சற்று முன்

‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு   |    'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்   |    இலங்கையில் கேக் வெட்டி நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம்!   |    புத்தம் புது காலை விடியாதா..பற்றி பாலாஜி மோகன் கருத்து !   |    ரவீனாவை என்னைப்போல் யாரும் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள் ! - நடிகர் விஷால்   |    பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று இணையத்தை கலக்கும் ‘புத்தம் புது காலை விடியாதா’   |    தமிழர் திருநாளன்று நடிகர் பார்த்திபன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட 'ஆதார்' ஃபர்ஸ்ட் லுக்   |    இயக்குநர் SR பிரபாகரன் இயக்கத்தில் “கொம்பு வச்ச சிங்கம்டா”   |    பரவசமூட்டும் படங்கள் - இலவச டிக்கட்டுகளை வழங்கவுள்ள இணையதளம் !   |    பக்கத்து வீட்டு பெண்ணாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் லிஜோமோள் ஜோஸ் !   |    டிஜிட்டல் தளங்கள் குறித்து நடிகை நதியா பெருமிதம் !   |    வடிவேலுவுக்காக லண்டனில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் !   |    நெஞ்சை உருக்கும் கதைக்களத்துடன் 'சினம் கொள்'   |    சண்டிகர் கரே ஆஷிக்கி குழுவினருக்கு இயக்குநர் விஜயஸ்ரீ பாராட்டு !   |    சர்வதேச எல்லை கடந்து புகழ் பெற்றுள்ள புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 - பார்க்க தூண்டும் 5 காரணங்கள் !   |    பெண் சாதனையாளர்களுக்கு சுயம்பி விருது, 4-வது சங்கமத்தை நடத்திய இலங்கேஸ்வரி முருகன்   |    IK.Jayanthi lal appointed as Commissioner   |    ஆர் கே செல்வமணியை எச்சரித்த தயாரிப்பாளர்கள் சங்கம்   |    பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா விஜயகுமார் நடிக்கும் 'தில்லு இருந்தா போராடு'   |    விவேக் & மெர்வினின் உணர்வுபூர்வமான இசையில் ஹரிஹரன் இயக்கத்தில் ‘என்ன சொல்ல போகிறாய்’   |   

சினிமா செய்திகள்

பெண் சாதனையாளர்களுக்கு சுயம்பி விருது, 4-வது சங்கமத்தை நடத்திய இலங்கேஸ்வரி முருகன்
Updated on : 11 January 2022

தமிழ்நாடு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர் இலங்கேஸ்வரி முருகன். ஒப்பனைக் கலைஞராக இந்த துறையில் 21 வருட அனுபவம் கொண்டவர் இவர்..   தற்போது சங்கமம் நான்காவது வருட நிகழ்ச்சியை நடத்தி அடித்தட்டு நிலையில் இருந்து தங்களது உழைப்பால் முன்னேறி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் பல்வேறு  துறைகளை சேர்ந்த பத்து பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு சுயம்பி என்கிற விருது வழங்கி கவுரவித்து உள்ளார் இலங்கேஸ்வரி முருகன். இந்த நிகழ்வின்போது சிறந்த ஒப்பனை கலைஞர் விருது பொன்னிக்கு வழங்கப்பட்டது. 

 மேலும் சுயம்பி விருது மதுரை போன்ற தமிழகததே சேர்ந்தவர்களுக்கும் ஓடிஸா போன்ற வெளி மாநில சாதனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது. டயமண்ட் ஸ்டார் விருது கேரளா, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களில் வசிக்கும் சாதனை பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டது. சன் டிவி புகழ் நடிகை கண்மணிக்கு சிறந்த பிரபலம் (Popular Face) விருது வழங்கப்பட்டது. திருநங்கை மிலாவுக்கு ஊக்க பெண்மணி (Inpiring Woman) விருது கவுரவிக்கப்பட்டது. ஷாலினி ஷாலுவுக்கு சிறந்த போட்டோஜெனிக் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு மணமகள் மேக்கப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுக்க சின்ன சின்ன கிராமங்களில் இருந்து  கூட பல அழகு கலை நிபுணர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக குழந்தைகளுக்கான பேஷன் ஷோ ஒன்றை நடத்தி அதில் நம் சாதாரண வீட்டு பிள்ளைகளை நடந்துவர செய்தனர். உபாசனா இந்த பேஷன் ஷோவில் குழந்தைகளுக்காக ஷூ ஸ்டாப்பராக நடந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டிய ஒன்னேகால் லட்சம் ரூபாயை குழந்தைகள் நல மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொள்வதற்காக குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் வசம் வழங்கப்பட்டது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா