சற்று முன்

நடிகை ஸ்ரீதேவியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் நடிகை ஜான்வி கபூர்!   |    விஜய்குமார் ஜோடியாக 'அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் 'எலக்சன்'   |    சமத்துவம், சமூக நீதி, பாலின சமத்துவம் எல்லாம் சேரும் போது சமுதாயம் உயரும் - இயக்குநர் ரோஹந்த்   |    மகள் பெயரில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தொடங்கியுள்ள புரொடக்ஷன் ஸ்டுடியோ!   |    விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்ட படம்   |    அஞ்சலி மேனன் மற்றும் வருங்கால இயக்குனர்களுடன் கை கோர்க்க இருக்கும் KRG!   |    மீண்டும் வெளியாகும் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம்!   |    சுஷ்மிதா சென் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரேவை இன்ஸ்பிரேஷனாக கூறும் புது கதாநாயகி!   |    அனைவருக்கும் தெரிய வேண்டுமென 40 கோடியில் இப்படத்தை எடுத்துள்ளார் - நடிகர் பாபி சிம்ஹா   |    IPLக்கு பிறகு CCL தான் அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் போட்டியாகும்.   |    ஶ்ரீகாந்த் தேவா இசையில் பக்திப்பாடல் 'கருப்பன் எங்க குலசாமி' - அமைச்சர் பாராட்டி வெளியிட்டார்   |    அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆர் வி உதயகுமார்   |    அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!   |    கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!   |    நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய கதையின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜூன்   |    பிரபல பாடகர்-இசையமைப்பாளர் தயாரிப்பில் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’!   |    74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘புஷ்பா- தி ரைஸ்’   |    டிரெண்டி & ஃபேஷனபிள் தோற்றத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நடிகை சஞ்சனா நடராஜன்!   |    பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள படத்தின் வெளியீட்டு தேதி வெளியானது   |   

சினிமா செய்திகள்

கடலூரில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தனது பயணத்தை தொடங்கிய ஏஜிஎஸ்!
Updated on : 09 February 2024

திரைப்பட தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு திரையரங்குகளை தொடங்கியதன் மூலம் திரையரங்கு வணிகத்திலும் தடம் பதித்தது.  இதைத் தொடர்ந்து பழைய மகாபலிபுரம் சாலை, தி. நகர், மதுரவாயல் என தொடர்ந்து திரையரங்குகளை விரிவுபடுத்திய கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தலைமையிலான ஏஜிஎஸ் குழுமம் தற்போது சென்னையில் 18 திரைகளுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.  தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு உயர்தர திரையரங்கு அனுபவத்தை குறைந்த செலவில் தர வேண்டும் என்ற தனது நோக்கத்தின் முதல் படியாக கடலூரில் இருந்து தனது பயணத்தை இன்று (பிப்ரவரி 9) ஏஜிஎஸ் தொடங்கியுள்ளது.  கடலூரில் மிகப் பிரபலமான கிருஷ்ணாலயா தியேட்டர் உடன் இதற்காக இணைந்துள்ள ஏஜிஎஸ், புதுப் பொலிவுடன், அதிநவீன தொழில்நுட்பங்களுடன், பெருநகரங்களைப் போன்ற வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கை இன்று திறந்துள்ளது. ஏஜிஎஸ் குழுமம் சார்பாக ஐஸ்வர்யா கல்பாத்தி திரையரங்கை திறந்து வைத்தார்.  கண்கவர் 4கே திரையிடல், காதுகளுக்கு விருந்தளிக்கும் டால்பி அட்மாஸ் ஒலி என இதுவரை கடலூர் மாவட்டத்திலேயே இல்லாத அளவில் சர்வதேச தரத்தில் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கு தயாராகி உள்ளது. முதல் படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' திரையிடப்படுகிறது.  கடலூர் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தனது திரையரங்கு சேவைகளை ரசிகப் பெருமக்களுக்காக ஏஜிஎஸ் விரைவில் வழங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.   

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா