சற்று முன்

’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு! - நடிகர் சரத்குமார்   |    சூரியின் உழைப்பு அசாதாரணமானது! - 'கருடன்' தேங்க்ஸ் கிவிங் மீட்டில் இயக்குனர் வெற்றிமாறன்   |    அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை'   |    25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’   |    ஆறு வருட தேடலுக்குப் பிறகு இசையமைப்பதற்கான வாய்ப்பு! - இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன்   |    'டகோயிட்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!   |    நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை படம் பிடித்து காட்டும் படம் ’தோனிமா’!   |    அவர் பெயரைக் கேட்டதுமே ஓகே சொல்லி விட்டேன்! - நடிகை அபிராமி   |    பஞ்சம் பிழைக்க வந்த அதே ஊரில் இன்று பாராட்டு! - விஜய் சேதுபதி   |    பிரபாஸின் 'கல்கி 2898 AD ' பட முன்னோட்டம் வெளியீடு   |    திரைப்பட படைப்பாளிகளுக்கு பிரபல நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பொன்னான வாய்ப்பு!   |    ‘மல்லி’ க்காக இணைந்த 80'ஸ் கதாநாயகிகள்   |    நீட் தேர்வின் மூலம் ஏற்படும் அவதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘அஞ்சாமை’!   |    ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட 'கருடன்' இசை வெளியீட்டு விழா   |    வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |   

சினிமா செய்திகள்

உலக அளவில் சாதனை படைத்துள்ள 'ஜவான்'
Updated on : 08 September 2023

ஷாருக்கானின் 'ஜவான்', இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது.



 



ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமான ஜவான், உண்மையில் ஒரு திருவிழாவாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டை திரையரங்குகளுக்கு வெளியே பலத்த ஆரவாரம் மற்றும் நடனத்துடன் மைதானங்களைப் போல் மாற்றி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆக்சன் என்டர்டெய்னருக்கு இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத வகையில் ஷாருக் கானின் மேஜிக் பார்வையாளர்களின் இதயங்களை வென்றிருக்கிறது. இதன் விளைவாக 'ஜவான்' வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாயை வசூல் செய்து, புதிய சாதனையை படைத்தது. இதன் மூலம் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் ஷாருக்கான் மீண்டும் கால் பதித்துள்ளார்.



 



ஷாருக்கான் - ரசிகர்களின் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைப்பார் என்பது ஜவான் படத்திற்கான முன்பதிவு மூலமே தெரிய வந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என முன்பே கணிக்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே 'ஜவான்' அனைவரின் கணிப்புக்கும் அப்பாற்பட்டு 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் அற்புதமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரை எந்த இந்திய படத்திற்கும் கிடைக்காத மிகப்பெரிய ஓப்பனிங் ...இந்த ஜவான் படத்திற்கு கிடைத்திருக்கிறது. மேலும் இந்தி திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையும் ஜவான் பதிவு செய்துள்ளது.



 



ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா