சற்று முன்

பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |   

சினிமா செய்திகள்

பரவசமூட்டும் படங்கள் - இலவச டிக்கட்டுகளை வழங்கவுள்ள இணையதளம் !
Updated on : 13 January 2022

அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், “theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது. 



 



தியேட்டர்ஹுட்ஸ் இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில், "இந்திய சினிமா ரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஒரு இந்தியனாக நமது திரைப்படங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எங்கள் பயனர்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் விரும்பும் முறையில் உள்ளடக்கத்தை ரசிக்க செய்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள் ஆகும்," என்றார்.



 



"உலகத்தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை நாங்கள் வழங்கவுள்ளோம். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மொழி உள்ளடக்கம் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான அசல் திரைப்படங்கள் மற்றும் தொடர்களை நாங்கள் தரவிருக்கிறோம். எனவே பார்வையாளர்கள் எங்களை நிச்சயம் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.



 



தியேட்டர்ஹூட்ஸின் நோக்கம் குறித்து விவரித்த அவர், "இப்போது ஒரு சில திரைப்படங்களே ஓடிடி தளங்களில் நேரடியாகத் திரையிடப்படுகின்றன. பெரிய திரைப்படங்கள் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகின்றன. ஓடிடியில் பார்க்க சினிமா ரசிகர்கள் 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இது தவிர, சினிமா தியேட்டரில் புதிய திரைப்படத்தை ரசிக்கும் அனுபவமே தனி. இந்த இடைவெளியை நிரப்ப நாங்கள் விரும்புகிறோம். திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதும் இலவச டிக்கெட்டுகளையும், எங்கள் தியேட்டர்ஹுட்ஸ் தளத்தில் அளவில்லா உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தையும் நாங்கள் வழங்கவுள்ளோம்," என்றார்.



 



புத்தம் புதிய ஸ்ட்ரீமிங் சேவையான theaterhoods.com, சிறந்த திரைப்படங்கள் மற்றும் சுவாரசியமான வலை தொடர்களை மொபைல் மற்றும் இணையதளம் சார்ந்த உங்கள் சொந்தத் திரைகளுக்கு கொண்டு வரும். அளவற்ற பொழுதுபோக்கு சேவைகளை இது வழங்கும்.



 



அதுமட்டுமில்லாமல், திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டு ரசிப்பதற்கான டிக்கட்டுகளை இலவசமாகவும் வழங்கி, பொழுதுபோக்கிற்கான புகலிடமாக அமைய உள்ளது theaterhoods.com.



 



15 ஜனவரி 2022 அன்று பொங்கல் தின விருந்தாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனது செயல்பாடுகளை தொடங்க உள்ள இந்த தளம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் திரையரங்கு மற்றும் ஒடிடி அனுபவத்தை ஒன்றாகக் கொண்டுவருகிறது.



 



சந்தாதாரர்களுக்கு அளவற்ற பொழுதுபோக்கை வழங்கும் அதே வேளையில், திரையரங்குகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த செலவில்லாத தீர்வையும் இது வழங்குகிறது. மேலும், பிவிஆர் போன்ற முன்னணி திரையரங்க குழுமங்களுடன் இந்த தளம் கைகோர்த்துள்ளது. 



 



ஆகையால், சந்தாதாரர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகவும் விரும்பும் ஓடிடி தளமாக theaterhoods.com விளங்கும். திரைப்படங்கள், இணையத் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இசை போன்ற உள்ளடக்கங்கள் இந்த தளத்தில் கிடைக்கும்.



 



இணையம் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலிகள் மூலம்  உலகம் முழுவதும் தியேட்டர்ஹூட்ஸின் சேவை கிடைக்கும்.



 



திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்கள் தயாரிப்புகளை செலவில்லாத விளம்பரத்திக்கு (புரமோஷனுக்கு) content@theaterhoods.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ட்ரைலர் மற்றும் தயாரிப்பு விவரங்களுடன் எங்களை அணுகலாம்.



 



 







 





 




 





 




 







 












Welcome to the @theaterhoods global page! First ever Cinema theater and OTT experience all in one. #ott #theaterhoods #theater #cinema #bollywood #tollywood #kollywood #tickets #theatertickets #enjoyeverymoment






 




 

Image


















Share this Tweet




 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா