சற்று முன்

புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை கே.ராஜன் சந்தித்தார்   |    விஷ்ணு விஷால் 'நெஞ்சுக்கு நீதி' படத்துக்கு வாழ்த்து   |    விமல் ஆரம்பித்த 'யூடியூப்' சேனலால் தேடிவந்த பிரச்சனை..!   |    ’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    கான்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு   |    எல்லாரும் சமம்னா யார் சார் ராஜா !   |    ஓடிடி தளத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’   |    ”இதயத்தை விட்டு என்றும் நீங்காத படம்” 'சாணி காயிதம்’   |    மாஸ்டர் பட தயாரிப்பாளருக்காக விஜய் சேதுபதி செய்த உதவி   |    இயக்குநர் பேரரசு அதிரடி பேச்சு   |    வெப் சீரிஸில் தமிழின் முதல் 100 மில்லியனை எட்டிய குழுவின் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் ஆரம்பம் !   |    தென்னிந்திய திரைத்துறையை கலக்கும் நடிகை ரிது வர்மா !   |    'குத்துக்கு பத்து' குழு கலந்துகொண்ட எஞ்சினியரிங் கல்லூரி கல்சுரல் விழா !   |    தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள்!   |    விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    பவுடர் படத்தின் முதல் பாடல் ரத்த தெறி தெறி ஜூன் வெளீயீடு   |    'நெஞ்சுக்கு நீதி' படத்தை பார்த்து வாழ்த்திய திரு. மு.க.ஸ்டாலின்   |    ரசிகர்களுக்கு “தி வாரியர்” படக்குழு வழங்கும் ராம் பொத்தினேனியின் பிறந்தநாள் பரிசு   |    விஜய்சேதுபதியால் மெகா வாய்ப்பு பெற்ற இயக்குனர் !   |    தியாகராஜன் சார் சொன்னதை நான் அனுபவத்தில் உணர்ந்தேன் - கன்னித்தீவு இயக்குனர் சுந்தர் பாலு   |   

சினிமா செய்திகள்

புத்தம் புது காலை விடியாதா..பற்றி பாலாஜி மோகன் கருத்து !
Updated on : 19 January 2022

அமேசான் ஒரிஜினல் சீரிஸ், புத்தம் புது காலை விடியாதா.. முதல் பாகத்தைவிட எப்படி மாறுப்பட்டு நிற்கிறது என்பது குறித்து இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார். அமேசான் ஒரினிஜினல்ஸ் அண்மையில் 5 பாகங்கள் கொண்ட அந்தாலஜியை வெளியிட்டது. இந்த அந்தாலஜி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. காதல், நம்பிக்கை, புதிய துவக்கங்கள் என வாழ்க்கையின் உணர்வுகளை தனக்கே உரித்தான பாணியில் பாலாஜி மோகன் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நிச்சயமாக வித்தியமாக இருக்கிறது என்றே ரசிகர்களும் விமர்சகர்களும் கூறுகின்றனர். இந்நிலையில், இயக்குநர் பாலாஜி மோகன், புத்தம் புது காலை விடியாதா இரண்டாம் பாகம் பற்றி பேசியுள்ளார். இந்த அந்தாலஜியில் முகக்கவச முத்தம் என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். வித்தியாசம் என்னவென்று சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு கதையிலிருந்து எழும் வித்தியாசமான கருத்துகள் தான். எப்போது அந்தாலஜி உருவாக்கப்பட்டாலும் அதில் ஒவ்வொரு இயக்குநர் தனித்துவம் காட்டவே விரும்புவார்கள். அந்த வகையில் இந்த அந்தாலஜியில் ஐந்து வித்தியாசமான கதைகள் இடம்பெற்றுள்ளன. 5 பேரும் தனித்தனியாக தம் தம் பாதையில் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளனர். சமீப நாட்களில் வெளியான அந்தாலஜியில் சிறந்தது எனப் பெயர் பெற்றுள்ளது. அந்தாலஜிக்கு ஒரு புதிய வரையறையை வகுத்துள்ளது. அதனால் தான் புத்தம் புது காலை விடியாதா ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் அரும்பிய காதல், துளிர்த்த நம்பிக்கை, வெளியான மனிதம், மீண்டெழுதல் எனப் பல்வேறு உணர்வுகளையும் அழகாகக் கடத்துகிறது.

இந்த அந்தாலஜி ஜனவரி 14 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியானது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா