சற்று முன்

ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் ஜவான் படத்தின் 'ஆராராரி ராரோ' இசை வீடியோ!   |    மீண்டும் போலீஸ் அதிகாரியாக 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!   |    மலையாள திரைஉலகில் அடியெடுத்து வைக்கும் சுபாஸ்கரனின் 'லைக்கா நிறுவனம்'   |    ரன்பீர் கபூரின் பிறந்தநாள் சிறப்பாக, அனிமல் டீஸர் வெளியிடப்பட்டது!   |    தணிக்கைக் குழு அதிகாரிகளிடமிருந்து 'யு' சான்றிதழுடன் பாராட்டையும் பெற்ற '800' திரைப்படம்!   |    என்னை நான் புரிந்து கொள்ள இந்த படம் உதவி இருக்கிறது” - நடிகர் விதார்த்   |    'செவ்வாய்கிழமை' ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும். வித்தியாசமான படம்   |    அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் பாலாவின் அடுத்த படைப்பு !   |    தன் பாலின சேர்க்கையாளர்களின் உணர்வுகளை கூறும் படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'   |    ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் பிரம்மாண்டம்!   |    'சந்திரமுகி 2' க்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ்!   |    ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் பிரமாண்டமான புதிய திரைப்படம்!   |    திரைப்படம் நடிக்காமல் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? - சுப வீரபாண்டியன்   |    வேல்ஸ் சர்வதேச விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 'ஷாட் பூட் த்ரீ' பட நடிகர்கள்!   |    துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படப்பிடிப்பு ஆரம்பம்!   |    நவரசநாயகன் பட்டத்தை யாரும் அடைய முடியாது. அவருக்கு நிகர் அவர் தான் - இயக்குனர் ஜெயமுருகன்   |    'ஜவான்' திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்த ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை   |    இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு சூறவாளியாக அடித்து தூள் கிளப்பி வரும் 'ஜவான்'   |    'ஜவான்' படத்திற்காக டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!   |    ஸ்ருதிஹாசன் - கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் ஒரு புதிய இசை படைப்பு   |   

சினிமா செய்திகள்

மாபெரும் சாதனை படைத்துள்ள விஜய்யின் 'லியோ'
Updated on : 08 September 2023

சென்னை, செப்டம்பர் 08, 2023: இன்று, அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான "லியோ"  இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த "வாரிசு", திரைப்படம் ஜனவரி 2023-ல் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்நிலையில் "லியோ" திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை  படைத்துள்ளது.



 



"லியோ" திரைப்பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பிரமாண்டமானதாக இருந்து வருகிறது. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், லியோ படத்தின் யூகே மற்றும் ஐரோப்பாவிற்கான திரையரங்கு உரிமைகளைப் பெற்றுள்ளது. பட வெளியீட்டிற்கு ஆறு வாரங்களுக்கு முன்பே முன்பதிவுகளை தொடங்கி முன்னோடியான நகர்வை மேற்கொண்டது. இந்த உத்தி மிகப் பிரமாதமாக பலனளிப்பதாக தெரிகிறது. "லியோ" இப்போது இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாக முன்பதிவுகளைத் தொடங்கிய முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.



 



"லியோ"  திரைப்படத்திற்கு கிடைத்து வரும் அற்புதமான வரவேற்பால், அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மிகவும் உற்சாகமடைந்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் கூடுதலான  டிக்கெட்கள்  விற்பனையாகி சாதனை படைக்குமென எதிர்பார்க்க படுகிறது. முன்னதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தளபதி விஜய்யின் "பீஸ்ட்"  திரைப்படத்தை அமெரிக்காவில் விநியோகம் செய்தது. பீஸ்ட் படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டில் விஜய்யின் அதிக வசூலையும் பெற்றது. இதே போன்று, இங்கிலாந்தில் அவர்கள் வெளியிட்ட "வாரிசு" அதே மைல்கல்லை எட்டியதோடு, இங்கிலாந்தில் தளபதி விஜய்க்கு மற்றொரு சிறந்த வருவாயை ஈட்டி காட்டி சாதனை படைத்தது.



 



அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து கூறும்போது, “ லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள். இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை  உருவாக்க வேண்டும் என்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.



 



வெளிநாட்டு தமிழ் திரைப்பட விநியோகத்தில் புகழ்பெற்ற நிறுவனமான, அஹிம்சா என்டர்டெயின்மென்ட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகளுடன் புதுமையான அணுகுமுறையில் "பீஸ்ட்", "வாரிசு", "மாமன்னன்", "போர் தொழில்", "கோப்ரா", உட்பட பல படங்கள் பிரமாண்ட சாதனைகள் படைத்துள்ளது. “நானே வருவேன்”, “வெந்து தணிந்தது காடு”, “காத்து வாக்குல ரெண்டு காதல்”, “லவ் டுடே”, மற்றும் “விடுதலை பார்ட் 1” போன்ற படங்களும்  இந்த வரிசையில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா