சற்று முன்

நடிகை ஸ்ரீதேவியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் நடிகை ஜான்வி கபூர்!   |    விஜய்குமார் ஜோடியாக 'அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் 'எலக்சன்'   |    சமத்துவம், சமூக நீதி, பாலின சமத்துவம் எல்லாம் சேரும் போது சமுதாயம் உயரும் - இயக்குநர் ரோஹந்த்   |    மகள் பெயரில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தொடங்கியுள்ள புரொடக்ஷன் ஸ்டுடியோ!   |    விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்ட படம்   |    அஞ்சலி மேனன் மற்றும் வருங்கால இயக்குனர்களுடன் கை கோர்க்க இருக்கும் KRG!   |    மீண்டும் வெளியாகும் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம்!   |    சுஷ்மிதா சென் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரேவை இன்ஸ்பிரேஷனாக கூறும் புது கதாநாயகி!   |    அனைவருக்கும் தெரிய வேண்டுமென 40 கோடியில் இப்படத்தை எடுத்துள்ளார் - நடிகர் பாபி சிம்ஹா   |    IPLக்கு பிறகு CCL தான் அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் போட்டியாகும்.   |    ஶ்ரீகாந்த் தேவா இசையில் பக்திப்பாடல் 'கருப்பன் எங்க குலசாமி' - அமைச்சர் பாராட்டி வெளியிட்டார்   |    அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆர் வி உதயகுமார்   |    அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!   |    கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!   |    நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய கதையின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜூன்   |    பிரபல பாடகர்-இசையமைப்பாளர் தயாரிப்பில் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’!   |    74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘புஷ்பா- தி ரைஸ்’   |    டிரெண்டி & ஃபேஷனபிள் தோற்றத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நடிகை சஞ்சனா நடராஜன்!   |    பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள படத்தின் வெளியீட்டு தேதி வெளியானது   |   

சினிமா செய்திகள்

ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்டுள்ள கவர்ச்சிகரமான போஸ்டர்!
Updated on : 22 January 2024

சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்பில், உருவாகும் மகத்தான படைப்பான "ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்"  திரைப்படத்தின் புதுமையான போஸ்டரை, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் புனித நாளில்,  பெருமையுடன் வெளியிட்டுள்ளது. கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவிருக்கும் இந்தத் திரைப்படம், மதிப்புமிக்க ராமாயணத்தின் சொல்லப்படாத அம்சங்களை கூறுவதோடு,  காவியக் கதையின் தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கும்.  ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்டுள்ள கவர்ச்சிகரமான போஸ்டர், அயோத்தியில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை எதிரொலிக்கும் வகையில், ரசிகர்களிடம் வரவேற்பை குவித்துள்ளது.  'ராமாயணத்தின் சொல்லப்படாத இதிகாசம்' என்ற டேக்லைன், ராமாயணம் குறித்து இதுவரை ஆவணப்படுத்தப்படாமல் இருக்கக்கூடிய அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படமாக, இப்படம் இருக்குமென்பதைக் குறிக்கிறது. மலைகள், நெருப்பு, நீர் மற்றும் ராமர் மற்றும் அனுமன் தெய்வீக இரட்டையர் போன்ற கூறுகளைக் கொண்ட இந்த போஸ்டர்,  அயோத்தியில் இந்த மகிழ்ச்சியான தருணத்தின் சாரத்தை படம்பிடித்து காட்டுவதாக அமைந்துள்ளது.  இயக்குநர் அவதூத் இயக்கும்   'ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்' படம், அதிரடி மிகுந்த ஆக்சன் காட்சிகளுடன், காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை உயிர்பிக்கும். கன்னடத்தில் பாராட்டுகளைக் குவித்த பிரபல தயாரிப்பாளர் K. A.சுரேஷ், சுரேஷ் ஆர்ட்ஸ் பேனரின் கீழ், இந்த லட்சியத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். பல மொழிகளில் இருந்து மதிப்புமிக்க முன்னணி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர், இது ஒரு மாறுபட்ட மற்றும் புகழ்மிகு ஒருங்கிணைப்பாக இருக்கும்.  தற்போது ஸ்டோரிபோர்டிங் மற்றும் VFX ஆரம்ப பணிகள் நடந்து வருகின்றன.  "ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்" படத்தின் தயாரிப்பு மற்றும் கதைக்களம் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படும்.  மொழித் தடைகளைத் தாண்டி எதிரொலிக்கும் மாறுபட்ட கதைகளை வழங்குவதில், பான் இந்தியா சினிமாவின் அர்ப்பணிப்புக்கு, இந்தப் படம் ஒரு சான்றாக இருக்கும்.  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா