சற்று முன்

இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!   |    'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |    அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!   |    வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி   |    'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!   |    'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’   |    2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்!   |    சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!   |    டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “ரெட்ட தல”   |    உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!   |    21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |   

சினிமா செய்திகள்

சர்வதேச எல்லை கடந்து புகழ் பெற்றுள்ள புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 - பார்க்க தூண்டும் 5 காரணங்கள் !
Updated on : 12 January 2022

புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 , ப்ளாக்பஸ்டர் திரைப்படம் ப்ரைம் வீடியோவில் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. ஜனவரி 14 ஆம் தேதி முதல் இது இந்தியில் ஸ்ட்ரீம் ஆகிறது.



 



ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர்களுக்கு எப்போதுமே திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கும். காரணம் கதையும், கலைஞர்களின் நடிப்பும், அப்புறம் வெகு நிச்சயமாக சண்டைக் காட்சிகளுக்காகவும் வரவேற்பு இருக்கும். ஆனாலும் எப்போதாவது ஒருமுறை தான் புஷ்பா போன்ற படங்கள் திரைக்கு வருகின்றன. புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 திரை ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என அனைத்துமே தூள் ரகம். அதனாலேயே புஷ்பா ரசிகர்கள் பாடல்கள், வசனங்களை பேசி நடித்து ஆயிரக்கணக்கில் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இத்தனைக்கும் பிறகும் புஷ்பா படம் பற்றி அறிந்ததில்லை எனக் கூறுவோர் பாறைக்கடியில் தான் வாழ்ந்திருக்க வேண்டும். ஒருவேளை படத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால் பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கி தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் மொழிகளில் புஷ்பாவை ப்ரைம் வீடியோவில் பாருங்கள்.



 



5 காரணங்கள்:



புஷ்பா.. புஷ்ப ராஜ்: இந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய மிக முக்கியக் காரணம் புஷ்பா பாத்திரத்தில் நடித்துள்ள அல்லு அர்ஜூன். ஏற்கெனவே அவர் திறன்மிகு நடிகர் என்பது திரையுலகம் அறிந்தது தான். ஆனால், புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 ல் அல்லு அர்ஜூனின் நடிப்பு அடுத்தக்கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. அவரது நடன அசைவுகளும், சண்டைக் காட்சிகளும், சின்ன சின்ன மேனரிஸம்களும், தாடியைத் தடவிக் கொடுக்கும் ஸ்டைலும் க்ளாஸ் ரகம். இந்தப் படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் இந்தியிலும் ஸ்ட்ரீம் ஆகிறது.



 



எல்லை கடந்த பேச்சு: புஷ்பா: தி ரைஸ் தேசிய எல்லை மட்டுமல்ல சர்வதேச எல்லையும் கடந்து புகழ் பெற்றுள்ளது. பல்வேறு செலிபிரிட்டிகளும் புஷ்பாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதே இதற்கு சாட்சி. புஷ்பா: தி ரைஸ் படத்தை இந்த ஆண்டின் சிறந்த என்டெர்டெய்னர் என்று கூறினால் அது மிகையாகாது.



 



இரண்டு நடிகர்கள்:  அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில் என இரண்டு சிறந்த நடிகர்கள் திரையில் என்னவாகும் என்ற கேள்விக்கு.. மாயாஜாலம் நிகழும் என்பதுதான் பதில். அதுதான் நடந்துள்ளது. அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில் என இரண்டு நடிகர்களும் திரையில் தோன்றும்போதெல்லாம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றனர். ஐயோ ஃபஹத்துக்கு இந்தப் படத்தில் நிறைய காட்சிகள் இல்லையே என வருந்தும் அவரது ரசிகர்கள் புஷ்பா: தி ரைஸ் : பாகம் 2க்கு காத்திருக்கலாம். இந்தப் படம் ஃபஹத்துக்கு தெலுங்கில் கன்னித் திரைப்படம் என்பது முக்கியமானது.



 



இயக்குநர்: இந்தப் படத்தைக் காண நீங்கள் ரிமோட்டை ஆன் செய்தால் என்ட் கிரெடிட் முடியும் வரை நிறுத்தாமல் பார்ப்பீர்கள். அதற்குக் காரணம் இயக்குநர் சுகுமார். புஷ்பா: தி ரைஸ் படம் மூலம் ஆக்‌ஷன் படங்களுக்கு அவர் ஒர் அளவுகோலை நிர்ணயித்துள்ளார்.



 



ஆடியோ விஷுவல் விருந்து: இந்தப் படத்தில் பட்டாசு போல் வெடிக்கும், 10,000 வாட் மின்சாரம் போல் ஷாக்கடிக்கும் வசனங்களும், அழகிய லொக்கேஷன்களும், நடிகர்கள் ஒவ்வொருவரின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது. படத்தைப் பார்த்து முடித்தவுடன் இரண்டாம் பாகம் எப்போது என்ற எண்ணம் உருவாகும்.



 



இதுவரை புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 ஐ பார்க்காவிட்டால் அவர்கள் பெரிதாக இழந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உங்களுக்காகவே ப்ரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் புஷ்பா ஸ்ட்ரீம் ஆகிறது. இப்போது வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் இந்தியிலும் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. வீக் எண்டுக்குத் தயாராகுங்கள், புஷ்பாவுடன்.





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா