சற்று முன்

‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு   |    'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்   |    இலங்கையில் கேக் வெட்டி நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம்!   |    புத்தம் புது காலை விடியாதா..பற்றி பாலாஜி மோகன் கருத்து !   |    ரவீனாவை என்னைப்போல் யாரும் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள் ! - நடிகர் விஷால்   |    பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று இணையத்தை கலக்கும் ‘புத்தம் புது காலை விடியாதா’   |    தமிழர் திருநாளன்று நடிகர் பார்த்திபன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட 'ஆதார்' ஃபர்ஸ்ட் லுக்   |    இயக்குநர் SR பிரபாகரன் இயக்கத்தில் “கொம்பு வச்ச சிங்கம்டா”   |    பரவசமூட்டும் படங்கள் - இலவச டிக்கட்டுகளை வழங்கவுள்ள இணையதளம் !   |    பக்கத்து வீட்டு பெண்ணாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் லிஜோமோள் ஜோஸ் !   |    டிஜிட்டல் தளங்கள் குறித்து நடிகை நதியா பெருமிதம் !   |    வடிவேலுவுக்காக லண்டனில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் !   |    நெஞ்சை உருக்கும் கதைக்களத்துடன் 'சினம் கொள்'   |    சண்டிகர் கரே ஆஷிக்கி குழுவினருக்கு இயக்குநர் விஜயஸ்ரீ பாராட்டு !   |    சர்வதேச எல்லை கடந்து புகழ் பெற்றுள்ள புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 - பார்க்க தூண்டும் 5 காரணங்கள் !   |    பெண் சாதனையாளர்களுக்கு சுயம்பி விருது, 4-வது சங்கமத்தை நடத்திய இலங்கேஸ்வரி முருகன்   |    IK.Jayanthi lal appointed as Commissioner   |    ஆர் கே செல்வமணியை எச்சரித்த தயாரிப்பாளர்கள் சங்கம்   |    பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா விஜயகுமார் நடிக்கும் 'தில்லு இருந்தா போராடு'   |    விவேக் & மெர்வினின் உணர்வுபூர்வமான இசையில் ஹரிஹரன் இயக்கத்தில் ‘என்ன சொல்ல போகிறாய்’   |   

சினிமா செய்திகள்

ஆர் கே செல்வமணியை எச்சரித்த தயாரிப்பாளர்கள் சங்கம்
Updated on : 10 January 2022

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் ( பெப்சி ) சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சு வார்த்தை இன்னும் முடிவுறாத நிலையில் திடீரென பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நடைபெற்ற சம்பள பேச்சுவார்த்தையில் 40 முதல் 50 சதவீதம் சம்பள உயர்வு கிடைத்திருப்பதாகவும் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திட இருப்பதாகவும் பதட்டத்துடன் அறிவித்தார் பெப்சி யின் தலைவராக இருக்கும் ஆர் கே செல்வமணி.  இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இன்னும் சில சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சம்பள பேச்சுவார்த்தை முடிவுறாத நிலையில் முடிவுற்றதாக செல்வமணி கூறியிருப்பது அனைத்து தயாரிப்பாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு அவசரமாக செல்வமணி அறிவிக்க வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. சம்பள பேச்சுவார்த்தை முடிவுற்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிக்கும் வரை பழைய சம்பளத்தையே வழங்க வேண்டும் என அனைத்து தயாரிப்பாளர்களும் கூறிவருகிறார்கள். செல்வமணி கூறியது போல் தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில் சம்பளம் வழங்க இயலாது என்றும் தயாரிப்பாளர்கள் கூறிவருகிறார்கள். அதனால் நாங்கள் அறிவிக்கும் வரை பெப்சி தொழிலாளர்களுக்கு பழைய சம்பளமே நடைமுறையில் இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் கூறுகையில்.. செல்வமணியை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகமும் தற்போதுள்ள அரசாங்கமும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.அதனால் நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக முடிவுறாத சம்பள பேச்சுவார்த்தையை முடிவுற்றதாக அறிவித்து நானும் இருக்கிறேன் என்று அவரை யாரும் மறந்துவிடக்கூடாது என்று நினைவுபடுத்தும் விதமாக பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டியளித்துள்ளார். வருடத்தின் முதல் பேட்டியே பொய்யான தகவல்கள் என்பது அனைவரும் உணர்ந்துள்ளனர். அதனால் செல்வமணியின் தில்லாலங்கடி வேலையெல்லாம் இனி எடுபடாது என்று தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா