சற்று முன்

இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் பங்குபெறும் கல்கி 2898 கிபி க்ரோனிகல்ஸ் நேர்காணல்!   |    மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா!   |    இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது !!   |    இந்திய இசைப்பயணத்தை அறிவித்தார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ; ரசிகர்கள் உற்சாகம்   |    பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் இணைந்து கலக்கும் 'கல்கி 2898 கி.பி' திரைப்பட புதிய பாடல்!   |    இன்றும் 'வெள்ளி விழா நாயகன்' தான் என்பதை நிரூபித்துள்ள நடிகர் மோகன்!   |    விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள்!   |    சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து உதவி கரம் நீட்டியுள்ள திரைபட கதாநாயகர்கள்!   |    உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது 'புஷ்பா 2: தி ரூல்'!   |    AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தாது தயாரிப்பு நிறுவனம்!   |    ’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு! - நடிகர் சரத்குமார்   |    சூரியின் உழைப்பு அசாதாரணமானது! - 'கருடன்' தேங்க்ஸ் கிவிங் மீட்டில் இயக்குனர் வெற்றிமாறன்   |    அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை'   |    25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’   |    ஆறு வருட தேடலுக்குப் பிறகு இசையமைப்பதற்கான வாய்ப்பு! - இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன்   |    'டகோயிட்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!   |    நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை படம் பிடித்து காட்டும் படம் ’தோனிமா’!   |    அவர் பெயரைக் கேட்டதுமே ஓகே சொல்லி விட்டேன்! - நடிகை அபிராமி   |    பஞ்சம் பிழைக்க வந்த அதே ஊரில் இன்று பாராட்டு! - விஜய் சேதுபதி   |    பிரபாஸின் 'கல்கி 2898 AD ' பட முன்னோட்டம் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!
Updated on : 16 May 2024

உங்கள் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி. ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் உள்ள பாசப்போராட்டத்தில் கதாநாயகி எப்படி வந்து இணைகிறாள் என்பதே  கதை.   மல்லி பெருமாள்புரம் கிராமத்தில் பால்வாடி டீச்சராக பணிபுரிகிறாள். அந்தப்பள்ளியில் நடக்கும் அநீதிகளை  தட்டிக்கேட்டு அதன் மூலம் பிரச்சினைகளில் சிக்கி சென்னைக்கு வரும் சூழலுக்கு தள்ளப்படுகிறாள். சென்னையில் தாயில்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் குழந்தை வெண்பா. 

அவள் தந்தையிடம் தனக்கு அம்மா வேண்டும் எனக் கேட்டு போராடுகிறாள். இரண்டாவது திருமணத்தில் உடன்பாடு இல்லாத விஜய் குழந்தையை சமாளிக்க என்ன செய்கிறான். அந்தக் குழந்தைக்குத் தாயாக மல்லி எப்படி வந்து சேருகிறாள் என்பதை விறுவிறுப்பான சம்பவங்கள் திருப்பங்களோடு சுவாரசியமாக சொல்கிறது மல்லி.  மிகுந்த பொருட்செலவில் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில்

திருமதி B.R.விஜயலட்சுமி தயாரிக்கிறார். விஜய், நிகிதா, பேபி ராஹிலா,

மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்கியராஜ், மதன்பாப், தேவ் ஆனந்த், 

சாய்ராம், வெங்கட், கிருத்திகா, நளினி, பாரதிமோகன், ஐசக் மற்றும் பல

முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.  திரைக்கதை மாரிமுத்து, வசனம் மருதுசங்கர், ஒளிப்பதிவு அகிலன்,

இசை தரன், இயக்குநர் மணிபாரதி, படைப்பாக்கம் நீடா.கே.சண்முகம்

படைப்பாக்கத்தலைமை ப்ரின்ஸ் இம்மானுவேல் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா