சற்று முன்

இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் பங்குபெறும் கல்கி 2898 கிபி க்ரோனிகல்ஸ் நேர்காணல்!   |    மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா!   |    இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது !!   |    இந்திய இசைப்பயணத்தை அறிவித்தார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ; ரசிகர்கள் உற்சாகம்   |    பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் இணைந்து கலக்கும் 'கல்கி 2898 கி.பி' திரைப்பட புதிய பாடல்!   |    இன்றும் 'வெள்ளி விழா நாயகன்' தான் என்பதை நிரூபித்துள்ள நடிகர் மோகன்!   |    விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள்!   |    சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து உதவி கரம் நீட்டியுள்ள திரைபட கதாநாயகர்கள்!   |    உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது 'புஷ்பா 2: தி ரூல்'!   |    AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தாது தயாரிப்பு நிறுவனம்!   |    ’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு! - நடிகர் சரத்குமார்   |    சூரியின் உழைப்பு அசாதாரணமானது! - 'கருடன்' தேங்க்ஸ் கிவிங் மீட்டில் இயக்குனர் வெற்றிமாறன்   |    அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை'   |    25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’   |    ஆறு வருட தேடலுக்குப் பிறகு இசையமைப்பதற்கான வாய்ப்பு! - இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன்   |    'டகோயிட்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!   |    நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை படம் பிடித்து காட்டும் படம் ’தோனிமா’!   |    அவர் பெயரைக் கேட்டதுமே ஓகே சொல்லி விட்டேன்! - நடிகை அபிராமி   |    பஞ்சம் பிழைக்க வந்த அதே ஊரில் இன்று பாராட்டு! - விஜய் சேதுபதி   |    பிரபாஸின் 'கல்கி 2898 AD ' பட முன்னோட்டம் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

‘மல்லி’ க்காக இணைந்த 80'ஸ் கதாநாயகிகள்
Updated on : 04 June 2024

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மல்லி’ தொடர் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பாராத திருப்பங்கள் உள்ளிட்டவையுடன் சுவாரஸ்யமாக பயணிக்கும் ‘மல்லி’ தொடருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் 80 களில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னாள் கதாநாயகிகளான அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி ஆகிய மூவரும் முதல் முறையாக ‘மல்லி’ தொடரில் இணைந்து நடித்துள்ளனர். நாயகன், நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜும், நளினியும் கலக்க, அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும் டென்ஷனையும் கூடுகிறார் அம்பிகா. மூன்று முன்னாள் கலக்கல் நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது ‘மல்லி’ மெகாத்தொடர்.  திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில் பி.ஆர்.விஜயலட்சுமி தயாரிக்கிறார்.  

 விஜய், நிகிதா, பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்யராஜ், நளினி, அம்பிகா, மதன்பாப், தேவ் ஆனந்த், சாய்ராம் வெங்கட், கிருத்திகா, ஐசக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இத்தொடருக்கு தமயந்தி திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார். விஸ்வாத் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைத்துள்ளார். படைப்பாக்கத்தை நீடா.கே.சண்முகம் கவனிக்க, படைப்பக்கத் தலைமைப் பணியை ப்ரின்ஸ் இம்மானுவேல் கவனிக்கிறார். ஸ்டாலின் இயக்குகிறார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா