சற்று முன்
சினிமா செய்திகள்
‘ஷோபா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் இதயங்களை கவந்திருக்கும் ‘மாடர்ன் லவ்' நடிகை !
Updated on : 20 May 2023

’தி மிஸ் ஹைதராபாத் 2018’ வென்ற இளம் நடிகையான ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஒரிஜினல் தொடரான ’மாடர்ன் லவ் சென்னை'யில் 'ஷோபா'வாக தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பேசு பொருளாக உள்ளார்.
ராஜு முருகனால் தழுவி, எழுதி, இயக்கப்பட்ட முதல் அத்தியாயம் ‘லால்குண்டா பொம்மைகள்’. இதில் மென்மையான இதயம் கொண்ட டாம்போயிஷ் பெண்ணாக அவர் நடித்துள்ளார். இவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. சென்னைப் பெண்ணின் பாத்திரத்தில் ஸ்ரீ கௌரி பிரியாவின் சரியான தோற்றம், தன்னிச்சையான மற்றும் இயல்பான நடிப்பு போன்றவை பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. கண்கள் வழியே வெளிப்படுத்தும் நடிப்பு, சாமர்த்தியம் மற்றும் வசீகரிக்கும் தோற்றம் என அவரது நடிப்புத் திறமையை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.
‘ரைட்டர் பத்மபூஷன்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக சிறந்த விமர்சனங்களைப் பெற்ற இவர், இப்போது தென்னிந்தியாவில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறியுள்ளார்.
தற்போது, நடிகை ஸ்ரீ கௌரி பிரியா பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களால் விரைவில் வெளியிடப்படும்.
சமீபத்திய செய்திகள்
இசைஞானியின் ஆசியுடன் புதிய படத்தை பூஜையுடன் துவக்கினார் இயக்குநர் பாரதி கணேஷ்!
கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'கண்ணுபடப் போகுதைய்யா' படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். தற்போது 5E கிரியேசன்ஸ் சார்பில் சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி, சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார் பாரதி கணேஷ்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இன்று இசைஞானியின் 80வது பிறந்த நாளன்று அவரிடம் நேரில் ஆசி பெற்று இந்த படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் துவங்கி உள்ளனர்.
சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் இயற்கை, வாரிசு புகழ் நடிகர் கிக் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, திரு குமரன் (மகாலட்சுமி மகளிர் கல்லூரி MD), அஜய் (ஜமீலா A.K), ஆஷிகா யாஷ் (Dada) பெங்களூரு ஈஸ்வரி அம்மா, ஜாஸ்பர், மணிரத்னம், மானஸ்வி கொட்டாச்சி, ஷிவானி ஹரிகுமார், ராக்ஸ்டார் கமலேஷ், ஆர்வன் வெற்றி இளங்கோ, முகுந்தன் மற்றும் நிஜய் என்ற திண்டுக்கல் நஷிர் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபு கவனிக்க, படத்தொகுப்பை நாகூர் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார், மக்கள் தொடர்பு - A.ஜான், இணை இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனர் - பவித்ரா தேவராஜன் BE, Stills – கதிர், தயாரிப்பு மேற்பார்வை - A.V.பழனிச்சாமி.
இன்றைய 5G ஜெனேரேஷன் காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை, அறிவு, ஆற்றல் செயல்பாடுகள் மற்றும் இன்றைய சமூக சூழ்நிலைகள், வாழ்வியலின் பார்வை பற்றிய உணர்வுப்பூர்வமான கருத்தினை விளக்கும் ஒரு பதிவாக சென்னை சிட்டியில் நடக்கும் ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்தப்படம் தயாராகிறது.
'ஜென்டில் மேன்-2' மூலம் மீண்டும் தமிழில் இசையமைக்கும் ஆஸ்கர் வின்னர் இசையமைப்பாளர்!
தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன் ' K.T.குஞ்சுமோன். சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். தற்போது மீண்டும் பிரமாண்ட திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.
S.S.ராஜ்மௌலியின் #RRR படத்தின் 'நாட்டு நாட்டு.. ' பாடலுக்காக 'பெஸ்ட் ஒரிஜினல் சாங்' ஆஸ்கர் விருதை பெற்று உலகமே கொண்டாடி வரும் இசையமைப்பாளர் #M.M.கீரவாணி, "ஜென்டில் மேன்-2" படத்தின் மூலம் மீண்டும் தமிழில் இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் அடுத்த கட்டமாக, இப்படத்தின் டைரக்டர் A.கோகுல் கிருஷ்ணா ஐதராபாத்திற்கு சென்று முழு கதையையும் கீரவாணிக்கு நேற்று சொல்லி முடித்தார். கதை பிரமாண்டமாக இருக்கிறது.. அடுத்த மாதமே கம்போசிங் ஆரம்பித்து விடலாம் என்று ஜென்டில் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனிடன் கீரவாணி சொன்னார். இதை பிரமாண்டமாக தயாரிக்க போகிறேன் என்று கீரவாணியிடம் குஞ்சுமோன் சொல்ல,
சூப்பர்.. வாழ்த்துக்கள் சார் என்றார் கீரவாணி.
அதற்கான வேலைகளை விரைந்து செயல்படுத்தி வருகிறார், K.T.குஞ்சுமோன்.
#Nikhil20 படத்தின் தலைப்பு 'சுயம்பு' என வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட லுக் வெளியாகியுள்ளது!
நடிகர் நிகிலின் 20வது படத்தின் ப்ரீ-லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து, நிகிலின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். #Nikhil20 படத்திற்கு கம்பீரமாக 'சுயம்பு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
'சுயம்பு' என்றால் 'தானாக பிறந்தது‘ அல்லது 'தன் சொந்த விருப்பத்தால் உருவாக்கப்பட்டது' என அர்த்தம். முதல் பார்வை போஸ்டரில் நிகில் போர்க்களத்தில் ஒரு மூர்க்கமான வீரராக உள்ளார். ஒரு வழக்கமான போர் வீரனைப் போல நீண்ட கூந்தலைக் கொண்டு, ஒரு கையில் ஆயுதம் (ஈட்டி) மற்றும் மற்றொரு கையில் கேடயத்துடனும் உள்ளார். இந்தப் படத்திற்காக அவரது தோற்றம் குறிப்பிடத்தகுந்ததாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தயாரிப்பாளர்கள் முன்பு வெளியிட்டுள்ள மோஷன் போஸ்டரின்படி, இது ஒரு மில்லினியத்திற்கு முந்தைய கதை என்று தெரிவித்துள்ளனர். இது ஒரு தனி மனிதனின் காவியமாக, ஒரு பேரரசின் பொற்காலத் தொடக்கமாக உருவானதையும் கூறுகிறது. மேலும், நிகில் 'தி லெஜண்டரி வாரியர்' என்று இதில் அறிமுகப்படுத்தப்படுகிறார்.
வெளியாகியுள்ள முதல் பார்வை மற்றும் கான்செப்ட் வீடியோ, இந்த புகழ்பெற்ற போர் வீரரின் காவிய படைப்பு மகத்தானதாக வெளிவர இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இந்தப் படத்திற்கு இப்போதிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை படக்குழு உருவாக்கி வருகிறது.
நிகிலின் சினிமா பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் 'சுயம்பு'. இது சிறந்த தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கப்படுகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.
என்னை பெண்ணியவாதியா என்று கூட கேட்டார்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ்
பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது.
யார் இந்த மீனா சாப்ரியா?
17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து அவரின் கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்து. PVR குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVRன் உதவி மேலாளராகிறார் மீனா சாப்ரியா. அதனைத் தொடர்ந்து, “UNSTOPPABLE ANGELS” என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சிறப்பிக்க உதவி வருகிறார் மீனா சாப்ரியா.
இவரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் பேசியதாவது:
எழுத்தாளர் மீனா சாப்ரியா பேசும்போது,
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. இது போன்ற ஒரு சாதாரண நிகழ்விற்கு வருகை தந்ததற்கு நன்றி.
குட் நைட் படத்தின் வெற்றிக்கு பின் இங்கு வந்துள்ள தயாரிப்பாளர் யுவராஜுக்கு நன்றி.
அண்ணாதுரை பற்றி சொல்லவேண்டுமென்றால் வார்த்தைகள் இல்லை. ஆனந்த் மஹிந்திரா சொன்னது போல், “இந்தியாவின் மேலாண்மை பேராசிரியர்” அண்ணாதுரை.
நீண்டநாளாக எனக்கென ஒரு மேடை கிடைக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, நான் நடிக்கவில்லை என்றாலும், எனக்கான ஒரு மேடையை நான் அமைத்துக் கொண்டது மிகவும் பெருமையாக உள்ளது.
நான் தவறான பாதையில் செல்கிறேன் என்பதை புரிந்துகொள்ள எனக்கு 20 வருடங்கள் ஆனது. “UNSTOPPABLE ANGELS” மூலமாக நான் பல பெண்களை உயரத்திற்கு கொண்டுவர நினைக்கிறேன்.
நான் 19 வருடமாக சினிமாத் துறையில் இருக்கிறேன். நான் கலந்து கொண்ட முதல் படப் பூஜை “MIC SET” ஸ்ரீராமின் படத்தின் பூஜை தான் என்றார்.
ஆட்டோ அண்ணாதுரை பேசும்போது,
எனக்கு மேடை புதிதல்ல. ஆனால், இந்த மேடை புதிதாக இருக்கிறது. எனக்கு பத்திரிகையாளர்கள் மீது தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை இருக்கிறது.
மீனா சாப்ரியா அவர்களை விட அன்ஸ்டாப்பபில் லேடி என்று பார்த்தால் அவர்களின் தாயார் தான். அவரின் ஆசீர்வாதம் எப்போதும் தேவை.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,
முதலில் என்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்த போது நான் வருகிறேன் என்று கூறிவிட்டேன்.
ஆனால், அதன் பின் புத்தகத்தையும் மீனாவின் கதையை பற்றியும் தெரியாமல் எப்படி செல்வது என்று சிந்தித்தேன். பின்பு மீனாவை தொடர்பு கொண்டு, அவரின் கதையை கேட்டேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்தித்த போது, எனக்கு என் தாய் தான் நினைவுக்கு வந்தார்.
சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் “UNSTOPPABLE”ஆக இருப்பது தான் காரணம்.
அதையே மீனா அவர்கள் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இந்த புத்தகம் பெரிய அளவில் ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன்.
நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்த புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதிய என்று கூட கேட்டார்கள் அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவரானவர்கள் உள்ளனர் பெண்களிலும் தவரானவர்கள் உள்ளனர்.
மைக் செட் ஸ்ரீராம் பேசும்போது,
மீனா மேடத்தை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். “UNSTOPPABLE” என்ற வார்த்தைக்கு மீனா சாப்ரியா மேடம் தான் பொருத்தமானவர்.
இவரை போன்ற ஒருவருடன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
ஒருநாள் மீனா மேடத்தை சந்திக்க வேண்டும் என்று அவரை தொடர்பு கொண்ட போது, நான் மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்கிறேன் கண்ணா, வந்தபின் சந்திப்போம் என்றார். இந்த வயதிலும் ஒருவர் படிக்க ஆசைப்படுகிறார் என்றால் அவர் இன்னும் எந்த உயரத்திற்கு செல்வார் என்று நினைத்து பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
அவர் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
நடிகை/தயாரிப்பாளர் சினேகா நாயர் பேசும்போது,
இங்கு பேசுவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மீனாவுடன் பயணித்திருக்கிறேன். எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. அது அனைத்தையும் நாங்கள் சமாளித்து இந்த உயரத்திற்கு வந்துள்ளோம்.
ஆண்களுடன் வேலை செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, அதை பெண்கள் யாரும் தட்டிக்கழிக்க முடியாது.
இந்த விழாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷை அழைக்கலாம் என்று மீனா சொன்னபோது, அவரை தவிர வேறு யாரும் சரியாக இருக்க முடியாது என்று கூறினேன் என்றார்.
தயாரிப்பாளர் யுவராஜ் பேசும்போது,
நான் குட் நைட் படம் ஆரம்பிக்கும் போது எங்களுக்கு ஆதரவளிக்க யாரும் முன்வரவில்லை. முதல் பார்வை வெளியான பின்பு மீனா சாப்ரியா மேடம் கொடுத்த ஆதரவு மறக்க முடியாத ஒன்று. அதற்கு நன்றி, என்றார்.
அதன் பின், மீனா சாப்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், மைக் செட் ஸ்ரீராம், யுவராஜ், சினேகா நாயர் அனைவரும் இணைந்து “UNSTOPPABLE” புத்தகத்தை வெளியிட்டனர்.
மிரள வைக்கும் மோஷன் வீடியோவுடன் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!
குளோபல் ஸ்டார் நடிகர் ராம் சரண், 'வி மெகா பிக்சர்ஸ்' என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் தனது அடுத்த பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளார். தனது நண்பரான விக்ரம் ரெட்டியின் UV கிரியேஷன்ஷுடன் இணைந்து ரசிகர்களுக்கு தனித்துவமான கதைகளை அளிப்பதுவும், அதே வேளையில், திரையுலகில் புதிய திறமைகளை உருவாக்குவது மற்றும் ஊக்குவிப்பதுவே இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்பது தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற ப்ளாக்பஸ்டர் படைப்புகளை வழங்கிய தனித்துவமான தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனங்கள் இணைந்து தங்களது முதல் பிரமாண்ட படைப்பை அதிரடியாக அறிவித்துள்ளனர்.
'வி மெகா பிக்சர்ஸ்' மற்றும் 'அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்' ஆகிய நிறுவனங்கள் தங்களது முதல் திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தை இணைந்து வழங்குவதில் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த கூட்டணியின் இந்த முதல் முயற்சியில், திறமையான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில் நுட்ப குழுவினருடன் ஒரு சிறந்த நட்சத்திரக் குழுவாக இப்படம் இருக்கும் என ரசிகர்களிடம் உத்தரவாதம் அளிக்கும் வகையில், இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் வம்சி கிருஷ்ணா இயக்குவதாக அறிவித்துள்ளனர், மேலும் டைனமிக் ஹீரோ நிகில் சித்தார்த்தா மற்றும் மூத்த நடிகர் அனுபம் கெர் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
அனைவராலும் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பு, குளோபல் ஸ்டார் ராம் சரண் அவர்களின் வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் ஆகியவற்றின் சமூக ஊடக கணக்குகள் வழியாக அழகான வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய பார்வையாளர்களை மீண்டும் ஒரு பெரும் சகாப்தத்திற்கு அழைத்துச் சென்று அவர்களின் இதயத்தைத் தொடும் அளவிற்கு ஒரு அனுபவத்தை இப்படம் வழங்கும். லண்டனில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டீசர் படத்தின் களத்தை சொல்வதாக அமைந்துள்ளது. தி இந்தியா ஹவுஸைச் சுற்றி அரசியல் கொந்தளிப்பு நிலவும் சூழலில், ஒரு காதல் கதையை இப்படம் சொல்கிறது. எரியும் இந்தியா ஹவுஸின் பிரமாண்ட காட்சியுடன் இந்த டீசர் முடிவடைகிறது.
வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இடையேயான கூட்டணி இந்திய திரையுலகில் மிக சக்திவாய்ந்த கூட்டணியின் துவக்கத்தை குறிக்கிறது.
குளோபல் ஸ்டாராக அறியப்படும் ராம் சரண் தேசத்தை பெருமைப்படுத்தி மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் கொண்ட சினிமாவை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன் சிறந்த தயாரிப்பாளராக இருப்பார் என்று அபிஷேக் அகர்வால் பாராட்டியுள்ளார்.
இந்திய சினிமாவை மட்டுமின்றி உலகையே அதிர வைக்கும் இந்த அற்புதமான திரைப்படம் குறித்த கூடுதல் அறிவிப்புகளுக்கு அனைவரும் காத்திருக்கவும். விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அவை வெளியாகும்.
கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் 'ஜப்பான்' படத்தின் சிறப்பு டீசர் வெளியீடு!
நாயகன் கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் 'ஜப்பான்' படத்தின் சிறப்பு டீசரை வெளியிடுவதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெரு மகிழ்ச்சி அடைகிறது.
சமூக அக்கறையுள்ள கதைகளை சுவாரசியமாகச் சொல்லும் திறமை கொண்ட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற 'ஜோக்கர்' படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோருடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார்.
தனது பொழுதுபோக்கு மற்றும் தனித்துவமான திரைப்படங்கள் மூலம் மீண்டும் மீண்டும் முத்திரை பதித்து வருகிறார் நடிகர் கார்த்தி. தற்போது தனது 25வது படமான 'ஜப்பான்' மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தைத் தரவுள்ளார். அவரது திரைப் பயணத்தின் இந்த புதிய அத்தியாயம் திரைப்பட ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தும்படி உருவாகி வருகிறது.
இன்று, (மே 25) நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, எங்கள் தயாரிப்பு நிறுவனம், ஜப்பான் திரைப்படத்தின் சுவாரசியமான சிறப்பு முன்னோட்டத்தை வெளியிடுகிறது. பரபரப்பான இந்த டீஸர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான சுனில் இந்தத் திரைப்படம் முலம் தமிழில் அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்திய வெற்றிப் படங்கள் பலவற்றின் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்து வருகிறார். இந்திய சினிமாவின் முக்கியமான, முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களில் ஒருவரான ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படக்குழுவினர் உற்சாகமாக படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றனர்.
ஜப்பான் பிரம்மாண்ட தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
55வது பிறந்தநாளில் ஒரு முதிய பெண்மணியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ரகுமான்!
கடந்த 40 வருடங்களாக மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ரகுமான். இரண்டு மொழிகளிலுமே இவருக்கென ஒரு ரசிகர் வட்டம் தனியாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக அதிக இளம்பெண் ரசிகைகளை கொண்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவரது திரையுலக பயணம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த மதுராந்தகர் இவரது கதாபாத்திரமும் கிளைமாக்ஸில் அவரது கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி படம் முடிவதும் தமிழ் சினிமாவில் இப்போதும் நடிகர் ரகுமானுக்கான முக்கியத்துவத்தை பறைசாற்றுவது போல அமைந்துவிட்டது.
நடிகர் ரகுமான் தற்போது தனது 55வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார். பொதுவாகவே மலையாள திரையுலகில் நடிகர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ரகுமானின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை சற்றே வித்தியாசமான முறையில் பிறருக்கு பயனுள்ள வகையில் கொண்டாடி அசத்தியுள்ளனர்.
கேரளாவில் திருச்சூர் பகுதியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் பெண்கள் இல்லத்தில் நடிகர் ரகுமானின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடனும் சேர்ந்து கேக் வெட்டி நடிகர் ரகுமானின் பிறந்த நாளை கொண்டாடினர். மேலும் அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
நடிகர் ரகுமானின் பிறந்தநாள் என்றதுமே அங்கிருந்த பெண்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டு அவர் நடித்த படங்களின் பாடல்களை பாடி அவருக்கு எங்கும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை உணர்த்தினார்கள். அதில் ஒரு முதிய பெண்மணி அங்கிருந்த ரசிகர் மன்ற தலைவரிடம் தான் ரகுமானிடம் பேச விரும்புவதாக கோரிக்கை வைக்க, உடனடியாக இந்த தகவல நடிகர் ரகுமானுக்கு தெரிவிக்கப்பட்டது.
அடுத்த நிமிடமே வீடியோ காலில் வந்த ரகுமான் அங்கிருந்த ஒவ்வொருவருடனும் பேசி நலம் விசாரித்தார். அனைவரும் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இன்னொரு பெண்மணி ரகுமானின் பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என விரும்ப தனது வீட்டில் அடுத்த அறையில் இருந்த குழந்தையை தூக்கி வந்து வீடியோ காலில் காட்டி அந்த பெண்மணியின் ஆசையை நிறைவேற்றினார் ரகுமான்.
இதேபோல கேரளாவில் பல இடங்களில் நடிகர் ரகுமானின் ரசிகர்கள் பலருக்கும் பலவிதமான சமூக உதவிகளை செய்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
35 ஆண்டுகளாக நான் காளி வேடம் போட்டேன் - நடிகர் டி. குமரன்
திரைப்படங்களைப் பார்க்கும்போது சண்டைக் காட்சிகளில் கண் இமைப்பதற்குள் சரேலென வேகமாகப் பறந்து செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்களை நமக்குத் தெரியாது. முன் பக்கம் உயர்த்தி,இரண்டு சக்கரத்தில் எகிறிப்பாயும் காருக்குள் இருப்பது யார் என்றோ, கர்ணம் அடித்து சறுக்கி விழும் மோட்டார் சைக்கிளில் இருப்பவர் முகம் யாருடையது என்றோ எவருக்கும் தெரியாது.பிரபல கதாநாயகர்களை மிரட்டும் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வந்து பேசும் அந்த நடிகரின் முகமோ நமக்குத் தெரியாது.ஒரு படத்தின் பரபரப்புக்காகத் தேவைப்படும் இவர்களுக்குச் சரியான அடையாளமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை.இந்த வரிசையில் உள்ளவர் தான் நடிகர் டி. குமரன் .இவரது வாழ்க்கையை அறிந்தால் அவரை நொடிப்பொழுதுகளில் கடந்து போகும் ஒருவராக நினைக்க முடியாது.
நூற்றுக்கணக்கான படங்களில் இப்படிச் சில நிமிடங்களில் பிரபலங்களுடன் நடித்துள்ளவர் இவர். அதுமட்டுமல்ல பாண்டிச்சேரியில் 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு லொகேஷன் மேனேஜராக இவர் பணியாற்றி இருக்கிறார். பாண்டிச்சேரி பகுதியில் எந்த இடத்தில் படப்பிடிப்பு என்றாலும் இவர் அனுமதி வாங்கிக் கொடுத்து சேவை செய்து வருகிறார். இனி, குமரனுடன் பேசுவோம்.
உங்களுக்குள் சினிமா ஆர்வம் எப்படி வந்தது?
நான் பத்து வயதில் இருந்து கூத்துபட்டறையில் கற்றுக்கொண்டு இயங்கி வருகிறேன் .நானே ஒரு கூத்துப் பட்டறையைப் பாண்டிச்சேரியில் வைத்துள்ளேன்.ஏராளமான விழாக்கள் உள்ளூர், வெளியூர், வெளிநாடு சார்ந்த விழாக்கள் ,ஆலய விழாக்கள் போன்றவற்றில் நாங்கள் நாடகங்கள், கூத்துகள், என்று மாறுவேடம் பூண்டு நடித்துள்ளோம். குறிப்பாக நான் 35 ஆண்டுகளாக நான் காளி வேடம் போட்டு, தோன்றி வருகிறேன். 15 ஆண்டுகளாக குறத்தி வேடம் போட்டு நடித்து வருகிறேன். பாண்டிச்சேரியில் நான் ஒரு கூத்துக் கலைஞனாகப் பரவலாக அறியப்பட்டவன்.
நிறைய கற்றுக் கொண்டும் கற்றுக் கொடுத்தும் வருகிறேன். எனக்குச் சின்ன வயதிலேயே சினிமா மீது இனம் புரியாத ஆர்வம் வந்தது .நான் அடிப்படையில் ஒரு கூத்து கலைஞன் அல்லவா?
நான் ஒரு கூத்து கலைஞனாக இருந்தாலும் எனக்கு வண்டி வாகனங்கள் மீது ஆர்வம் உண்டு. ஆட்டோ ஓட்டுநர்,வாகனங்கள் ஓட்டுநர், மெக்கானிக் என்று எனக்கு இன்னொரு பக்கம் உண்டு.
பாண்டிச்சேரி ராஜா திரையரங்கில் ஆட்டோ ஓட்டினேன். திரையரங்கிலும் பணியாற்றினேன். சொந்தமாக வாங்கி 15 ஆட்டோக்கள், டெம்போக்கள் என்று ஓட்டியிருக்கிறேன்.
ராஜா திரையரங்கில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன்.படம் ரிலீஸ் ஆகும் போது பெட்டி எடுத்துச் செல்வது ஒரு விழாவுக்கான கொண்டாட்டமான அனுபவம். சிறு சிறு படங்களை விநியோகமும் செய்துள்ளேன்.சினிமா மீதுள்ள ஆர்வத்தில் சென்னை வந்து ஏவிஎம் ஸ்டுடியோவில் நுழைய முயற்சி செய்வேன். வாசலிலேயே விரட்டி அடித்து விடுவார்கள். ஆனால் வண்டி வாகனங்களை மட்டும் உள்ளே விடுவார்கள். அப்படி ஒரு நாள் அதிகாலை 5 மணிக்கு ஆட்டோவில் வந்தேன். உள்ளே விட்டார்கள். ஒரு தளத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.அதிகாலையில்தான் லைட்மேன்கள் மேலே ஏறுவார்கள்.நானும் அவர்களைக் கெஞ்சி மேலே ஏறினேன். ஒரு நாள் முழுக்க அங்கிருந்து நான் கீழேநடக்கும் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தேன். அவர்கள் மதிய உணவு கீழே வரும் போது கூட , கீழே நான் இறங்கி வரவில்லை. ஏனென்றால் என்னை துரத்தி அடித்து விடுவார்களோ என்று பயம். இப்படி ஒரு நாள் முழுக்க காலை முதல் மாலை வரை சிறுநீர் கழிக்கக் கூட வராமல் மேலேயே இருந்தேன். அப்படி மெல்ல மெல்ல பழக்கம் வந்தது.படப்பிடிப்பில் அவசரமாக ஒரு டிரைவர் தேவை என்றால் ஆள் கிடைக்காமல் விழிப்பார்கள்.அப்போது திடீர் ஓட்டுநராக மாறி நான் ஓட்டுவதுண்டு. நான் அனைத்து வாகனங்களும் ஓட்டுவதால் மெல்ல மெல்ல பழக்கம் கிடைத்தது. படப்பிடிப்பு இடங்களில் அவசரத்திற்கு வாகனங்களை ஓட்டி நகர்த்தி அவர்களுக்கு உதவுவேன்.
எந்த வண்டியாக இருந்தாலும் நான் எடுப்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த விஷயம் தெரிந்து, பல படங்களில் இப்படி வேகமாக வாகனங்களை என்னை ஓட்ட வைத்து காட்சிகள் எடுத்துள்ளார்கள்.மோட்டார் பைக்குகளை ஒற்றைச் சக்கரத்தில் சீறவிட்டு ஓட்டி உள்ளேன். இப்படிப் பார்த்து ஒரு வழியாகப் பலரது அறிமுகங்களும் எனக்குக் கிடைத்தன.
அந்த அறிமுகத்தில் சிவசக்தி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்தேன் .அது வெற்றிக் கொடி கட்டு படத்தின் காலம். ஆனாலும் வருமான நம்பிக்கை ஏதும் கிடைக்கவில்லை ஒரு கட்டத்தில் சினிமா நமக்குச் சரிப்பட்டு வராது என்று தோன்றியது. அதன்படி1995-ல் பாண்டிச்சேரி திரும்பி விட்டேன்.இனி சினிமாவே நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கி நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மீண்டும் சினிமாவுக்குள் வர எந்தச் சூழல் காரணமாக இருந்தது?
இயக்குநர் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே படத்தில் லொகேஷன் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது .இத்தோடு சரி என்று தான் நான் வேலை பார்த்தேன்.ஆனால் பிறகு எனக்கு வந்த ஒரு போன் தான் என் வாழ்க்கையையே மாற்றியது.
ஒரு நாள் பாண்டிச்சேரிக்குப் படப்பிடிப்புக்கு வந்த சத்யராஜ் சார் என்னை அழைத்தார். அந்தப் படம் ஐயர் ஐபிஎஸ். பாண்டிச்சேரியில் எந்த வேலை கொடுத்தாலும் குமரன் செய்து விடுவான் என்று கூறி என்னைக் கூப்பிட வைத்தார். அந்தப் படப்பிடிப்புக்கான இடங்களைக் கேட்டபோது நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அது மட்டுமல்ல நான் அந்தப் படத்தில் தோன்றி நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தார்.அதன்படி நான் அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்தேன். அதற்கு முன்பு நான் வைகாசி பொறந்தாச்சு, கடவுள் போன்ற படங்கள் சில சிறு காட்சிகளில் வந்தாலும் ஐயர் ஐபிஎஸ் என்னால் மறக்க முடியாத படம்.இது நடந்தது 2000த்தில்.அதன் பிறகு எனக்கு மளமளவென லொகேஷன் பார்க்க வாய்ப்புகள் வந்தன. அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் சத்யராஜ் சார் தான் என்பேன்.
இப்படிப் பாண்டிச்சேரியிலேயே படப்பிடிப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, லொகேஷன்கள் ஏற்பாடு செய்வது,தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்துக் கொள்வது என்று மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தேன்."பாண்டிச்சேரி படப்பிடிப்பா உடனே குமரனைக் கூப்பிடு "என்கிற அளவிற்கு வந்துவிட்டேன்.
எல்லாமே ஒருவர் மூலம் ஒருவர் என்று கூறிவந்த வாய்ப்புகள் தான். இப்படி இதுவரை சுமார் 500 படங்களிலும் , 500 விளம்பரங்களிலும், 200 பாடல்களிலும் நான் பணியாற்றி இருக்கிறேன். பாண்டிச்சேரியில் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் என்னைத் தொடர்பு கொள்கிற அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன்.
படப்பிடிப்பு ஏற்பாடு செய்த அனுபவங்களில் மறக்க முடியாதவை?
இயக்குநர் கே வி ஆனந்த் அவர்கள் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார் .அவரது அயன் ,மாற்றான், காப்பான், அனேகன் போன்ற படங்கள் முழுக்க பாண்டிச்சேரியில்தான் படபிடிப்பு நடக்கும். அயன் படமே 40 நாட்கள் அங்கு நடந்தது.பாண்டிச்சேரியில் இப்போது ஏராளமாகப் படிப்பிடிப்புகள் நடக்கின்றன .அதற்கு காரணம் அவர்தான் என்று சொல்வேன் .ஏனென்றால்அவர்தான் பாண்டிச்சேரியைத் தனது அழகான ஒளிப்பதிவின் மூலம் வெளி உலகத்திற்குக் காட்டியவர்.
நடிகர் விஜய் அவர்களின் சுறா படத்திற்கு நான் படப்பிடிப்பிடங்களை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.மாஸ்டர் படப்பிடிப்பு சமயம் அது. ஒரு நாள் விஜய் சார் எனக்கு போன் செய்தார். அப்போது நெய்வேலியில் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கி தரச் சொன்னார் அதன்படி செய்து கொடுத்தேன்.அவரது வேலாயுதம் படத்திற்காகப் பாலம் உடைந்து விழுவது போன்ற காட்சியை எடுக்கத் தமிழ்நாட்டில் அனுமதியில்லை. இங்கே தான் எடுக்கப்பட்டது.
லிங்குசாமி அவர்களின் படங்கள் தொடர்ந்து இங்கேதான் நடக்கும் .வேட்டை அப்படி நடந்தது. விக்ரம் சார் நடித்த ராஜபாட்டை இங்குதான் நடந்தது.விஷால் சார் படங்கள் தொடர்ந்து இங்கு தான் நடக்கின்றன.தனுஷின் அனேகன், பட்டாசு போன்ற படங்களும் இங்கு படப்பிடிப்பு நடந்தவைதான்.
விஜய் ஆண்டனி அவர்களுடன் பிச்சைக்காரன் படத்தில் பணியாற்றினேன். படப்பிடிப்பு இடங்கள் ஏற்பாடு செய்தேன்.அந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பும் கொடுத்தார்.படத்தின் கதைப்படி அவர் முதன் முதலில் பிச்சை எடுக்கச் செல்லும் காட்சியில் உனக்குக் கை கால் எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது என்று அவரைக் கேலி செய்து அடிப்பது நான் தான்.
விஜயகாந்த் அவர்களின் சபரி படத்தில் நான் இப்படி அனுமதி வாங்கிக் கொடுத்தேன். அவர் விருதகிரி படம் எடுத்த போது தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு இங்கு அனுமதி கிடைக்கவில்லை. எங்கு போனாலும் பிரச்சினை வந்தது .அப்போது நான் அவருக்குப் பாண்டிச்சேரியில் இடங்களைத் தேர்வு செய்து அனுமதி வாங்கிக் கொடுத்தேன். குறிப்பாகப் பாண்டிச்சேரி பிரெஞ்ச் சிறையில் அனுமதி வாங்கிக் கொடுத்தேன் அதை வெளிநாடு போல் மாற்றிச் சண்டைக் காட்சிகள் எடுத்தார்கள்.
எனது வேலைகள் பற்றி மிகவும் மகிழ்ந்தார் .யாரும் செய்யாததை நீ செய்தாய் என்றார்.
கமல் அவர்களின் தசாவதாரம் படத்திற்கு நான் இடங்களைத் தேர்வு செய்து அனுமதி வாங்கிக் கொடுத்தேன். தசாவதாரம் படத்தில் நடித்த வெள்ளைக்காரர்களை எல்லாம் நான் தான் அழைத்து வந்தேன் .கமல் சாரிடம் இவர் தான் வெள்ளைக்காரர் என்றால் உடனே நம்பி விட மாட்டார்.வெள்ளைக்காரர்களில் பல ரகம் உண்டு. அவருக்கு இங்கிலாந்து காரருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் ஜெர்மனிக்காரருக்கும் வித்தியாசம் தெரியும் முகத்தைப் பார்த்து, மூக்கைப் பார்த்து அவர், இவர் இந்த நாட்டுக்காரர் என்று கண்டுபிடித்து விடுவார்.தசாவதாரம் படத்தில் வரும் ஜார்ஜ் புஷ் கேரக்டருக்கான வெள்ளைக்காரரை நான் தான் ஆரோவில் இருந்து அழைத்து வந்தேன்.அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு ,பாண்டிச்சேரி கடற்கரையில் 150 அடி நீளத்திற்கு டிராலி போட்டுப் படமாக்கினார்கள்.
அவரது உன்னைப்போல் ஒருவன் படத்திற்கும் ஏர்போர்ட்டில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கிக் கொடுத்தேன். ஹெலிகாப்டர் எல்லாம் வரவழைத்து உதவினேன். அவரது விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் இங்கு தான் எடுக்கப்பட்டன. கமல் சாருக்கும் எனக்கும் தொடர்பு உண்டு.
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நண்பேண்டா படத்தின் போது ஜெயலலிதா ஆட்சி இருந்ததால் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்துவதில் பிரச்சினை இருந்தது. எங்குமே நடத்த விடவில்லை. திருச்சியில் செட் எல்லாம் போட்டுப் படப்பிடிப்பு நடத்த முடியாமல் கலைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு நான் பாண்டிச்சேரியில் அனுமதி வாங்கிக் கொடுத்து 20 நாட்கள் படபிடிப்பு நடந்தது. அது மட்டுமல்ல சைக்கோ, இப்படை வெல்லும் போன்ற படங்களுக்கும் இடங்களை நான் ஏற்பாடுகள் செய்தேன்.பாண்டிச்சேரியில் சைக்கோ படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்குப் புறப்பட்டார்.
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மரெட்டி படத்திற்குப் பாண்டிச்சேரியில் இடங்களுக்கு அனுமதி வாங்கி கொடுத்தேன்.கே ஜி எஃப் 1 , 2 என இரண்டு படங்களுக்கும் நான் அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளேன். தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று இப்படி ஏராளமான படங்களுக்கு நான் இந்த விஷயத்தில் உதவி இருக்கிறேன்.
மலையாளத்தில் 20 படங்களில் நான் பணியாற்றினேன். மம்முட்டி நடித்த கிரேசி கோபாலன் படத்தில் நானும் அவருடன் நடித்துள்ளேன்.
சந்தானம் எனக்கு மிக மிக நெருங்கிய நண்பர்.
சிம்பு நடித்த மாநாடு படப்பிடிப்பு இங்கே 35 நாட்கள் நடைபெற்றது. ஏர்போர்ட்டில் மட்டும் 15 நாட்கள் நடைபெற்றது. கொரோனா காலத்தில் அனுமதி இல்லாததால் சிரமப்பட்டு பாண்டிச்சேரியில் அனுமதி வாங்கிக் கொடுத்தேன். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்த போது இடையில் மழை வந்து குறுக்கிட்டது. மழை 120 சென்டிமீட்டர் அளவு வரை போனது.ஆனாலும் படப்பிடிப்பை நிறுத்தாமல் ஒரு மில்லில் ரகசியமாக ஏற்பாடு செய்து மூன்று நாட்கள் படப்பிடிப்புக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துகொடுத்து,பாதுகாப்பாக இருந்து எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன்.
நான்கு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஆங் லீ இயக்கிய ஹாலிவுட் படமான 'லைப் ஆப் பை 'படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க பாண்டிச்சேரியில் தான் நடைபெற்றது. நான்தான் முன்னின்று எல்லாமும் செய்து கொடுத்தேன்.
அமீர்கான் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்திருந்தார். அவரது தலாஷ் படத்திற்கு நான் இடங்களை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன்.ஒன்பது கார்கள் கடலில் சறுக்கிவிழும் காட்சி அப்போது படமாக்கப்பட்டது. அண்மையில் எனது யூடியூப் பார்த்து விட்டு என்னைத் தொடர்பு கொண்டார்.அண்மையில் ஒரு நாள் பாண்டிச்சேரி வந்தவர் 12 நாட்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் தங்கி இருந்தார். எனது கூத்துப்பட்டறைக்குத் தினமும் வந்து நம் நாட்டுப்புறக் கலைகள் எல்லாம் பற்றி நேரில் கேட்டு அறிந்து கொண்டார்.அவருடன் அடையாளம் தெரியாமல் அதிகாலையில் சைக்கிள் ஓட்டியதும் பாண்டிச்சேரி தெருக்களில் சுற்றியதும் மறக்க முடியாதவை.
இப்படி அனைத்து நடிகர்கள் சார்ந்தும் ஏராளமான அனுபவங்கள் உண்டு.
குறிப்பாகப் படப்பிடிப்புகளுக்குப் பாண்டிச்சேரியை நாடுவதற்கு என்ன காரணம்?
பாண்டிச்சேரி மக்கள் வெளியில் இருந்து வருபவர்களை தங்களது விருந்தினர்கள் போலப் பார்ப்பார்கள் .எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார்கள். படப்பிடிப்பை அமைதியாகக் கவனிப்பார்கள். இடையூறு செய்ய மாட்டார்கள். படப்பிடிப்பு சார்ந்த குறைந்தபட்ச அறிவு அவர்களுக்கு உண்டு.முகம் தெரியாதவர்களிடம் காசு பிடுங்கும் கலாச்சாரம் அங்கு இல்லை.சாலைகள் நீளமாக நேராக இருக்கும். அனுமதி வாங்குவது எளிது. எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் இடையூறு இல்லாமல் படப்பிடிப்பு நடத்த முடியும். அரசியல்வாதிகளின் தொல்லை இல்லை.எனவே தான் இங்கு வருகிறார்கள்.இங்கு நடந்த படப்பிடிப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். தமிழ்நாட்டில் பல இடங்களில் அலைந்துவிட்டுச் சரிப்பட்டு வராமல் கடைசியாக என்னிடம் வருபவர்கள் அதிகம். தமிழ்நாட்டில் சரியாக இடங்கள் கிடைக்காத போதும் என்னிடம் கேட்பார்கள்.
ஒரு கூத்துக் கலைஞராக உங்கள் அனுபவம்?
பாண்டிச்சேரியில் மஸ்க்ராத் என்று பாரம்பரியக் கலை ஒன்று உள்ளது.
அதை அழிய விடாமல் காப்பாற்ற வேண்டும் என்கிற கடமை மக்களுக்கு உள்ளது. அதுமட்டுமல்ல நாட்டுப்புறக் கலைகள் எதையும் நலிய விடக்கூடாது. அவை நமது பாரம்பரியத்தின் அடையாளமாக இருப்பவை என்பதில் எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு.
நான் எனது கூத்துகளை கோவில்களிலும் விழாக்களிலும் நடத்தி வ
சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!
தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள். இப்போது இருவரும் அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதனை M360° ஸ்டுடியோஸின் ரோஷ் குமார் தயாரித்துள்ளார்.
முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். முதல் ஷெட்யூல் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று மணலியில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் அதிரடி காட்சிகள்.
சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், இவர்களுக்கு எதிர் கதாநாயகனாக நடிக்க மலையாள நடிகர் ஆர். நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
ஒரு இராணுவ அதிகாரி மற்றும் IAS அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி-சஸ்பென்ஸ் கதையே ‘சமரன்’ படம். சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால்
பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடியை உருவாக்கும் சூழலை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.
மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கும் 'உன்னால் என்னால்'
ரியல் எஸ்டேட் மோசடிகளைப் பற்றிப் பேசி அதன் அநீதிகளைத் தோலுரிக்கிற படமாக 'உன்னால் என்னால்' உருவாகியுள்ளது. ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார். கெளதம் ராஜேந்திரன் வெளியிடுகிறார். சிங்கப்பூர் ரவீந்திர சிம்மன் இயக்க மேற்பார்வையில் இப்படத்தை ஏ .ஆர். ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார் .
இப்படத்தின் கதை என்ன?
வறுமையின் காரணமாகக் கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள். பணத் தேவை அவர்களைத் துரத்த, ஒரு வழியாக அவர்களின் பணத்தேவை தீர்ந்து போகும் ஒரு வாய்ப்பு வருகிறது. ஆனால் அந்த வாய்ப்புக்குப் பின்னணியில் ஓர் அநீதி இருப்பதைக் காண்கிறார்கள்.அது
இவர்களை மனசாட்சிக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தும் நபரின் வாய்ப்பு என்று தெரிகிறது. அந்தத் தருணத்தில் தங்கள் வறுமையைப் போக்க சமரசப் பட்டார்களா? அல்லது மனசாட்சி மனித நேயம் தான் முக்கியம் என்று முடிவு எடுத்தார்களா? என்பதைப் பற்றிப் பேசும் படம் தான் 'உன்னால் என்னால்'.
படம் குறித்துஇயக்குனர் கூறியதாகவது
" உலகமே எந்திரமயமாகி விட்ட இக்காலச் சூழலில் மனிதன் பணத்தைத் தேடி ஓடுகிறான் .பணத்திற்காக எந்த விதமான அநீதிகளையும் செய்யத் தயாராக இருக்கிறான். அப்படிப் பெரிய அநீதி இழைக்கும் ஒரு துறையாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது.இதில் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர்கள் பலர் உண்டு.இடைத்தரகர்களைக் கொண்டு சக மனிதரை எப்படி அதில் ஏமாற்றுகிறார்கள்? தங்கள் சதி வலையில் சிக்கிக் கொண்டவர்களின் வாழ்க்கையை எப்படி நாசமாக்குகிறார்கள் என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்.உலகளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த ரியல் எஸ்டேட் உலகத்தின் கறுப்புப் பக்கங்களை இதில் புரட்டிக் காட்டியிருக்கிறோம்.மனிதன் எவ்வளவு சாதித்தாலும் தனது மனசாட்சிக்கு உட்பட்டு மனிதநேயத்தோடு வாழ்வதுதான் சிறந்த அறம் என்று இப்படத்தில் கூறி இருக்கிறோம். அது இக்கால பணம் தொடர்பான மனித மனங்களின் பணமா? பாவமா? சுயநலமா? மனசாட்சியா? என்கிற ஊசலாட்டங்களுக்குப் பதில் கூறும் ஒரு தீர்வாக இருந்து படம் பார்க்கும் ரசிகர்களை நல்வழிப்படுத்தும்" என்று கூறுகிறார்.
இப்படத்தில் கிராமத்தில் இருந்து வரும் ஜீவன், ராஜ், கணேஷ் என்ற அந்த மூன்று இளைஞர்களாக ஜெகா ,கே. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் நடித்துள்ளார்கள்.மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.இதுவரை கதாநாயகியாக வந்து முகம் காட்டியவர், இதில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார்.சோடா கோபால் பாத்திரத்தில் ரவி மரியா கலக்கியுள்ளார். முற்றிலும் எதிர்பாராத மாறுபட்ட பாத்திரத்தில் ராஜேஷ் நடித்துள்ளார். இவர்கள் தவிர டெல்லி கணேஷ், ஆர். சுந்தர்ராஜன், மோனிகா, நெல்லை சிவா, சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் ஆகி யோரும் நடித்துள்ளனர்
இப்படத்திற்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி ஏ .ஆர்.ஜெய கிருஷ்ணா இயக்கியுள்ளார்.இப்படத்திற்குப் பிரபல ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஸ்வான் இசையமைத்துள்ளார். இயக்க மேற்பார்வை சிங்கப்பூர் ரவீந்திர சிம்மன், கலை இயக்கம் விஜய் ராஜன், படத்தொகுப்பு எம். ஆர். ரஜீஷ்,
நடன இயக்குநர் கௌசல்யா, சண்டை இயக்குநர் பில்லா ஜெகன் என்று பணியாற்றியுள்ளனர்.
ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில் ஜெனீஷ் வினியோகிக்கிறார்.
'உன்னால் என்னால் 'படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா