சற்று முன்

இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் பங்குபெறும் கல்கி 2898 கிபி க்ரோனிகல்ஸ் நேர்காணல்!   |    மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா!   |    இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது !!   |    இந்திய இசைப்பயணத்தை அறிவித்தார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ; ரசிகர்கள் உற்சாகம்   |    பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் இணைந்து கலக்கும் 'கல்கி 2898 கி.பி' திரைப்பட புதிய பாடல்!   |    இன்றும் 'வெள்ளி விழா நாயகன்' தான் என்பதை நிரூபித்துள்ள நடிகர் மோகன்!   |    விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள்!   |    சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து உதவி கரம் நீட்டியுள்ள திரைபட கதாநாயகர்கள்!   |    உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது 'புஷ்பா 2: தி ரூல்'!   |    AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தாது தயாரிப்பு நிறுவனம்!   |    ’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு! - நடிகர் சரத்குமார்   |    சூரியின் உழைப்பு அசாதாரணமானது! - 'கருடன்' தேங்க்ஸ் கிவிங் மீட்டில் இயக்குனர் வெற்றிமாறன்   |    அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை'   |    25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’   |    ஆறு வருட தேடலுக்குப் பிறகு இசையமைப்பதற்கான வாய்ப்பு! - இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன்   |    'டகோயிட்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!   |    நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை படம் பிடித்து காட்டும் படம் ’தோனிமா’!   |    அவர் பெயரைக் கேட்டதுமே ஓகே சொல்லி விட்டேன்! - நடிகை அபிராமி   |    பஞ்சம் பிழைக்க வந்த அதே ஊரில் இன்று பாராட்டு! - விஜய் சேதுபதி   |    பிரபாஸின் 'கல்கி 2898 AD ' பட முன்னோட்டம் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு பெருமை சேர்த்த மூத்த கலைஞர் ரவி கே சந்திரன்!
Updated on : 09 November 2023

விருதுகள், பாராட்டுகள் மற்றும் அங்கீகாரங்கள் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனுக்கு புதிதல்ல. இவற்றுக்கு மகுடம் வைக்கும் அளவிலும் நமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் சர்வதேச புகழ் பெற்ற எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  போலந்தில் நடைபெறும் இவ்விழாவின் 31வது பதிப்பில் ரவி கே சந்திரன் ஜூரியாக பங்காற்றுவார். நாற்பது வருடங்களாக ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ள ரவி கே சந்திரன், 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'பிளாக்', 'மை நேம் இஸ் கான்' உள்ளிட்ட பல மாபெரும் வெற்றி பெற்ற மற்றும் விருதுகளை குவித்த பன்மொழி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார்.  “கேமரிமேஜ்“ என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாவாகும். ஒளிப்பதிவு கலையை இது கொண்டாடுகிறது. உலகெங்கிலும் உள்ள திரை கலைஞர்களால் ஆஸ்கருக்கு சமமாக கருதப்படும் இந்த விழா, விருது பெறும் திரைப்படங்களையும் கலைஞர்களையும் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதற்காக புகழ் பெற்று விளங்குகிறது. மேலும், ஆஸ்கரை போல் இல்லாமல், குறிப்பிட்ட பிரிவுகளில் விருதுகளை வழங்கி திரைப்பட உருவாக்க கலை மீது தனக்குள்ள அர்ப்பணிப்பை இது பறைசாற்றுகிறது. 'மை நேம் இஸ் கான்' படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக 

2010ம் ஆண்டில் எனர்கா கேமரிமேஜால் கோல்டன் ஃபிராக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் ஆவார்.  இந்த வருடத்தின் எனர்கா கேமரிமேஜ் விழா நவம்பர் 11 முதல் 18 வரை போலந்தில் உள்ள டோரன் நகரில் நடைபெறுகிறது. டேரன் அரோனோஃப்ஸ்கி, ரோஜர் டீக்கின்ஸ் மற்றும் ரால்ப் ஃபியன்னெஸ் உள்ளிட்ட சர்வதேச புகழ் பெற்ற பல கலைஞர்கள் இவ்விழாவுக்கு இதற்கு முன்னர் அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐ எஸ் சி என்று அழைக்கப்படும் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தையும் எனர்கா கேமரிமேஜ் விழாவில் ரவி கே சந்திரன் பிரதிநிதித்துவப்படுத்துவார். கேமரிமேஜ் ஜூரியாக மூத்த கலைஞர் ரவி கே சந்திரன் நியமிக்கப்பட்டிருப்பது இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு பெருமை என்று கருதப்படுகிறது. மேலும், இந்தியத் திரைப்படத் துறை சர்வதேச அரங்கில் அதற்குரிய அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒரு படியாகவும் இந்த நியமனம் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் இடம்பெற்றுள்ள ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா