சற்று முன்

நீட் தேர்வின் மூலம் ஏற்படும் அவதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘அஞ்சாமை’!   |    ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட 'கருடன்' இசை வெளியீட்டு விழா   |    வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |    அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'   |    தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம்   |    சித்த மருத்துவத்தின் சிறப்பை இந்தப் படத்தின் மூலம் உணர்த்திய இயக்குநர் சிவா   |    கோலிவுட்டில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம் !!   |    சென்னை அடையாறில் 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'   |    'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா   |    'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடலும், அதன் லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டது   |    1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையில் விஜய் தேவரகொண்டா!   |    சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்ட 'தண்டேல்' படக்குழுவினர்   |    எஸ் கே ஜீவா இயக்கும் 'குற்றம் கடிதல் 2' படம் விரைவில் தொடங்குகிற‌து!   |    டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ   |    தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அன்புசெழியன் சார் தான்! - நடிகர் சந்தானம்   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன் - இயக்குநர் ஆதம்பாவா
Updated on : 08 May 2024

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. 



 



அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். 



 



இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.



 



ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.



 



Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.



 



இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



 



இந்த நிகழ்வில் நடிகரும் இயக்குனருமான சரவண சக்தி பேசும்போது,



“அமீர் அண்ணன் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே நானும் இயக்குனர் ஆதம்பாவாவும் அவரிடம் கதை சொல்வதற்காக சென்றோம். ஆனால் அன்று அவரை சந்திக்கவே முடியவில்லை. இன்று அவரை வைத்து படம் இயக்கும் அளவிற்கு நண்பர் ஆதம்பாவா உயர்ந்திருக்கிறார். ஆளில்லாத சிக்னலில் கூட அத்துமீறி சென்று விடக்கூடாது என நினைக்கிற ஒரு மனிதர் தான் அமீர் அண்ணன்.. அவரது சுய ஒழுக்கத்தை பார்த்து நான் பல விஷயங்களை திருத்திக் கொண்டேன்” என்று கூறினார். 



 



நாயகி சாந்தினி ஸ்ரீதரன் பேசும்போது,



“இந்த படத்தின் ஹீரோ அமீர், இயக்குனர் ஆதம்பாவா உள்ளிட்ட அனைவருடனும் படப்பிடிப்பு தளத்தில் செம ஜாலியாக இருந்தது. ஒரு குடும்பமாகத்தான் இந்த படக்குழுவை நான் உணர்ந்தேன். நிச்சயமாக இந்த படம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார். 



 



நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது,



நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதையை இயக்குனர் ஆதம்பாவா இதில் கொடுத்துள்ளார். படத்தில் அமீருடன் கூடவே வரும் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என இயக்குனர் ஆதம்பாவா கூறினார். ஆனாலும் பருத்திவீரன் படத்தில் ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் பல டேக்குகள் எடுப்பார் என கேள்விபபட்டுள்ளேன். என்னுடன் அவர் சரியாக பழகுவாரா என்கிற ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் ஒரே நாளில் என் எண்ணத்தை மாற்றிவிட்டார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை புரட்சித்தலைவர் பற்றிய பாடல் இனி அவருக்கான தேசிய கீதம் ஆக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. படம் முடிவதற்குள் கதாநாயகி சாந்தினி தமிழில் நன்றாக பேசிவிட்டால் ஒரு மோதிரம் தருவதாக கூறி இருந்தேன். இப்போது நன்றாக பேசியுள்ளார். படம் ரிலீஸ் ஆன பிறகு அந்த பாக்கியை செட்டில் பண்ணி விடுகிறேன்” என்றார் 



 



நடிகர் கஞ்சா கருப்பு பேசும்போது,



“அமீர் அண்ணன் படங்களில் எனக்கு நல்ல வேடங்கள் கொடுத்து நடிக்க வைத்தார். வாழவந்தான் என எனக்கு ஒரு பட்டம் கொடுத்து நல்லா வாழ்ந்துக்கடா என்று கூறினார். அவருக்கு நான் புரட்சி வேந்தன் என்கிற ஒரு பட்டத்தை இந்த இடத்தில் கொடுக்கிறேன்” என்றார். 



 



இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் பேசும்போது,



“அமீர் அண்ணன் எனது மானசீக குருநாதர். வாழ்க்கையில் ஏதாவது ஒரு இக்கட்டான பிரச்சனை என்றால் கூட துணையாக வந்து நில்லுங்கள் என அழைக்கும் முதல் நபர் என்றால் அது அமீர் அண்ணன் தான். அப்படி வெளியே தெரியாத பல தருணங்களில் அவரிடம் சென்று நின்று இருக்கிறேன்.. எந்தவித நிபந்தனையும் இன்றி அன்புக்காக மட்டுமே அவரும் வருவார். என்னுடைய பல பட விழாக்களில் கடைசி நேரத்தில் அழைத்தால் கூட தனது வேலையை ஒத்தி வைத்து விட்டு தவறாமல் வந்து விடுவார். அதனால் இந்த படத்தின் விழாவிற்கு என்னை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் வரவேண்டும் என நான் முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் என்னை மறக்காமல் அவரை அழைத்து விட்டார். உடனே வருகிறேன் எனக் கூறிவிட்டேன். இதுபோன்ற ஒரு சூழலில் அவர் அருகில் என்னை போன்றவர்கள் இருக்க வேண்டியதை ஒரு கடமையாக நினைக்கிறேன். அவருடன் இருந்த சில பேர் அவரை விட்டு இப்போது சென்று விட்டார்கள் என வெளியில் சில பேர் கூறி வருகிறார்கள். ஆனால் யாரும் அவரை விட்டு எங்கேயும் போகவில்லை. அவருடனேயேதான் இருக்கிறோம். 



 



இந்த படத்தின் டிரைலர், பாடல்களை பார்க்கும்போது அமீர் சாருக்கு இது இரண்டாவது ரவுண்டு ஆரம்பிப்பது போன்று எனக்கு தோன்றுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து பி அண்ட் சி சென்டர்களுக்கான கதைகள் அமீர் அண்ணனை நோக்கி நிறைய வரும். அதை தவிர்க்காமல் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பல ஹீரோக்கள் தற்போது பான் இந்தியாவை நோக்கி நகர்ந்து விட்டார்கள். மண் சார்ந்த கதைகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். அமீர் அண்ணன் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும்” என்று பேசினார். 



 



நடிகர் பொன்வண்ணன் பேசும்போது,



சினிமாவுக்கு வருவதற்கு முன் நல்லவர்களாக இருந்து இங்கே வந்து பாதை மாறியவர்கள் பலர் உண்டு. ஆனால் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு எல்லாத் தவறுகளையும் பண்ணியவர்தான் அமீர். ஆனால் சினிமா துறைக்குல நுழைந்த போது மிகச்சிறந்த ஆன்மீகவாதியாகவும் தனிமனித ஒழுக்கம் கொண்டவராகவும் அப்படியே மாறிவிட்டார். மதுரையில் ஒரு வாழ்க்கை, மதுரைக்குப் பிறகு ஒரு வாழ்க்கை என ஒரு பாட்ஷா போல அமீர் எப்போதும் ஒரு நேர்மையுடன் தான் பயணிக்க விரும்பி இருக்கிறார். பணத்திற்காக மற்றும் வேறு எதற்காகவும் அவர் தனது தனிமனித ஒழுக்கத்தை விட்டுக் கொடுத்தது இல்லை. அதனால் தான் காலம் இன்று அவருக்கு ஒரு செக் வைக்கும்போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



 



அவர் மீது கூறப்படும் எந்த ஒரு தவறுக்கும் அவர் நிச்சயம் உடந்தையாக இருந்திருக்க மாட்டார். இப்படி ஒரு எதிர்பாராத தாக்குதல் வரும்போது நம்மில் பலர் நிலை குலைந்து போய் விடுவோம். ஆனால் அவர் மிக நிதானமாக தன் மீது உள்ள மிகப்பெரிய நம்பிக்கையோடு அதை கடந்து சென்ற விதம் பிரமிக்க வைக்கிறது. ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கதையில் எனது கதாபாத்திரமும் இருந்தது. நானும் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தேன். ஆனால் கிராமத்திலிருந்து நகரத்திற்கு என கதை மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைந்தபோது எங்களது கதாபாத்திரங்கள் அதிலிருந்து விடுபட்டு விட்டன. ஆனால் ஆதம்பாவா ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் மிகப்பெரிய போராட்டத்திற்கு இடையில் இந்த படத்தை முழுமையான படமாக உருவாக்கியுள்ளார்” என்று கூறினார். 



 



கவிஞர் சினேகன் பேசும்போது,



இந்த படம் முடிந்த பிறகு தான் இந்த படத்திற்குள்ளே நான் வந்தேன். இந்த படத்திற்கு புரமோஷன் பாடல் ஒன்றை தயார் செய்ய வேண்டும் என ஆதம்பாவா இந்த படத்தின் காட்சிகள் பலவற்றை போட்டுக் காட்டினார். அவற்றைப் பார்த்தபோது மீண்டும் ஒரு அமைதிப்படை படம் மாதிரி இது அமைந்திருக்கிறது என தோன்றியது. அமைதிப்படைக்குப் பிறகு ஒரு அரசியல் நக்கல் கலந்த படம் வரவில்லையே என்கிற குறையை இந்த உயிர் தமிழுக்கு போக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதிகப்படியான படைப்புகளை கொடுக்காவிட்டாலும் ஆளுமையான படைப்புகளை கொடுத்து அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் அமீர். சத்யராஜ் சொன்னது போல சொல்ல வேண்டும் என்றால் ‘பாண்டியர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ’ என்பது போல நடித்துள்ளார் அமீர். நிரபராதியாக இருந்து விட்டால் எங்கேயுமே அச்சப்பட தேவையில்லை. ஓடி ஒளிய வேண்டிய தேவை இல்லை. ஒரு மனிதன் அமைதியாக இருப்பதனாலேயே என்ன வேண்டுமானாலும் இந்த உலகம் பேசுமா என்கிற பெரிய வருத்தம் இருக்கிறது. அமீரும் ஆதம்பாவாவும் இந்த படத்தில் துணிந்து இருக்கிறார்கள். நிச்சயம் வெல்வார்கள்” என்று கூறினார். 



 



இயக்குநர் ஆதம்பாவா பேசும்போது,



“என்னை உயிர் தமிழுக்கு படம் மூலம் இயக்குநராக்கி அழகு பார்த்த எனது குரு, மக்கள் போராளி அமீர் சாருக்கு நன்றி. அவருடைய மௌனம் பேசியதே பட இசை வெளியீட்டு விழா தான் எனது சினிமா வாழ்க்கையின் முதல் என்ட்ரி. எனக்கு விவரம் தெரிந்து அவரை நாற்பது வருடங்களாக எனக்கு தெரியும். நான் நான் சினிமாவில் உதவி இயக்குநராக நுழைய முடிவெடுத்தபோது எங்களது உறவினர் மூலமாக இயக்குநர் பாலாவிடம் சேர்த்து விட சொன்னேன். பாலாவும் என்னை சென்னைக்கு வரச் சொல்லிவிட்டார். காரை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்த உதவி இயக்குநர் நானாகத்தான் இருக்கும். அண்ணா நகரில் உள்ள பாலாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.. அவர் மாடியில் இருந்தாலும் பல மணி நேரம் கீழே காத்திருந்தேன். அப்போது நான் கடவுள் பட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதில் முதலில் பேசப்பட்ட அந்த மிகப்பெரிய ஹீரோ அந்த சமயத்தில் அங்கே வந்தார். ஆனால் அங்கே சாப்பிட சொல்லாமல் கூட பல மணி நேர காத்திருப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். ஆனால் பாலா எனக்கு வைத்த பரீட்சை அது என்று உறவினர் கூறினாலும் பாலாவிடம் வேலை பார்க்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அமீரிடம் சேர்த்து விடுமாறு உறவினரிடம் கூறினேன்.



 



அந்த சமயத்தில் பருத்திவீரன் படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. நான் அமீரை பார்க்க சென்றதும் அவர் எனக்காக காத்திருப்பார், நான் வந்ததுமே பருத்திவீரன் ஸ்கிரிப்ட்டை கொடுத்து படித்துவிட்டு வா என்று கூறி மதியம் என்னுடன் டிஸ்கஷன் செய்வார் என்கிற நினைப்பில் சென்றேன். ஆனால் அமீரும் என்னை வரச் சொல்லிவிட்டு பல மணி நேரம் காக்க வைத்தார். அதன் பிறகு வெளியே வந்தவர் என்னை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். இந்த இரண்டு இடங்களிலும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் நானே தனியாக ஒரு அலுவலகத்தை துவங்கினேன். 



 



அதன் பிறகு இயக்குனர் சரவண சக்தியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது என்பதை இங்கிருந்து கற்றுக் கொண்டேன். ஆனாலும் இந்த படம் இவ்வளவு நேர்த்தியாக வந்ததற்கு கூடவே இருந்து வழி நடத்திய அமீர் சார் தான் காரணம். இன்று கூட இந்த படத்தை பார்த்த கதாநாயகி சாந்தினி இப்படி ஒரு படத்திலா நான் நடித்தேன் என ஆச்சரியப்பட்டார். அந்த அளவிற்கு இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீசுக்கு கொண்டு வந்து விட்டோம்.



 



ஆனால் இந்த சமயத்தில் மதுரையில் பாஷாவாக சென்னையில் மாணிக்கமாக இருந்த அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக மாற்றி விட்டார்கள். அதனால் இந்த படத்தின் வியாபாரமே பாதிக்கப்பட்டது. அமீரால் உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாளரே இந்த படத்தின் ரிலீஸை எவ்வளவு தடுக்க முடியுமோ அந்த அளவிற்கு வேலை பார்த்தார். ஆனால் என்னிடம் நன்றாக தான் பேசுவார். அவர் இந்த படத்தை பற்றி பேசிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆனால் காலம் தான் அவருக்கு பதில் சொல்லும்.



 



தமிழ் சமூகத்திற்காக சிறைக்கு சென்றவர் அண்ணன் அமீர். அவருடன் கூடவே சிறைக்கு சென்ற சீமான் இன்று ஒரு கட்சித் தலைவராக இருக்கிறார். ஆனால் சினிமா மீது இருக்கும் காதலால் இங்கேயே இருந்து கொண்டு பத்து வருடம் அந்த வழக்குக்காகவே அலைந்தார். அவரை விடுதலை செய்த நீதிபதியே இதற்காக நீங்கள் பயந்து விட வேண்டாம், தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுங்கள் என்று நற்சான்றிதழ் கொடுத்தார். தமிழக மக்களின் இதயங்களில் இருக்கிறார் அமீர். மக்கள் போராளி அமீர் என்கிற ஒரு புத்தகமே எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அது வெளியாக இருக்கிறது.



 



மக்களுக்கான எல்லா போராட்டங்களிலும் எப்போதும் முன்னால் நின்றிருக்கும் இவருக்கு இந்த மக்கள் போராளி பட்டத்தை கொடுக்கவில்லை என்றால் வேறு யாருக்கு கொடுப்பது ? அரசியல் நையாண்டி பின்னணியில் இழையோடினாலும் முழுக்க காதல் படம் தான் இது. சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன். அவர் அடுத்தடுத்து எந்த மாதிரி கதைகளை படமாக்க போகிறார் என்பது எனக்கு தெரியும். அவரை வேலை செய்ய விடுங்கள்.. மக்களுக்கு பயனுள்ள திரைப்படங்கள் வரும்..



 



கதாநாயகி சாந்தினி தயாரிப்பாளருக்கு எந்த வித கஷ்டமும் கொடுக்காத ஒரு நடிகை.. மன்னன் விஜயசாந்தி, சவாலே சமாளி ஜெயலலிதா போல இதில் அமீருக்கு இணையாக காதலியின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா அவரை பயன்படுத்தி கொள்ளும் என நினைக்கிறேன். இந்த படத்தில் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சிக்கு இதில் ஃபுல் மீல்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி பல படங்களில் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வரும். கஞ்சா கருப்புவும் பல காட்சிகளில் காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கிறார். பல பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். 



 



இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது,



'இயக்குநர் ஆதம் பாவாவின் பேச்சு எப்படி சிரிக்க சிரிக்க இருந்ததோ அதேபோலத்தான் இந்த படமும் இருக்கும். நான் சினிமாவிற்குள் வந்த காலகட்டத்தில் தன்னுடைய இஸ்லாமிய பெயரை மறைக்காமல் அதே பெயரில் படம் இயக்கிய அமீரை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. இரவு நேரத்தில் யாரோ ஒருவர் குரல் தழும்ப பேசினாலே அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு ஏதோ பிரச்சனை, தான் அவருடன் சென்று நிற்க வேண்டும் என கிளம்பி வந்துவிடுவார் அமீர். அவரை பார்த்து தான் இப்போதும் நான் அதை பின்பற்றுகிறேன். இந்த மேடையில் எஸ்.பி ஜனநாதன் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எங்கள் மூவருக்கு எப்போதுமே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.



 



தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கதையில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ரஜினிகாந்த் நடித்த போது இந்த படம் நமக்கு செட் ஆகுமா என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் அதை தயாரிப்பாளரிடமும் கேட்டு விட்டார். ஆனால் பஞ்ச அருணாசலம் இந்த படம் தோல்வியடைந்தால் எனக்குத்தான் நட்டம்.. உனக்கு என்ன பிரச்சனை..? ஆனால் இந்த படம் வெற்றி பெற்றால் இனி நீ கடைசியாக நடிக்கும் படம் வரை 15 நிமிடம் காமெடி பண்ணிவிட்டு தான் மற்ற வேலைகளை பார்க்க முடியும் என்று கூறினார். அது இப்போது வரை தொடர்கிறது. அப்படித்தான் சீரியஸான அமீரை, இயக்குநர் ஆதம்பாவா, என்னுடைய படத்தில் நீங்கள் காமெடியாக தான் நடிக்கிறீர்கள்.. இது வெகுஜனத்தால் ரசிக்கப்படும் என என முழுதாக நம்பி அவரை முழுதா

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா