சற்று முன்

மலேசியாவில் கோலாகலமாக நிறைவு பெற்றது 'விஜய் சேதுபதி 51' படப் படப்பிடிப்பு!   |    'குட் நைட்' கூட்டணியின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    விஜய் சேதுபதி, இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக கைகோர்க்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் கே ஆர்!   |    அதிரடி ஆக்சன் அதகளத்துடன் வெளியானது பிரபாஸின் 'சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்' டிரெய்லர்!   |    இங்கிருந்து பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள்!   |    ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை!   |    விஜய் சேதுபதி படத்தின் கதாசிரியர் அருள் செழியன் இயக்குனராக அறிமுகமாகும் குய்கோ!   |    கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் ரோலில் கெத்தாக நடிக்கலாம்.   |    இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!   |    ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண் - மனம் திரானந்த நாயகி நிரஞ்சனி   |    நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள்   |    இளையராஜா இசையில் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக பாடிய பாடல்!   |    இதுவரை இல்லாத தோற்றத்தில் நாக சைதன்யா நடிக்கும் 'தண்டேல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    வித்தியாசமான தோற்றத்தில் பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகை நடிக்கும் 'G2 '( குடாச்சாரி 2)   |    'தி வில்லேஜ்' எனும் திகில் தொடருடனான எனது ஒ டி டி டிஜிட்டல் தள அறிமுகம் - நடிகர் ஆர்யா   |    'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' குழுவின் நன்றி தெரிவிப்பு விழா!   |    அஜித் சாருக்கு நான் கொஞ்சம் நெருக்கம் ஆகியுள்ளேன் - நடிகை யாஷிகா ஆனந்த்!   |    ரஜினி ஜோடியாக நடித்த நடிகை முதன்மை வேடத்தில் நடிக்கும் 'ஆலகாலம்'   |    கோலாகலமாக நடைபெற்ற “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |   

சினிமா செய்திகள்

விருதுகளை அள்ளும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் 'ஜூட் பீட்டர்'
Updated on : 14 November 2023

இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று, தனது முதல் தமிழ் குறும்படமான ‘சஷ்தி’ (SHASHTHI) மூலமாக 2022ல் 35 சர்வதேச திரைப்பட விழாக்களில் 75 க்கும் மேற்பட்ட விருதுகளையும், தனது இரண்டாவது தமிழ் குறும்படமான ‘சரஸ்’ (SARAS) மூலமாக 2023ல் 20 சர்வேதேச திரைப்பட விழாக்களில் 70 க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்று அனைவருக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர் ஜூட் பீட்டர் டேமியான் என்ற சார்ட்டட் அக்கவுண்டன்ட். இவர் சார்ட்டட் அக்கவுண்டன்ட் சம்பந்தப்பட்ட துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அனுபவத்திற்குப் பிறகு திரை இயக்கத்தைப் பற்றி முறையாகப் பயின்று இந்திய சினிமாவிற்கும் இந்த சமூகத்திற்கும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று எடுத்த முயற்சியின் தொடக்கம்தான் அவரது முதல் இரண்டு குறும்படங்களான ‘சஷ்தி’யும்  ‘சரஸ்’ ம்.



 



தனது சொந்த சிந்தனை மற்றும் தனது அனுபவங்கள் வாயிலாக அறிந்தவற்றை தரமான கலை மற்றும் தொழில்நுட்பம் மூலமாக பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கான பொறுப்பு என அவர் ஒரு நிஜமான சாம்பியனாகவே இருக்க விரும்புகிறார்.



 



குழந்தைகளின் கடவுள் என்கிற ‘சஷ்தி’, மற்றும் கல்வியின் கடவுள் என்கிற ‘சரஸ்’ (சரஸ்வதி) என  அவரால் எழுதி, இயக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் அதற்கு சாட்சியங்களாக விளங்குகின்றன.



 



சஷ்தி குறும் படம், சற்றே வசதி குறைந்த தேவி என்ற பெண்ணைப் பற்றிய அபிப்ராயத்தை, எப்படி அதிகமான அறிதலும் மாறும் சூழ் நிலைகளும், குழந்தைகளின் கடவுளான சஷ்தியுடன் ஒப்பிடும் அளவிற்கு மாற்றுகின்றது என்பதை அறை மணி நேரத்தில் விளக்குகிறது. 



 



சமூக ரீதியாவும் பொருளாதார ரீதியாகவும் பலவீனமான பின்னணி கொண்ட சரஸ்வதி (சரஸ்) என்கிற பெண், நன்கு படிக்கும் தனது மகனை எப்படி உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வைக்க தீர்மானமாயிருக்கிறாள் என்பது பற்றி சொல்கிறது ‘சரஸ்’. 



 



செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர். எஸ்.கே.காயத்ரி, ஹாரீஸ் மூஸா, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் ‘சஷ்தி’யில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 



 



நீலிமா ராணி, என்.ஸ்ரீகிருஷ்ணா, வினைதா சிவகுமார் மற்றும் மாஸ்டர் சஞ்சீவ் ஆகியோர் ‘சரஸ்’ குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 



 



ரெட் கேமராவை பயன்படுத்தி ஒளிப்பதிவாளர் பிராங்க்ளின் ரிச்சர்டால் ‘சஷ்தி’ ஒளிப்பதிவு செய்யப்பட்டது. ஒளிப்பதிவாளர் ஜி.டி.ராஜா என்பவரால் ஆரி அலெக்ஸா கேமராவால் ‘சரஸ்’ ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு படங்களுக்கும் திரு. எம்.எஸ்,ஜோன்ஸ் ரூபர்ட் பின்னணி இசையமைக்க திரு.எஸ்.டி.பி சாமி லைவ் ரெக்கார்டிங், சவுண்ட் மிக்சிங் ஆகியவற்றை கவனித்தார். திரு.சிவகுமார் மோகனன் நிர்வாக தயாரிப்பாளராகவும் திரு குண்டல் ஆர்.பாபு படத்தொகுப்பாளராகவும் இருந்தனர். 



 



‘சஷ்தி’ ஆப்பிள் டிவி (ஐடியூன்ஸ் -iTunes) மற்றும் யூட்யூப்பிலும் (YouTube) பார்க்க கிடைக்கிறது. 



 



‘சரஸ்’ விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.  



 



‘சஷ்தி’ (SHASHTHI 2022) மற்றும் ‘சரஸ்’ (SARAS 2023) ஆகியவை பெற்ற விருதுகள் பற்றிய விவரங்கள் ஐ.எம்.டி.பி. (IMDB) இணையதள பக்கங்களில் கிடைக்கின்றன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா