சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

சண்டிகர் கரே ஆஷிக்கி குழுவினருக்கு இயக்குநர் விஜயஸ்ரீ பாராட்டு !
Updated on : 12 January 2022

சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படமான சண்டிகர் கரே ஆஷிக்கியின் மையக்கருவும் காட்சிகளும் தனது 2019-ம் ஆண்டு படைப்பான தாதா87-ஐ நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன என்று இரண்டு படங்களையும் பார்த்த நண்பர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும், இது குறித்து தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் இயக்குநர் விஜயஸ்ரீ கூறியுள்ளார்.



 



சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா87-க்கு பிறகு பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நாயகனாக நடிக்கும் பவுடர் திரைப்படத்தை இயக்கிவுள்ளவரும், வெள்ளி விழா நாயகன் மோகன் நீண்ட காலத்திற்கு பிறகு முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ள ஹரா படத்தின் இயக்குநருமான விஜயஸ்ரீ கூறுகையில், “இந்திய சினிமாவில் முதன்முறையாக பெண் திருநங்கையாக நடித்த படம் என்ற பெருமையும் உலக சினிமா வரலாற்றிலேயே புகை, மதுவுக்கு எதிரான டைட்டிலில் கார்டுடன் பெண்களை அவர்கள் அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றம் என்ற வாசகம் இடம்பெற்ற படம் என்ற பெருமையும் தாதா87-ஐயே சேரும்.



 



காமத்தை விட அன்பின் வெளிப்பாடு தான் காதல் என்ற கருத்தை உலகத்திற்கு பதிவு செய்த படம் தான் தாதா87. சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படமான சண்டிகர் கரே ஆஷிக்கியின் மையக்கருவும் காட்சிகளும் தாதா87-ஐ வலுவாக நினைவூட்டுவதாக இரு படங்களையும் பார்த்த நண்பர்கள் எனக்கு தெரிவித்தனர்," என்றார்.



 



தொடர்ந்து பேசிய அவர், “இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான கதைக்களத்தையும், கருத்துகளையும், காட்சிகளையும் தேர்ந்தெடுத்ததற்காக சண்டிகர் கரே ஆஷிக்கி படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என புன்னகையுடன் கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா