சற்று முன்

பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |   

சினிமா செய்திகள்

பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !!
Updated on : 19 March 2024

சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு  வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, பிரம்மாண்ட வெற்றியடைந்தது.  இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படமும்,  ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. வரும் மார்ச் 22 ஆம் தேதி, இந்த படத்தை அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் தமிகழகம் முழுவதும் வெளியிடுகிறது.  ‘சிவா மனசுல சக்தி’  படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனது இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ ரி ரிலீஸ் செய்யப்படுவதில் இயக்குநர்  ராஜேஷ்.M பெரும் உற்சாகத்தில் உள்ளார். இயக்குநர்  ராஜேஷ்.M  இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம்  நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான ரொமான்ஸ் காமெடி ஜானரில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ வெளியானபோதே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் சூப்பர் ஹிட் பாடல்களுடன் வெளிவந்த இப்படத்தின் மொத்தப்பாடல்களும் இன்றளவும் ரசிப்பட்டு வருகிறது.  மேலும் நடிகர் ஆர்யா திரைவாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றித்திரைப்படமாக அமைந்தது.  பல வெற்றிப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில், இப்படத்தின் ரீ ரிலீஸ்  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.  தற்போது இயக்குநர் ராஜேஷ்.M,  நடிகர் ஜெயம்ரவி நடிப்பில், SCREEN SCENE MEDIA தயாரிப்பில், ‘பிரதர்’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் பரபரப்பாக பணியாற்றி வருகிறார். மேலும் SRI VARI FILMS ரங்கநாதன் தயாரிப்பில்,  அதர்வா மற்றும் அதிதிசங்கர் நடிக்கும், புதிய படம் ஒன்றையும் இயக்க உள்ளர். அதற்கான ஆரம்பகட்ட முன் தயாரிப்பு  பணிகளையும் தற்போது செய்துவருகிறார். இந்த சூழலில் தற்போது ரி ரிலீஸாகப்போகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு, ஆவலோடு காத்திருக்கிறார்.  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா