கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 7 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி) வெளியாகவுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.
சமீபத்திய செய்திகள்
'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படத்தை, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள, தளபதி விஜய்யின் “கோட்” படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
ரோமியோ பிக்சர்ஸ் உடன், படக்குழுவினர் இணைந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை வெளியிடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காக்கா முட்டை, விசாரணை முதலாக பல வெற்றிப்படங்களை வழங்கிய வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது.
முன்னணி நட்சத்திர நடிகர் விமல், முற்றிலும் மாறுபட்ட வேடத்தில், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
'கன்னிமாடம்' மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி அருமையான கமர்ஷியல் திரைப்படமாக, அனைவரும் ரசிக்கும் வகையில், அழுத்தமான படைப்பாக, சார் படத்தை உருவாக்கியுள்ளார்.
போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ் ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், இப்படத்தை இம்மாத இறுதிக்குள் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. பட வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!
நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்து 60 வருடங்கள் பாரம்பரியம் மிக்க சுரேஷ் புரொடக்ஷன்ஸின் ஒரு அங்கமான ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தனது முதல் அறிமுகப் படமான 'காந்தா' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் ஸ்பிரிட் மீடியாவின் சினிமா தொடக்கத்திற்கு அற்புதமான விஷயம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
படம் பற்றி நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி தெரிவித்திருப்பதாவது,
“'காந்தா'வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. தரமான சினிமாவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்பிரிட் மீடியாவில் எங்களின் பார்வையுடன் சரியாக ஒத்துப்போகிறது. சுரேஷ் புரொடக்ஷன்ஸின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், ஸ்பிரிட் மீடியாவுடன் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கவும் சிறந்த படமாக 'காந்தா' இருக்கும்" என்றார்.
வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனர்- நடிகர் துல்கர் சல்மான், “ஸ்பிரிட் மீடியாவுடன் இந்த அற்புதமான பயணத்தை 'காந்தா'வுடன் தொடங்குவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது மனித உணர்வுகளின் ஆழத்தைப் படம் பிடித்து காட்டும் ஒரு அழகான கதை. நடிப்புத் திறனை வெளிக்காட்ட இந்தப் படம் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு" என்றார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் கூறுகையில், "இதுபோன்ற திறமையான தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு பெருமை. 'காந்தா' மூலம், பார்வையாளர்களை கடந்த காலத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். சமகால உணர்வுகளை எதிரொலிக்கும் கதையாக இது இருக்கும்" என்றார்.
சுரேஷ் புரொடக்ஷன்ஸின் வளமான பாரம்பரியம், கலைசார்ந்த கதை சொல்லல், புதுமையான திரைப்படத் தயாரிப்பு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக 'காந்தா' படம் உள்ளது. இந்த புதிய சினிமா பயணத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் வெங்கடேஷ் டகுபதி கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் 'காந்தா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘ரகுதாத்தா’ இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப்பேசும் ஒரு அற்புதமான படம், சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகுதாத்தா ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று செப்டம்பர் 13, 2024 அன்று பிளாக்பஸ்டர் தமிழ் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான 'ரகுதாத்தா'வின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது. புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பொழுதுபோக்கு டிராமா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
சமூகப் பிரச்சினைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், மெலிதான நகைச்சுவையுடனும் அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தைச் சொல்கிறது ‘ரகுதாத்தா’. செப்டம்பர் 13 முதல் ZEE5 இல் பார்வையாளர்கள் ‘ரகுதாத்தா’வை பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யலாம். ரகுதாத்தா தமிழிலும், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும்.
வள்ளுவன்பேட்டை என்ற அழகிய கிராமத்தில் ‘ரகுதாத்தா’ கதை விரிகிறது, அங்கு கயல்விழி (கீர்த்தி சுரேஷ் நடித்த) மரியாதைக்குரிய வங்கி ஊழியராக பணிபுரிகிறார், இந்தி திணிப்புக்கு எதிரான தனது நிலைப்பாட்டிற்காக, மக்களிடம் பிரபலமாக இருக்கிறார். தன் முற்போக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் பொறியியலாளர் தமிழ்செல்வனை (ரவீந்திர விஜய்), திருமணம் செய்து கொள்ள அவள் ஒப்புக்கொள்கிறபோது, அவளுடைய வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கிறது. ஒரு திடுக்கிடும் ரகசியம் தெரியவரும் வேளையில், கயல் தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி வருகிறது, அவள் எதிர்த்துப் போராடிய இந்தியை கற்க வேண்டும் மற்றும் பரீட்சை எழுத வேண்டும் எனும் நிலை வருகிறது. இந்நிலையில் கயல் என்ன செய்வாள்? அவளுடைய நீண்டகால நம்பிக்கைகள் அல்லது எதிர்பாராத சமரசம்? எதை நோக்கி செல்வாள். நவீன இந்தியாவில் மொழி அரசியல், பாலினப் பாகுபாடுகள் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகள் பற்றிய சிந்தனையைத் தூண்டும் ஆய்வுக்கு இப்படம் களம் அமைக்கிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில்..,
பெண் சுதந்திரத்தை நம்பும் “கயல்விழியின் கதாபாத்திரத்தில் நடித்த ‘ரகுதாத்தா’ திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான சிறப்பான பயணமாக அமைந்தது. இயக்குநரின் கதையை உயிர்ப்பிப்பது சவாலாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த அட்டகாசமான கதையை ZEE5 இல் காணவுள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது நாங்கள் எடுத்துக்கொண்ட கருப்பொருள்களைச் சுற்றி அர்த்தமுள்ள உரையாடல்களைத் தொடர்ந்து தூண்டும் என்று நம்புகிறேன்.
ஹோம்பாலே பிலிம்ஸின் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறுகையில், "ரகுதாத்தா'வின் உலக டிஜிட்டல் பிரீமியர் காட்சிக்காக ZEE5 உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ZEE5-ன் விரிவான ரசிகர்கள் களம் மற்றும் உணர்வுப்பூர்வமான திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சாதனை, எங்கள் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. 'ரகுதாத்தா' எங்கள் தயாரிப்பில் மிக முக்கியமான திரைப்படமாகும், ஏனெனில் இது முக்கியமான சமூகப் பிரச்சினைகளை உணர்ச்சிப்பூர்வமாகும் அதே நேரத்தில் நகைச்சுவையுடன் உரையாடுகிறது, மேலும் ZEE5 மூலம் உலகம் முழுவதும் வாழும் ரசிகர்கள் 'ரகுதாத்தா' படத்தைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
'ரகுதாத்தா' படத்தின் இயக்குநர் சுமன் குமார், 'ரகுதாத்தா' இப்படத்தை உருவாக்கியது ஒரு அழகான பயணம். இந்தத் திரைப்படம் மொழி அரசியல் மற்றும் பாலினப் பாகுபாடுகள் குறித்து பார்வையாளர்களிடையே அர்த்தமுள்ள உரையாடல்களை ஏற்படுத்தியது மிக மகிழ்ச்சியைத் தந்தது. தமிழ்செல்வனாக நடித்துள்ள ரவீந்திர விஜய் உட்பட ஒட்டுமொத்த நடிகர்களும் இந்த கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையுடையதாக மாற்றுவதில் தங்கள் முழு உழைப்பை வழங்கினர். ZEE5 இல் இப்படத்தை உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் கண்டுகளிக்க உள்ளதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். சமீபத்தில் வெளியான ஃப்ரீ லுக் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில், சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது. நீளமான முடி மற்றும் தாடியுடன், அத்வே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில், போஸ்டரில் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். அவர் கண்களில் தீவிரம் தெரிகிறது. அவர் காட்டில் இருக்கிறார் மற்றும் ஒரு மர்மமான இடத்தின் நுழைவாயிலில் குண்டர்கள் அவரை துரத்துகிறார்கள். மாறுபட்ட வகையிலான இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகின்றன.
“சுப்ரமண்யா” திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் எடிட்டராகவும், சப்த சாகரதாச்சே & சார்லி 777 புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் “சுப்ரமண்யா” பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது.
'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு
கன்னட திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான 'மிஸ்டர் பர்ஃபெக்ட்' ரமேஷ் அரவிந்த் மற்றும் 'கோல்டன் ஸ்டார்' கணேஷ் ஆகிய இருவரும் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும், தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி படமானது.
ரமேஷ் அரவிந்த் மற்றும் கணேஷ் முதன்முறையாக இணையும் இந்த திரைப்படத்திற்கு 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் வர்க்கம் மற்றும் உணர்ச்சிகளை வலிமையுடன் எதிரொலிக்கிறது. இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்தத் திரைப்படம் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கும் வகையிலும் டீசர் அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் ரமேஷ் அரவிந்த் பேசுகையில், '' இயக்குநர் விக்யாத் ஏ. ஆர். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்யாத் 'புஷ்பக விமானம் ' எனும் திரைப்படத்தின் கதையை விவரிக்க வந்தபோது எனக்கு அறிமுகமானார். அந்த தருணத்திலிருந்து அவரின் முன்னேற்றத்தை நான் கண்டு வருகிறேன். அவருடைய கலை உணர்வை பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பில் வெளியான படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசரில் ஒரு நுட்பமான.. உணர்வுபூர்வமான குணம் இருக்கிறது. இறுதியில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதை காணும் போது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது அவருக்கு அருமையான அனுபவமாகவும் இருக்கும்.
'புஷ்பக விமானம்', 'மழைக்கால ராகம்' போன்ற படங்களை தயாரித்த விக்யாத், 'யுவர் சின்சியர்லி ராம்' எனும் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவருக்கு இயக்குநராக இது முதல் பயணம். இதில் நானும், கணேசும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ரமேஷ்- கணேஷ் கூட்டணி.. எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. சாண்டல்வுட்டின் பிரியத்துடன் பழகும் நடிகர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு... இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், எங்களின் ஆழமான நட்புறவு மற்றும் உற்சாகத்தையும் எதிரொலிக்கிறது'' என்றார்.
நடிகர் கணேஷ் பேசுகையில், '' கௌரி பண்டிகை நாளில் இது போன்ற அர்த்தமுள்ள திரைப்படத்தை தொடங்குவது தனி சிறப்பு. இந்த நாளில் எங்களின் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தை அறிமுகப்படுத்துகிறோம். இந்த திரைப்படம் அழகான கதையம்சத்துடன் தயாராகிறது. இந்த திரைப்படம் பார்வையாளர்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டது இந்த திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு காட்சியும் ஒரு அனுபவமாக இருக்கும். அற்புதமான நடிகரும், தொழில்நுட்ப கலைஞருமான ரமேஷ் அரவிந்த் உடன் இணைந்து பணிபுரிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு.. எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இந்த திரைப்படத்தின் மூலம் விக்யாத் இயக்குநராக அறிமுகமாவதையும் நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் விக்யாத்- உணர்வுபூர்வமான இயக்குநர். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என்றார்.
பல வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளரான விக்யாத் இயக்குநராக வேண்டும் என்ற தனது பத்தாண்டு கால கனவை, 'யுவர் சின்சியர்லி ராம்' எனும் இப்படத்தின் மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார். இந்த திரைப்படத்தை இவருடைய சொந்த நிறுவனமான சத்ய ராயலா நிறுவனம் - தி ராயலா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜே. அனூப் சீலின் இசையமைக்கிறார். ஹரிஷ் கொம்மே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
'யுவர் சின்சியர்லி ராம்' படத்தில் முதல் தோற்றம் வெளியாகி குறிப்பிடத்தக்க அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. திறமையான கலைஞர்களுடன் சாண்டல்வுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' உருவாகி வருகிறது. இயக்குநர் விக்யாத் இயக்கத்தில் ரமேஷ் - கணேஷ் கூட்டணியில் தயாராகும் இந்த திரைப்படம்- பெரிய திரையில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'
இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. "ஜீவன் நீயே", எனும் இப்பாடல், மனதை துளைத்து இன்பம் பொங்கச் செய்வதுடன், கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் அசத்துகிறது.
ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர் மற்றும் பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில், படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து காட்டுகிறது.
புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப்பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான வரிகள், காதலின் பல கோணங்களை அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஹரிசரண் மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரின் அற்புதமான குரல்களில், இப்பாடல் மனதை மயக்குகிறது.
துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள 'மார்டின்' படம் கன்னட சினிமாவிலிருந்து வெளிவரும் மிகப்பெரிய அதிரடி முயற்சியாக, இந்திய சினிமாவில், ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையிலான படைப்பாக, உருவாகியுள்ளது. இப்படம் உலகம் முழுக்க 13 மொழிகளில் டப் செய்யப்பட்டு, வெளியாக உள்ளது.
வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய் கே மேத்தா புரொடக்ஷன் இணைந்து “மார்டின்” படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளர். AP அர்ஜூன் இயக்கியுள்ள இப்படத்திற்கு, ஆக்சன் கிங் அர்ஜூன் சர்ஜா கதை, திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா ஹெட்ஜ் ஒளிப்பதிவு செய்ய, KGF புகழ் ரவி பஸ்ரூரின் பரபரப்பான பின்னணி இசையுடன், மணி ஷர்மா இசையமைத்துள்ளார். இப்படம் 11 அக்டோபர் 2024 அன்று கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் பிற சர்வதேச மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
நந்தமுரி குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, நந்தமுரி தாரக ராமராவின் பேரனும், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமுரி மோக்ஷக்ஞ்யா, பரபரப்பான பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். பிரசாந்த் வர்மாவின், ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து, தனது SLV சினிமாஸின் சார்பில் சுதாகர் செருக்குரி மிகப்பெரிய அளவில் தயாரிக்கிறார். எம் தேஜஸ்வினி நந்தமுரி இப்படத்தை வழங்குகிறார். நமது புராணங்களில் உள்ள வரும், ஒரு பழங்கால புராணக்கருவை மையமாக வைத்து, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படம், மோக்ஷக்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மோக்ஷக்யாவை முன்னணி நடிகராக அறிமுகப்படுத்த, பாலகிருஷ்ணாவும் அவரது குடும்பத்தினரும் சரியான ஒரு கதையையும், மிக பிரபலமான இயக்குநரையும் தேடி வந்தனர். அவர்களின் தேடல், இறுதியாக அவர்களை பிரசாந்த் வர்மாவிடம் அழைத்துச் சென்றது, அவர் ஃபேண்டஸி கமர்ஷியல் அம்சங்களுடன் அருமையான பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதில், புகழ் பெற்றவர். பிரசாந்த் வர்மாவின் சமீபத்திய ஹனுமான் திரைப்படம், மிகப்பெரிய பிளாக்பஸ்டராக பான் இந்தியா வெற்றியைப் பெற்றது. அவர் மோக்ஷக்ஞ்யா அறிமுகத்தை மிகச்சிறப்பாக அரங்கேற்றவுள்ளார்.
ஒரு சமூக-ஃபேண்டஸி படத்தில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவுடன் இணைந்து, மோக்ஷக்யாவின் திரை அறிமுகத்தை நிகழ்த்துவது, ரசிகர்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பாலகிருஷ்ணாவின் நம்பிக்கை ஆகும்.
மோக்ஷக்ஞ்யா தனது அறிமுகப் படத்தில், சிறந்த நடிப்பை வழங்க வேண்டுமென்பதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். நந்தமுரி ரசிகர்கள் மற்றும் பொதுவான திரைப்பட ஆர்வலர்களை கவரும் வகையில், நடிப்பு, சண்டை மற்றும் நடனம் ஆகியவற்றில் விரிவான பயிற்சி பெற்று வருகிறார்.
மோக்ஷக்ஞ்யா பிறந்தநாளைக் கொண்டாடவும், அவரது அறிமுகத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், படக்குழு அவரை ஸ்டைலான மற்றும் அதிநவீன அவதாரத்தில் காண்பிக்கும் புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது. உயர்ந்த ஆளுமையுடன், நவநாகரீக உடையில் மோக்ஷக்ஞ்யா வசீகரிக்கும் புன்னகையுடன், நேர்த்தியாக நடப்பதை அந்த ஸ்டில்லில் காணலாம். போஸ்டர் மோக்ஷக்யாவின் நேர்த்தியான மற்றும் மெருகூட்டப்பட்ட தோற்றத்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது.
பிரசாந்த் வர்மா தனது ஹீரோக்களை, தனித்துவமான ஸ்டைலான வழிகளில் காட்சிப்படுத்துவதில் புகழ் பெற்றவர். இளம் நடிகரான மோக்ஷக்ஞ்யா தோற்றத்தையும், இதேபோன்ற புதுப்பாணியுடன் வழங்குவார்.
இயக்குனர் பிரசாந்த் வர்மா கூறியதாவது…, மோக்ஷக்ஞ்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்துவது, மிகப்பெரிய கவுரவம் மற்றும் மிகப்பெரிய பொறுப்பு. என் மீதும் என் கதை மீதும் பாலகிருஷ்ணா வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த ஸ்கிரிப்ட் நமது இதிகாசத்திலிருந்து ஈர்க்கப்பட்ட கருவைக்கொண்டு உருவாக்கப்பட்டது, இதிகாசம் சொல்லப்பட வேண்டிய அற்புதமான கதைகளின் தங்கச் சுரங்கமாகும். இதுவும் PVCU இன் ஒரு பகுதியாகும், மேலும் இது என் சினிமா யுனிவர்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி பேசுகையில், மோக்ஷக்ஞ்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம், SLV சினிமாஸில் எங்களுக்கு இந்த பொன்னான வாய்ப்பை வழங்கிய பாலகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. பிரசாந்த் வர்மா தனது அறிமுகத்திற்கு மோக்ஷக்ஞ்யாவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு அற்புதமான ஸ்கிரிப்டைக் கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தைப் பார்க்க நாங்கள் அனைவரும் ஆவலாக உள்ளோம். இந்த திரைப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்றார்.
மோக்ஷக்ஞ்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் படத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்
நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், 'அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது கூறப்பட்டிருக்கும் சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.
மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உச்ச நீதி உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐ பி சி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
சதி மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நிவின் பாலி முடிவு செய்துள்ளார்.
எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!
எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்..
பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தலைவெட்டியான் பாளையம் இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 அன்று பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளது.
மும்பை—செப்டம்பர் 05, 2024— இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் ஒரிஜினல் நகைச்சுவை-இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் எனும் படைப்பின் உலகளாவிய பிரீமியர் காட்சி வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்துள்ளது. பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரை, தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது. அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகியோர் உட்பட பல திறமை வாய்ந்த நடிகர்கள் முக்கிய வேடத்தில் தோன்றி நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை மீண்டும் உயிர்பெற்று எழச்செய்து அதன் ஒரு கண்ணோட்டத்தை மனதைக் கவரும் வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறது. செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தலைவெட்டியான் பாளையம் திரைப்படம் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஆங்கில சப் டைட்டில்களுடன் தமிழில் திரையிடப்படவிருக்கிறது. இந்த தலைவெட்டியான்பாளையம் எனும் இணையத் தொடர் பிரைம் உறுப்பினர் பட்டியலில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு ₹1499 மட்டும் செலுத்தி, சேமிப்பு, வசதி மற்றும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவித்து மகிழலாம்
தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்) வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது வித்தியாசமான கிராமப்புற வாழ்க்கை மற்றும் அதன் கிராமவாசிகளின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார். இதனால் ஏற்படும சுவராசியமான திடீர் திருப்பங்களை நகைச்சுவையான சூழல் விவரிக்கிறது.
"எங்களின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த பார்வையாளர்களின் மேம்பட்டு வரும் ரசனைகள் மற்றும் விருப்பத்தேர்வுகளுக்கு ஈடு செய்யும் வகையில், எங்கள் ரசிகர்கள், தொடர்புபடுத்தி பொருத்திப் பார்த்துக்கொள்ளக் கூடிய அதிகாரபூர்வமான மற்றும் மனதைக் கவரும் கதைக் களத்தைக் கொண்ட உருவாக்கங்களை எங்கள் உள்ளூர் மொழி உள்ளடக்கங்களுடன் விரிவுபடுத்த எங்களை முன்னோக்கி உந்தித் தூண்டுகிறது. புதிய, நூதனமான, இந்த மண்ணில் வேரூன்றிய கதைகளை வழங்குவதில் எங்களுக்குள்ள தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்து கொள்ளும் TVF போன்ற நீண்டகால தயாரிப்பாளர்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு இந்த அசல் தமிழ் நகைச்சுவை இணையத் தொடர் தலைவெட்டியான் பாளையம் எனும் படைப்பை வழங்குவதில் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளோம். பாலகுமாரன் முருகேசன் எழுத்தில் உருவான இந்த சீரீஸ், நகைச்சுவையோடு இணைந்த மகிழ்ச்சி பொங்கச்செய்யும் மனதுக்கு இதமான தருணங்களின் ஒரு கலவையை, எளிமையான அதேசமயம் மனதைக் கொள்ளை கொள்ளும் கதையின் வழியாக நம் முன்னே காட்சிப்படுத்தி நம்மைக் கவர்ந்திழுத்து கட்டிப்போட்டுவிடுகிறது. அதிகாரபூர்வமான கிராமப்புற வசீகரம் மற்றும் உலகளாவிய சமூக இயக்கவியலின் கருப்பொருள் அதன், விதிவிலக்கான பல்திறன் வாய்ந்த நடிகர்கள் குழுவால், உயிர்ப்பிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தொடர் பார்வையாளர்களைக் பெருமளவில் கவரும் என்பது உறுதி" என்று பிரைம் வீடியோ இந்தியா, கன்டெண்ட் லைசென்சிங் டைரக்டர் மனிஷ் மெங்கானி கூறினார்.
"தலைவெட்டியான் பாளையம் எனும் இணையத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்." தனது கருத்தை பகிர்ந்து கொண்ட, தி வைரல் ஃபீவர் (TVF) பிரசிடண்ட் விஜய் கோஷி கூறினார், "ப்ரைம் வீடியோவுடன் இணைந்து தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடரை வழங்கியது மிகவும் அற்புதமான அனுபவத்தை தந்தது. .ஒரு சிறிய கிராமத்தின் அன்றாட வாழ்க்கை சம்பவங்களின் எளிமையான அதே சமயம் சில சமயங்களில் சவாலான அம்சங்களை நகைச்சுவையோடு கலந்து நம்பகத்தன்மையுடன் படம்பிடித்தில் ஒட்டுமொத்த அணியினரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்இந்த உருவாக்கத்துக்கு உயிரூட்ட அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பை தந்த எங்களின் சிறப்பு மிக்க திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவைச்சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும் நான் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
இந்த நிகழ்ச்சியை டி வி எஃப் நிறுவனத்தின் உதவியின்றி நாங்கள் உருவாக்கியிருக்க முடியாது. பஞ்சாயத் (S1-S3) இயக்குநரான தீபக் மிஸ்ரா மற்றும் TVF ஒரிஜினல்ஸ் தலைவர் ஷ்ரேயான்ஷ் பாண்டே போன்ற செயல் வல்லமை மிக்க TVF உள்ளக செயல்பாட்டாளர்கள் உதவியின்றி நாங்கள் இதை சாதித்திருக்க முடியாது. தலைவெட்டியான் பாளையம் எனும் இணையத் தொடர் செப்டம்பர் 20 அன்று பிரைம் வீடியோவில் உலகமெங்கும் திரையிடப்படும் போது இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகும் நேச்சுரல் ஸ்டார் நானி!
நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்களில், ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான, சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றி பெற்றுள்ளது. ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்களை தந்திருக்கும் நானி, அடுத்ததாக அவரது 32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகிறார். நானியின் கேரக்டரைப் பற்றிய ஸ்னீக் பீக் மூலம், அவரது அடுத்த படமான ஹிட் கேஸ் 3 பட அறிவிப்பு, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, வால் போஸ்டர் சினிமாவின் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், டாக்டர் சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்குகிறார்.
Hunter's Command என பெயரிடப்பட்ட கிளிப், ஒரு HIT அதிகாரி பனி மலைகளில் காரை ஓட்டுவது மற்றும் ஒரு ஜோடி போலீஸ் அதிகாரிகள் அவரைத் துரத்துவது போன்ற ஒரு புதிரான குறிப்பில் தொடங்குகிறது. HIT அதிகாரி ஆபத்தில் இருப்பதாக ஒரு அதிகாரி மற்றவரை எச்சரிப்பதால் நம் பதற்றம் அதிகரிக்கிறது. HIT அதிகாரியே ஆபத்தானவர் என்றும் அவர் பெயர் அர்ஜுன் சர்க்கார் என்றும் அந்த அதிகாரி தெரிவிக்கிறார். அர்ஜுன் சர்க்கார் கெட் செட் அண்ட் கோ என்று சொல்லும் உச்சரிப்புடன் வீடியோ முடிவடைகிறது.
நானி சுருட்டு புகைக்கும்போதும், காரை ஓட்டும்போதும் ரத்தம் தோய்ந்த கைகள் மற்றும் கோடரியுடன் ஸ்டைலாகவும், கொடூரமாகவும் தோன்றுகிறார். அர்ஜுன் சர்க்காராக அவரது சித்தரிப்பு மிரட்டல்லாக இருக்கிறது. அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தின் பெயர் படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் போலவே சக்திவாய்ந்ததாக ஒலிக்கிறது.
முன்னதாக HIT பட வரிசையை இயக்கிய டாக்டர் சைலேஷ் கொலானு ஹிட் : கேஸ் 3 படத்தை இயக்குகிறார். முந்தைய படங்களைத் தாண்டி இன்னும் ஸ்டைலான, பிரமாண்டமான படமாக இருக்குமென்பதை டீசர் உறுதி செய்கிறது.
பிரபல ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸால் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் பிரமிப்பூட்ட்டுகின்றன, அதே சமயம் மிகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மட்டும் செய்து வரும் மிக்கி ஜே மேயர் தனது துடிப்பான இசை மூலம் டீசரின் தீவிரத்தை உயர்த்துகிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீ நாகேந்திரா தங்கா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
HIT தொடரின் மூன்றாம் பாகத்தில் அர்ஜுன் சர்க்காரின் கதாபாத்திரம் எவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என்பதை சொல்லும் இந்த டீசர் உண்மையிலேயே மிரட்டலாக இருக்கிறது.
மே 1, 2025 அன்று கோடையில் HIT 3 திரையரங்குகளில் வரும் என்று வீடியோ மூலம் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
- உலக செய்திகள்
- |
- சினிமா