சற்று முன்
சினிமா செய்திகள்
Updated on : 01 January 1970
சமீபத்திய செய்திகள்
கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!
உங்களோடு பயணிக்க தொடங்கிய காலத்தில் இருந்து உங்களுக்கு தெரியாமலோ, உங்களிடம் சொல்லாமலோ எதையும் செய்தது இல்லை.
முதல் முறையாய் ஒரு இடைச்செருகலாக ஒரு தகவலை உங்களிடம் தெரிவிக்க முயல்கிறேன் மன்னிக்கவும்.
நான் பிக்பாஸ் நிகழ்வில் இருக்கும் போது அதில் வென்றால் எனது சொந்த கிராமத்தில் ஒரு நூலகம் கட்டுவேன் என்று சொல்லிருந்தேன் என்பது அனைவரும் அறிந்ததே.
எனக்கு ஒரு பிடிவாதக்குணம் இருக்கிறது அது சரியா, தவறா என்பது எனக்கு இன்று வரை தெரியவில்லை .
நாக்கும் -வாக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் அந்த பிடிவாதக் குணம் ஒன்றை வாய் மொழியாக கூறினாலும் அதனை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதற்காக உழைப்பேன்.
பிக்பாஸ் நிகழ்வில் நான் வெல்லவில்லை என்றாலும் எப்படியாவது ஒரு நூலகத்தை என் ஊரில் கட்ட வேண்டும் என்று முயற்சித்தேன்.
அதுவும் பூர்விக இடத்தில் கட்டக்கூடாது என்னுடைய வருமானத்தில் தான் அந்த இடத்தை வாங்கி கட்ட வேண்டும் என்றும் பிடிவாதமாக இருந்தேன்.
என்னால் எப்போதெல்லாம் முடிந்ததோ அப்போதல்லாம் ஒரு செண்ட் இரண்டு செண்ட் என்று கொஞ்ச கொஞ்சமாக இடத்தை வாங்கியும் முடித்து விட்டேன்.
அந்த இடத்தில் தற்போது நூலகம் மட்டுமல்ல நம் பரம்பரிய கலைகளை கற்றுக் கொள்ளும் ஒரு கலைக்கூடமும், வளரும் தலைமுறைகள் வந்தமர்ந்து படிக்கும் ஒரு படிப்பகமும் அமைப்பது என்று முடிவெடுத்தேன்.
அதற்கான கட்டிட வறைப்பட பணிகளும் தொடங்கி விட்டது...
அதற்கு
நம்மவர் கலைக்கூடம்
நம்மவர் படிப்பகம்
நம்மவர் நூலகம் என்று
பெயரிட வேண்டும் என்றும் ஏற்கனவே முடிவு செய்து இருந்தேன்.
இவை எல்லாம் முழுமைப் பெற்றப் பிறகே உங்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று இரகசியம் காத்துவந்தேன்.
ஆனால் காலம் இப்படி ஒரு நிகழ்வின் மூலம் உங்கள் பாதம் என் மண்ணின் மீது பதிய ஏற்பாடு செய்திருக்கிறது என்றதும் இந்த வாய்ப்பினை நான் என் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்கிறேன்.
அமையவிருக்கு ஒரு மாபெரும் கனவிற்கான கல்வெட்டை திறந்து வைக்குமாறு அன்போடு அழைக்கிறேன் ...
அன்பே... அன்பை மன்னிக்கும்
மன்னிப்பை ஏற்று மறுதலிக்காமல் ஏற்பீர்கள் என்று அழைக்கிறேன் வாருங்கள்.
காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!
5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் (லண்டன், யுகே) நிறுவனம் தயாரித்து அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள அமானுஷ்ய காதல் கதையான 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' திரைப்படத்திற்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.
தக்ஷ் மற்றும் மாடில்டா பாஜர் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று இது வரை 1.7 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா, 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' படத்திற்கு தனது காலத்தால் அழியாத திறமையின் மூலம் சிம்பொனி இசையை வழங்கியுள்ளார். மாஸ்கோ போ டை ஆர்கெஸ்ட்ராவுடன் பதிவு செய்யப்பட்ட இந்த இசை, படத்திற்கு ஆழத்தையும் வலுவையும் சேர்த்துள்ளது.
இப்படத்தின் மூலம் லண்டனைச் சேர்ந்த திறமை வாய்ந்த கலைஞரான தக்ஷ் திரைத்துறையில் அறிமுகமாகிறார். போலந்து நாட்டின் வார்சாவைச் சேர்ந்த மாடில்டா பாஜர் நாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் மற்றும் ஜீவாவுடன் இணைந்து 'அகத்தியா' திரைப்படத்தில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் டீசர், உணர்ச்சிபூர்வமான சினிமா அனுபவத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பூட்டும் வகையில் டீசர் அமைந்துள்ளது.
உண்மை சம்பவங்களால் உத்வேகம் பெற்ற இயக்குநர் அஜித்வாசன் உக்கினா, இதுவரை சொல்லப்படாத கதையை மர்ம முடிச்சுகளைக் கொண்டு காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் உதவியோடு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைத்துள்ளார். தாங்கள் காதலை நேர்மறையான வகையில் முறித்துக் கொள்ள தனிமையான எஸ்டேட்டுக்கு செல்லும் ஒரு ஜோடி அங்கு நடைபெறும் சம்பவங்களால் எத்தகைய மாற்றங்களை சந்திக்கிறார்கள் என்பதை 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' ரசிகர்களுக்கு சொல்லும்.
"பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக இணைக்கும் கதையை யதார்த்தமாக வழங்கி இருக்கிறோம். இப்படம் காதலின் சக்தியை ரசிகர்களுக்கு எடுத்துரைக்கும்," என்று 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
இப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவின் ஒலிப்பதிவுகளின் படம்பிடித்துள்ள படக்குழுவினர், மனதை மயக்கும் அழகான இசை உருவாகும் செயல்முறையைப் பற்றிய ஒரு சிறப்பு காணொலியை வெளியிடத் தயாராகி வருகின்றனர்.
5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கிரிஷ் தயாரிப்பில், அஜித் வாசன் உக்கினா இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையில்.உருவாகியுள்ள 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'
அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ எம் வி பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தில் எஸ் கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் கே ட்ரிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். மேலும் கே எம் பி புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம் புவனேஸ்வரன் மற்றும் சி சாஜு - ஜோதிலட்சுமி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
டிசம்பர் மாதம் 5ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் கௌரவ் நாராயணன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா, திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''சினிமாவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. சினிமா குடும்பத்திற்கு என்னை அழைத்து வந்த 'நிர்வாகம் பொறுப்பல்ல' படக்குழுவினருக்கு நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,'' என்றார் .
பாடலாசிரியர் கருணாகரன் பேசுகையில், ''இந்தப் படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும் , இசையமைப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றி. 2004ம் ஆண்டில் வெளியான 'ஏய்' படத்தில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்து பணியாற்றிய வேண்டிய தருணம். ஆனால் அந்த வாய்ப்பு தவறிப் போனது. அதன் பிறகு அவருடைய இசையில் இப்போது அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது,'' என்றார்.
நடிகை மஞ்சு பேசுகையில், ''எல்லோரும் ஏதோ ஒரு சூழலில் மோசடிக்கு ஆளாகி இருப்போம். இதுபோன்ற உண்மை சம்பவத்தை தழுவி தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து உங்களின் ஆதரவை தர வேண்டும்,'' என்றார்.
நடிகர் பிளாக் பாண்டி பேசுகையில், ''முதலில் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த நடிகர் ஆதவனுக்கு நன்றி. வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.
நானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்துவதற்காக என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைத்திருந்தேன். நானும் என் மனைவியும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி அவருடைய செல்போனுக்கு வந்த ஒரு லிங்கை தவறுதலாக தொட்டுவிட, என்னுடைய வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணமும் திருடப்பட்டிருந்தது. எனக்கு அந்த நெருக்கடியான சூழலில் இந்த மோசடி நடைபெற்ற போது அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் நானும் மோசடியால் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க்கையில் நிறைய மக்கள் பணத்தை மோசடி பேர்வழிகளிடம் இழந்து இருப்பார்கள். தற்போது ஒவ்வொருவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏடிகே ஃபைல்ஸ் என்று ஒரு லிங்க் வருகிறது. நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும் முழுமையான விழிப்புணர்வுடன் இதனை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய சொந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கவனத்துடன் இருங்கள். இந்தப் படமும் இதைத்தான் சொல்கிறது.
நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்குநர் கார்த்திக் மற்றும் படக் குழுவினருடன் தொடர்ந்து பழகி வருகிறேன். அற்புதமான குழு. கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.
தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி பேசுகையில், ''நான் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் வாசிப்பாளர். தற்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றுகிறேன். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு திரைப்படங்களை தணிக்கை சான்றிதழுக்காக பார்ப்போம். இந்த சமுதாயத்தில் புரையோடி இருக்கின்ற, அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை படக் குழுவினர் கையாண்டிருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன்.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 17,000 கோடி ரூபாய் அளவிற்கு சைபர் குற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. இது தொடர்பாக தினந்தோறும் செய்திகள் நாளிதழ்களில் வெளியாகிறது. ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட், டிரேடிங் ஸ்கேம், முதலீடு தொடர்பான மோசடி என நாள்தோறும் விதவிதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். நம் நாட்டின் பட்ஜெட்டிற்கு நிகராக மக்கள் தங்களுடைய பணத்தை இழந்திருக்கிறார்கள். சைபர் மோசடியால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.
தணிக்கை குழுவை பொருத்தவரை கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது, யாரையும் அவமதிக்கக்கூடாது, அரசியல் தலைவர்களை பற்றி தவறாக பேசுவதோ சித்தரிப்பதோ கூடாது. எங்களைப் பொருத்தவரை படைப்பாளிகள் கொடுக்கும் ஒரு படம் சமூகத்தில் மக்களுக்கு படிப்பினையையும், விழிப்புணர்வையும், நல்லதொரு சிந்தனையையும் கொடுக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குவோம். அப்படிப்பட்டதொரு படத்தை எடுத்ததற்காக இந்த படக் குழுவினரை மீண்டும் பாராட்டுகிறேன்,'' என்றார் .
நடிகர் இமான் அண்ணாச்சி பேசுகையில், ''புதுமுக நடிகர் மற்றும் இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இது போன்ற திரைப்பட விழாக்களில் அணிவிக்கப்படும் சால்வையால் எந்த பயனும் இல்லை. இதை யாருக்கும் அன்பளிப்பாக கொடுக்கவும் முடியவில்லை. அதனால் சால்வைக்கு பதிலாக துண்டினை (டர்க்கி டவல் - குற்றால துண்டு ) பரிசாக அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்,'' என்றார்.
நடிகை மிருதுளா சுரேஷ் பேசுகையில், ''இந்த விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. இந்த திரைப்படம் சமூகத்திற்கு தேவையான அழுத்தமான செய்தியையும், பொழுதுபோக்கையும் கொண்ட திரைப்படம். அனைவரும் நிச்சயமாக திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி,'' என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், ''என் தந்தை தேவாவின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளான இன்று அவர் பாடிய ஒரு பாடலை இங்கு திரையிட்டு, அவரை கௌரவப்படுத்தியதற்காக அனைவருக்கும் என் தந்தையின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு துறையை சார்ந்தவராக இருந்தாலும் பொருத்தமான கதையை தேர்வு செய்து அதற்கு தேவையான பொருட்செலவில் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் அவருக்கு நிச்சயமாக நஷ்டத்தை தராது. லாபத்தை அள்ளித் தரும். அதற்கு என் வாழ்த்துகள்.
நானும், பாடலாசிரியர் கருணாகரனும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் தான் இணைந்திருக்கிறோம். அவரை பார்க்கும் போதெல்லாம் இவரைப் போல் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். அவரிடமிருந்து இதை கற்றுக் கொண்டேன்," என்றார்.
இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசுகையில், ''முதலில் இயக்குநர் கே. பாக்யராஜுக்கு நன்றி. இந்த ஆண்டு தேசிய விருதுக்கான நடுவர் குழுவில் தென்னிந்திய பிரதிநிதியாக தமிழ்நாடு சார்பில் நான் இடம் பெற்றிருந்தேன். இந்த நடுவர் குழுவில் நான் தான் மிகவும் இளையவன். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கும் பட்டியலில் 'பார்க்கிங்' படத்துடன் வேறு சில படங்களும் போட்டியில் இருந்தன. இந்தத் தருணத்தில் கே. பாக்யராஜ் படங்களில் இடம் பிடித்திருக்கும் திரைக்கதை நுட்பங்களால் உந்தப்பட்ட நான் அவருடைய திரைக்கதை மேஜிக்கை உதாரணமாக பேசி தான் 'பார்க்கிங்' படம் தேசிய விருதுக்கு தேர்வானது. எனவே 'பார்க்கிங்' படம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் கே. பாக்யராஜ் இருக்கிறார். திரைக்கதை என்றால் தமிழ் சினிமா தான் நிகரற்றது. இத்தனை ஆண்டு காலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை போன்ற சில விஷயங்களை பேசி பரிந்துரைத்தேன்.
அப்பா அம்மாவை நேசிப்பவர்கள் யாரும் தோற்க மாட்டார்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும் அவருடைய தந்தை மீது அளவற்ற நேசம் கொண்டவர். இதற்காகவே இந்த படம் வெற்றி பெறுவதற்கு அவருடைய தந்தையின் பரிபூரண ஆசி உண்டு என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்மறை எங்கும் இருக்கக் கூடாது என விரும்பும் நான் என் படத்தின் டைட்டிலில் கூட 'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு', 'இப்படை வெல்லும்' என பெயர் வைத்திருப்பேன். ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் பாசிட்டிவிட்டி இருக்கும். அவர் இந்த படத்தில் பங்களிப்பு வழங்கியது இப்படத்திற்காக வெற்றியை குறிக்கிறது.
மோசடி குறித்து படம் இயக்குவது கடினம். ஏடிஎம் பண மோசடி குறித்து நான் முதன்முதலாக 'சிகரம் தொடு' படத்தை உருவாக்கினேன். ஒரே ஒரு விசிட்டிங் கார்டை வைத்துக்கொண்டு ஒரு நபர் 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர்தான் சிகரம் தொடு படத்தை உருவாக்குவதற்கான இன்ஸ்பிரேஷன். இதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த நபரை சந்தித்து பல விஷயங்களை கேட்டு அந்த படத்தை உருவாக்கினேன். அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர் இங்கு 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து அவர் அங்கு பிரம்மாண்டமான வீட்டை கட்டியிருந்தார்.
சம்பாதிப்பது கடினம், அதை செலவழிப்பது எளிது, அதை திருடுவது அதைவிட எளிது. ஆனால் இதற்கு மூளை அதிகமாக வேண்டும். அதனால் இந்தப் படத்திலும் மோசடிகள் பற்றி நிறைய விவரங்களை சொல்லி இருப்பார்கள். இவை மக்களுக்கு பிடித்தவையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தால் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இன்று கன்டென்ட் உள்ள படங்கள் தான் வெற்றி பெறுகிறது,'' என்றார்.
விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா பேசுகையில், ''இந்த நிகழ்விற்கும், மேடையில் வீற்றிருக்கும் படக்குழுவினருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் தொகுதி அருகில் உள்ளதாலும், என்னுடைய நண்பர்களின் அழைப்பின் காரணமாகவும் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இது போன்ற நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் எங்கள் கட்சியின் மறைந்த தலைவர் கலைஞர் ஐயா, தமிழக முதல்வர், தமிழகத்தின் துணை முதல்வர் அனைவரும் திரைத்துறையில் இருந்து தான் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அந்தக் கட்சியில் இருந்து வந்தவன் என்பதால் இந்த மேடையில் இருப்பதை பெருமிதமாக கருதுகிறேன்.
இயக்குநர் கே .பாக்யராஜின் காலகட்டத்தில் ஒவ்வொரு திரைப்படங்களும் ஆண்டு கணக்கில் ஓடும். ஆனால் இன்று மூன்று நாள் ஓடிய படங்களுக்கு மெகா ஹிட் என விளம்பரம் செய்கிறார்கள். அந்த அளவிற்கு கால சூழல் மாறி இருக்கிறது.
இன்றுள்ள இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் சினிமாவில் இருக்கும் நடிகர்களை பார்த்து தான் தங்களை வழி நடத்திக் கொள்கிறார்கள். இதற்காகத்தான் படத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள் சிகரெட் பிடித்தால் அதற்கு கீழே எச்சரிக்கை வாசகம் இடம்பெறுகிறது. இருந்தாலும் இன்று கருத்துள்ள படங்கள் அதிகம் வருவதில்லை.
இந்தப் படத்தில் மோசடி குறித்து பேசி இருக்கிறார்கள். இன்று அனைத்து துறையிலும் மோசடி இருக்கிறது. இதில் யார் அதிகம் ஏமாறுகிறார்கள் என்றால், படித்தவர்கள் தான் அதிகம். இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் நம்மிடம் இருக்கும் பேராசை தான்.
சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் என்னை தேடி வந்து பலரும் பத்து லட்சம் கட்டினோம் மோசடி செய்து விட்டார்கள் என்று புலம்புவார்கள், புகார் அளிப்பார்கள். நான் காவல்துறையில் புகார் அளிக்குமாறு பரிந்துரைப்பேன்.
நமக்கு எது தேவை என்பதை நன்றாக திட்டமிட்டு அளவுடன் வாழ்ந்தால் மோசடியில் சிக்க மாட்டோம். மேலும் மோசடி குறித்து அரசாங்கம் மட்டுமே பணியாற்றினால் இதை தடுக்க முடியாது. மக்களும் ஒருங்கிணைந்து ஆதரவு தர வேண்டும்.
தமிழக மக்கள் மிகவும் விழிப்பானவர்கள். சிறப்பானவர்கள். இந்த படத்தை பார்த்து, எதிர்காலத்தில் எந்த மோசடியிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இயக்குநர்-நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் பேசுகையில், ''எல்லோரும் ஏதேனும் ஒரு மோசடியில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி இருப்போம். இந்த படத்தை உருவாக்கி சிலரிடம் காண்பித்த போது அவர்கள் நாங்களும் ஐந்து லட்சத்தை இழந்திருக்கிறோம், பத்து லட்சத்தை இழந்திருக்கிறோம் என சொன்னார்கள். இவர்கள் எல்லாம் தெரிந்து எப்படி ஏமாறுக
ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!
தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கத்தில் ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படமான ’புரொடக்ஷன் நம்பர். 4’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல வருடங்களாக புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவித்து படங்கள் தயாரித்து வரும் இந்நிறுவனம் தமிழ் சினிமா துறையில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது.
அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய படங்களான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘3 BHK’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’புரொடக்ஷன் நம்பர்.3’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாரத் மற்றும் அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது சாந்தி டாக்கீஸ் நிறுவனம்.
படம் குறித்து தயாரிப்பாளர் அருண் விஸ்வா பகிர்ந்து கொண்டதாவது, “புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், ஃபைனலி பாரத் டீன் ஏஜ் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் வெகு பரிச்சியமான நபர். இந்தப் படத்திற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. அதுபோலவே, ‘குடும்பஸ்தன்’ படம் மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகை ஷான்வி மேக்னாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ‘புரொடக்ஷன் நம்பர். 4’ படம் மூலம் ஹரிஹரசுதனை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். பால சரவணன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு குறித்தான தகவல்களை விரைவில் வெளியிடுவோம்” என்றார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த மற்ற படங்களைப் போலவே, ‘புரொடக்ஷன் நம்பர்.4’ திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து பல நம்பிக்கைக்குரிய படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தரமான நல்ல சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும் படங்களைத் தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்திற்கு வித் லவ் ( With Love ) என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை , தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். k.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
முழுக்க முழுக்க நவீன இக் கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்திற்கு, தலைமுறையின் புழக்கத்தில் இருக்கும் “வித் லவ் ( With Love )” தலைப்பு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் தற்போது இணையம் முழுக்க பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்
'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட "அமரன்" திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த மதிப்புமிக்க தேர்வு, "அமரன்" பட குழுவினருக்கு பெருமைமிகு மைல்கல்லாக அமைகிறது, ஏனெனில் இந்தியாவின் சிறந்த சினிமா சாதனைகளை காட்சிப்படுத்தும், மிகவும் கொண்டாடப்படும் தளங்களில் ஒன்றான இந்தியன் பனோரமா பிரிவின் காட்சியைத் தொடங்கி வைக்கிறது.
இதுமட்டுமின்றி, "அமரன்" திரைப்படம் சர்வதேச போட்டிப் பிரிவில் கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பிரிவில் இடம்பெறும் சில இந்திய திரைப்படங்களில் ஒன்றாக "அமரன்" இருப்பது, அதன் கலை சிறப்பு மற்றும் சர்வதேச ஈர்ப்பை பிரதிபலிக்கிறது.
IFFI 2025-இல் "அமரன்" திரைப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர்கள் கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மற்றும் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். படக்குழு, நவம்பர் 21, 2025 அன்று நடைபெறும் விழாவின் திரையிடல் நிகழ்வில் பங்கேற்க கோவாவுக்கு பயணிக்கின்றனர்.
மேஜர் முகுந்த் வரதராஜன் (அசோக சக்ரா), அவர்களின் அசாதாரண உண்மைக்கதையால் ஈர்க்கப்பட்ட "அமரன்" நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை தேசபக்தி, தியாகம் மற்றும் அசைக்க முடியாத தைரியத்தை காட்சிப்படுத்தியத்தின் மூலம் நெகிழச் செய்துள்ளது. இந்தத் திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசத்திற்கான உயர்ந்த சேவையை போற்றுகிறது மற்றும் அவரது பாரம்பரியத்தை ஆழமான மற்றும் மிகச் சிறந்த சினிமா கதையாக்கத்தின் மூலம் முன்னிலைப்படுத்துகிறது.
IFFI 2025-இன் தொடக்கத் திரைப்படமாக "அமரன்" தேர்வு செய்யப்பட்டது, அதன் படைப்பு திறன், தொழில்நுட்ப சிறப்பு மற்றும் உணர்ச்சி ஒத்திசைவுக்கு சாட்சியாக நிற்கிறது. இது திரைப்படத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, இந்திய ஆயுதப்படைகளின் வீரம் மற்றும் இந்திய கதைசொல்லலின் நீடித்த கொண்டாட்டம் ஆகும்.
இந்தியாவின் மிகப்பெரிய சினிமா அங்கீகாரத்துடன், "அமரன்" தனது ஊக்கமளிக்கும் பயணத்தை ஒரு தலை சிறந்த சினிமா படைப்பாகவும், தேசிய வீரருக்கு அஞ்சலியாகவும் தொடர்கிறது.
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்
மும்பை, நவம்பர் 20, 2025: உங்கள் மனம் வெற்றிடங்களை நிரப்பத் தொடங்கி தவறாகப் புரிந்து கொள்ளும்போது என்ன நடக்கும்? நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி இதற்கு பதில் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்'. இதுவரை நாம் அதிகம் கேள்விப்பட்ட ஆனால் பார்த்திராத களத்துடன் கதை இருக்கும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் இந்தக் கதையில் கோமதி சங்கர் நடித்துள்ளார். திடுக் திருப்பங்கள், தீங்கிழைக்கும் நோக்கங்கள், கொலை மற்றும் தீர்க்கப்படாத பல அதிர்ச்சியை 'ஸ்டீபன்' தர இருக்கிறது.
தமிழில் தனித்துவமான கதைகளைத் தர வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் 'ஸ்டீபன்' இருக்கும். கதைக்கேற்ற அதன் துரத்தும் இசையும் உணர்வுகளும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும். வளர்ந்து வரும் படைப்பாளிகளும் தங்கள் பெயரை நிலை நிறுத்தி பெயர் பெற்றவர்களும் ஒரே தளத்தில் பார்வையாளர்களுக்கு தரமான கதைகளை கொடுப்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு நெட்ஃபிலிக்ஸ் தளமாகும்.
நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கன்டென்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் மாறுபட்ட கதைக்களங்களை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் தேர்ந்தெடுத்த சிறந்த கதைகளில் 'ஸ்டீபன்' படமும் ஒன்று. பல திருப்பங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர்தான் 'ஸ்டீபன்'. கதை தொடங்கியதில் இருந்து கடைசி ஃபிரேம் வரை பார்வையாளர்களை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி மற்றும் கோமதி சங்கர் திறமைகளை எடுத்து சொல்லும் கதையாகவும் இது இருக்கும். தரமான கதைகளை பார்வையாளர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நிலைப்பாட்டிற்கு இந்தக் கதை இன்னும் வலு சேர்க்கும்" என்றார்.
அறிமுக இயக்குநர் மிதுன் பகிர்ந்து கொண்டதாவது, “அமைதியான கால்குலேட்டட் சீரியல் கில்லர் பற்றிய கதைதான் 'ஸ்டீபன்'. அமைதியற்ற பல தனிப்பட்ட ரகசியங்களை தன்னுள் சுமந்து செல்கிறார். கோமதி சங்கர் தீவிரமாக, உண்மைக்கு நெருக்கமாக டைட்டில் ரோலில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநராக நிறைய விஷயங்கள் இதில் கற்றுக்கொண்டேன். இந்த கதையை மிகுந்த கவனத்துடனும் நேர்மையுடனும் முயற்சித்திருக்கிறோம். இந்த கதை சொல்ல வாய்ப்பு கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. எங்கள் கதையை 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் நெட்ஃபிலிக்ஸில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். அவர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.
தான் பார்க்கும் உணர்வுப்பூர்வமான மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த உலகிற்குள் 'ஸ்டீபன்' பார்வையாளர்களையும் அழைக்கிறார். டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸில் 'ஸ்டீபன்' ப்ரீமியர் ஆகிறது.
நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'
ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சாவு வீடு எனும் தலைப்பே வித்தியாசமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் சாவுப்புகைப்படங்கள் நிறைந்திருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்த்தவுடன் ஆவலைத் தூண்டுகிறது.
இப்படத்தினை பற்றி அறிமுக இயக்குநர் ஆண்டன் அஜித் கூறுகையில்..,
ஒரு சாவு வீடு, அங்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம், அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். கதையை எழுதுவதற்கு முன்பே தலைப்பை எழுதிவிட்டேன்.கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக அதை உணர்வார்கள். ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த உதய் தீப், பேட்டை படத்தில் நடித்த ஆதேஷ்பாலா
ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் K. சேஷாத்ரி, ஷ்யாம் ஜீவா, பவனா ஆகியோர் முக்கிய காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் நவம்பர் இறுதியில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.
ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!
நடிகர் நிவின் பாலி நடித்துள்ள “சர்வம் மாயா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், 2025 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இன்று வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம், படத்தின் வித்தியாசமான உலகை அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
“சர்வம் மாயா” போஸ்டர் இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மூவரின் சுவாரஸ்யமான முகபாவனைகள், அனைத்து தரப்பினரையும் கவரும் நகைச்சுவை கலாட்டாவாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. காமெடி டிராமா வகை படங்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார் என்பதையும் இந்த போஸ்டர் உணர்த்துகிறது.
அட்டகாசமான காமெடியுடன், கொண்டாட்ட உணர்வை பதிவு செய்யும் இந்த படம், இந்த ஆண்டின் சிறந்த விடுமுறை கொண்டாட்ட படமாக இருக்கும். மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காடின் மகனான அகில் சத்யன் இயக்கத்தில், ஃபயர்ஃப்ளை ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “சர்வம் மாயா”, 2025-ன் மிகப்பெரிய பண்டிகை வெளியீடுகளில் ஒன்றாக உருவாகி வருகிறது.
வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!
அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படமான, #NBK111 வரலாற்றுச் பின்னணியில் மாபெரும் படைப்பாக உருவாகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.
இப்போது படம் ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — மகத்தான, வலிமையான ராணியின் அத்தியாயம் துவங்கியுள்ளது.
அழகும், கம்பீரமும் கலந்த நயன்தாரா, இந்த மாபெரும் வரலாற்றுப் படத்தில் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக, கதாநாயகியாக இணைந்துள்ளார். படத்தின் கதையில் முக்கியத்துவமிக்க, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ஸ்ரீ ராம ராஜ்யம் ஆகிய மூன்று படங்களுக்கு பிறகு, பாலகிருஷ்ணா–நயன்தாரா ஜோடி நான்காவது முறையாக இணைவதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த அறிவிப்பு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.
அறிவிப்பு வீடியோவே பிரமிப்பை தருவதாக கண்களை கவரும் காட்சி அமைப்புடன்,படத்தின் பெருமையை உணர்த்துகிறது.
இப்பபடம் பற்றிய மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில், குதிரையில் வரலாற்று ராணியாக நயன்தாராவை அறிமுகப்படுத்தி, இயக்குநர் கோபிச்சந்து மலினேனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
முதல் முறையாக வரலாற்று படத்தில் களம் இறங்கும் இயக்குநர் கோபிசந்த் மலினேனி, தன் மாஸ் ஸ்டைலை இந்த பிரம்மாண்ட படைப்பிலும் வழங்கவுள்ளார். பெரும்பாலும் கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர்கள் வழங்கும் இவர், இம்முறை பாலகிருஷ்ணாவை இதுவரை காணாத புதிய கதாப்பாத்திரத்தில் வடிவமைக்கிறார். வரலாற்று பின்னணியில் எமோசனும் ஆக்சனும் கலந்த மிகப்பெரும் அனுபவத்தை, பிரம்மாண்ட காட்சிகளுடன் வழங்கப் போகிறது இந்த படம்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













