சற்று முன்

சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |   

சினிமா செய்திகள்

தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக காட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - விக்ரம் பிரபு
Updated on : 09 November 2023

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ஆக்ஷன் கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமான ’ரெய்டு’ நவம்பர் 10, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார் மற்றும் இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இப்படத்தை எம் ஸ்டுடியோஸ், ஓப்பன்ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் ஆகியவற்றிற்காக தயாரிப்பாளர்கள் கே கனிஷ்க் & ஜிகே @ ஜி.மணிகண்ணன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.



 



இயக்குநர் கார்த்தி படத்தின் கதை குறித்து சொன்னபோது அதில் ஆக்‌ஷன், எமோஷன், காதல், நடனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருப்பதை உறுதியாக உணர்ந்ததாக நடிகர் விக்ரம் பிரபு இந்தப் படம் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும், தான் கமர்ஷியல் வளையத்திற்குள் படம் நடிப்பது குறித்து எப்போதும் அதிகம் யோசிப்பேன் என்றும் ஆனால், இப்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வெளியீட்டைப் பார்த்த பிறகு இயக்குநர் கார்த்தி தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக காட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.



 



’ரெய்டு’ சமூக பிரச்சனையுடன் கூடிய ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என இயக்குநர் கார்த்தி கூறியுள்ளார். ’ரெய்டு’ படத்தின் திரைக்கதையை தான் எழுதும்போது, கதாநாயகனின் கதாபாத்திரம் பக்கத்து வீட்டு பையன் போலவும் வேண்டும் அதே சமயம், மாஸ் ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் அதற்கேற்ப, விக்ரம் பிரபு இருந்தார் எனவும் கூறியுள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு அவர்தான் சரியானவர் என்று ஒட்டுமொத்த டீமும் கருதியது என்றார். மாஸ் மற்றும் யதார்த்தமான களங்களில் நடித்து ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துள்ள விக்ரம் பிரபு இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முழு உழைப்பைக் கொடுத்துள்ளார் என்றவர் இயக்குநர் முத்தையா சாரின் வசனங்கள் இந்தப் படத்தை வணிக ரீதியாக எடுத்துச் செல்வதற்கு பெரும்பலமாக அமைந்து கமர்ஷியல் வெற்றியை ஈட்டித் தர இருக்கிறது என்கிறார் இயக்குநர் கார்த்தி.



 



நடிகை ஸ்ரீ திவ்யா நடிகையாக தனக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுத்த தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுப்பதில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார். தனது கம்பேக் படமான ’ரெய்டு’ திரைப்படம் தனக்கு நடிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்துள்ளதாகவும் அதில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். தான் ஏற்கனவே விக்ரம் பிரபுவுடன் நடித்தப் படத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது எனக் கூறியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.



 



எம் ஸ்டுடியோஸ், ஓபன்ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் ஆகியவற்றின் தயாரிப்பாளர்கள் கே கனிஷ்க் & ஜிகே @ ஜி. மணிகண்ணன் ’ரெய்டு’ திரைப்படத்திற்கு அதன் வெளியீட்டிற்கு முன்பிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறியுள்ளார். விக்ரம் பிரபுவின் முந்தைய படங்களான ‘டாணாகாரன்’ மற்றும் ‘இறுகப்பற்று’ ஆகியவற்றின் வெற்றி அவரை குடும்ப பார்வையாளர்களுக்குப் பிடித்தமானவராக மாற்றி இருக்கிறது. இயக்குநர் கார்த்தி ஸ்கிரிப்டாக தங்களிடம் சொன்னதை அவர் அப்படியே திரையில் கொண்டு வந்திருப்பதும் தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறினர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா