சற்று முன்

இசைஞானியின் ஆசியுடன் புதிய படத்தை பூஜையுடன் துவக்கினார் இயக்குநர் பாரதி கணேஷ்!   |    'ஜென்டில் மேன்-2' மூலம் மீண்டும் தமிழில் இசையமைக்கும் ஆஸ்கர் வின்னர்  இசையமைப்பாளர்!   |    #Nikhil20 படத்தின் தலைப்பு 'சுயம்பு' என வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட லுக் வெளியாகியுள்ளது!   |    என்னை பெண்ணியவாதியா என்று கூட கேட்டார்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ்   |    மிரள வைக்கும் மோஷன் வீடியோவுடன் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!   |    கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் 'ஜப்பான்' படத்தின் சிறப்பு டீசர் வெளியீடு!   |    55வது பிறந்தநாளில் ஒரு முதிய பெண்மணியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ரகுமான்!   |    35 ஆண்டுகளாக நான் காளி வேடம் போட்டேன் - நடிகர் டி. குமரன்   |    சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!   |    மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கும் 'உன்னால் என்னால்'   |    பல நாட்டு திரைத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ONE திரைப்படத்தின் டிரைலர்   |    “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    தளபதி விஜய்யுடன் 68-வது படத்திற்காக அவருடன் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!   |    ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படத்தின் இசை வெளியீட்டு விழா!   |    ஐந்து மொழிகளைச் சேர்ந்த ஐந்து சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வெளியிடவுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷனில் 'கொட்டுக்காளி'   |    அஜித்குமாரின் நீண்ட கால விருப்பம்!   |    'ஃபுட்டேஜ்' படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் மிகப்பிரபலமான எடிட்டர்!   |    ‘ஷோபா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் இதயங்களை கவந்திருக்கும் ‘மாடர்ன் லவ்' நடிகை !   |    தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்க இருக்கும் 'அஸ்வின்ஸ்'   |   

சினிமா செய்திகள்

சினிமா ஒருபோதும் கைவிடாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.- இயக்குநர் சுரேஷ்
Updated on : 18 May 2023

‘எறும்பு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அதில் கலந்துகொண்ட தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் படத்தை பற்றி கூறியதாவது 



 



தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் பேசுகையில், '' எறும்பு திரைப்படத்தில் பணியாற்றிய எங்களுக்கு, படம் திருப்தியளித்திருக்கிறது. வெற்றி பெறும் என நம்பிக்கையும் இருக்கிறது. தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.



2018 ஆம் ஆண்டில் 'போதை' எனும் திரைப்படத்தை தயாரித்து, இயக்கியிருந்தேன். இந்தத் திரைப்படம் எனக்கு நிறைய அனுபவத்தை கற்றுக் கொடுத்தது. அதன் பிறகு நடிகர் சார்லியை சந்தித்து கதையை சொல்லி குறும்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருந்தேன். கொரோனா காரணமாக அது நிறைவேறவில்லை. அந்த தருணத்தில் தோன்றிய கரு தான் எறும்பு. இந்த கதை எனக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.



 அவரது இயற்பெயர் தர்மலிங்கம். அவரது பெயரை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது பெயரில் பட நிறுவனத்தை தொடங்கி படத்தை தயாரித்திருக்கிறேன். சினிமாவை நம்பி உண்மையாக பணியாற்றுபவர்களை.. சினிமா ஒருபோதும் கைவிடாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்.



ஃபீல் குட் மூவிக்கும்.. எமோஷனல் எனும் உணர்விற்கும்.. தனி சக்தி உண்டு. அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.



என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘போதை’ படத்தை வெளியிடுவதற்கு ரமணி ராமச்சந்திரன் உதவி செய்தார். இந்தப் படத்திற்கும் அவர் உதவி செய்திருக்கிறார். அவர் இல்லையேல் நான் இல்லை.



நமக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்வது தங்கம். அதிலும் ஒரே ஒரு கிராம் தங்கத்தை மையப்படுத்தி தான் இப்படத்தின் கதை உருவாகி இருக்கிறது. ஒரு கிராம் தங்கத்தை வைத்து அக்கா -தம்பி பாசம்... அப்பா -மகன் உறவு... என பல விசயங்களை இணைத்திருக்கிறேன். நாம் சிறிய வயதில் ஏதேனும் ஒரு பொருளை தொலைத்திருப்போம். அதனை எப்படி பெற்றோர்களிடத்தில் சொல்வது என அச்சம் கொண்டிருப்போம். 



ஒரு கிராம் மோதிரம் தொலைந்து விட்டது. அப்பா, அம்மா வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இதனை தேடி கண்டுபிடிக்க அக்காவும், தம்பியும் முயல்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இவர்கள் என்ன முயற்சி எடுத்தார்கள். இதுதான் கதை. '' என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா