சற்று முன்

'சுழல் -தி வோர்டெக்ஸ்' தொடரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் - காயத்ரி   |    கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.   |    சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா   |    திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவராக கே.ராஜன் பதவி ஏற்பு!.   |    'சுழல்' வெற்றிக்காக கதிரை வாழ்த்திய 'இயல்வது கரவேல்' படக்குழு   |    நாக சைதன்யாவின் 'NC 22 ' பட நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்புடன் இனிதே ஆரம்பமானது   |    நடிகர் முனீஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் 'மிடில் கிளாஸ்'   |    ZEE5 presents Fingertip Season 2 becomes an OTT blockbuster!!!   |    ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்ஷி அகர்வால்   |    ஆஹா வழங்கும் ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு !   |    'வீட்ல விசேஷம்' திரைப்பட வெற்றி விழா !   |    'மாயோன்' பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌ !   |    நடிகையின் ஆசைக்கு கரம் நீட்டிய ஜெய் !   |    ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !   |    மாற்றுத்திறனாளியான திருமூர்த்திக்கு கமல்ஹாசன் செய்த உதவி !   |    “வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !   |    தமிழ் மொழியில் வெளியான தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு படம் !   |    என் பாடல்களில் தரம் இருக்கும்! வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை   |    நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கத்தில் 'நாதிரு தின்னா'   |    நட்டியுடன் 'சாயம்' இயக்குநர் இணையும் பரபரப்பான கிரைம் திரில்லர் 'கூராய்வு'   |   

சினிமா செய்திகள்

இயக்குநர் SR பிரபாகரன் இயக்கத்தில் “கொம்பு வச்ச சிங்கம்டா”
Updated on : 13 January 2022

மத்திய தமிழகமான கரூர் மாவட்டத்தில் நடக்கும் கதை. ஒரு பெரும் கிராமமான கிருஷ்ணராயபுரம் ஊரின் பெரியவர் தெய்வேந்திரன். அந்த கிராமத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பிடித்தமானவரான தெய்வேந்திரனின் சொல்லுக்கு ஊரே கட்டுப்படும். அப்படிப்பட்ட தெய்வேந்திரனின் ஒரே மகனுக்கு, ஐந்து நண்பர்கள். “மண்ணு தின்ற வயசுல இருந்து ஒன்னா திரிஞ்ச பயலுக” சாதி மத வேறுபாடின்றி பழகும் இவர்களின் நட்புக்குள், ஊரில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல் பிரிவினையை ஏற்படுத்துகிறது. இரண்டு அணிகளாக பிரிந்த இவர்களது நட்புக்குள் என்ன நடந்தது. ஒன்றாய் பிறக்கவில்லை என்றாலும் ஒன்றாய் வளர்ந்த இவர்களின் நட்பின் வாழ்வு தனை சூது கவ்வியது. மீண்டும் நட்பு வென்றதா? என்பதே ‘கொம்பு வச்ச சிங்கம்டா’  படத்தின் கதை. இந்த படத்தில் சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார், இயக்குநர் மகேந்திரன், சூரி நடித்துள்ளார், ஹரீஷ் பேராடி, தயாரிப்பாளர் இந்தர்குமார், ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ‘பிச்சைக்காரன்’ தீபா ராமானுஜம், ‘மருது’லீலா பாட்டி, நண்பர்களாக ராகவ் விஜய், அபி சரவணன், சந்தோஷ் கிருஷ்ணன், லோகு, அருள்தாஸ், சங்கிலி முருகன், ஶ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு  NK ஏகாம்பரம், இசை திபு நிணன் தாமஸ், எடிட்டிங் டான் போஸ்கோ, பாடல் யுகபாரதி, G.K.B,அருண் ராஜ் காமராஜ், சண்டைப்பயிற்சி அன்பறிவு, நடனம் நந்தா. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - SR.பிரபாகரன்தயாரிப்பு - இந்தர்குமார் பேரன்போடு இயக்குநர் S.R.பிரபாகரன் எழுதிக்கொள்வது.. பத்திரிக்கை துறை சார்ந்த நண்பர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி, பண்பலை, YouTube போன்ற அனைத்து ஊடகங்களை சேர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இன்று எனது கதை, திரைக்கதை,  இயக்கத்தில்  வெளிவந்துள்ள, எனது நான்காவது படைப்பான  “கொம்பு வச்ச சிங்கம்டா” திரைப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக  இருக்கும் என்று நம்புகிறேன்.  இது வரை “சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்” என எனது மூன்று படைப்புகளுக்கும் நீங்கள் அளித்த ஆதரவிற்கு பெரும் நன்றிகள். அதே ஆதரவை எனது நான்காவது படைப்பிற்கும் தருவீர்கள் என நம்புகிறேன் உங்கள் அனைவரது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றிகள் பல 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா