சற்று முன்

‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு   |    'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்   |    இலங்கையில் கேக் வெட்டி நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம்!   |    புத்தம் புது காலை விடியாதா..பற்றி பாலாஜி மோகன் கருத்து !   |    ரவீனாவை என்னைப்போல் யாரும் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள் ! - நடிகர் விஷால்   |    பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று இணையத்தை கலக்கும் ‘புத்தம் புது காலை விடியாதா’   |    தமிழர் திருநாளன்று நடிகர் பார்த்திபன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட 'ஆதார்' ஃபர்ஸ்ட் லுக்   |    இயக்குநர் SR பிரபாகரன் இயக்கத்தில் “கொம்பு வச்ச சிங்கம்டா”   |    பரவசமூட்டும் படங்கள் - இலவச டிக்கட்டுகளை வழங்கவுள்ள இணையதளம் !   |    பக்கத்து வீட்டு பெண்ணாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் லிஜோமோள் ஜோஸ் !   |    டிஜிட்டல் தளங்கள் குறித்து நடிகை நதியா பெருமிதம் !   |    வடிவேலுவுக்காக லண்டனில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் !   |    நெஞ்சை உருக்கும் கதைக்களத்துடன் 'சினம் கொள்'   |    சண்டிகர் கரே ஆஷிக்கி குழுவினருக்கு இயக்குநர் விஜயஸ்ரீ பாராட்டு !   |    சர்வதேச எல்லை கடந்து புகழ் பெற்றுள்ள புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 - பார்க்க தூண்டும் 5 காரணங்கள் !   |    பெண் சாதனையாளர்களுக்கு சுயம்பி விருது, 4-வது சங்கமத்தை நடத்திய இலங்கேஸ்வரி முருகன்   |    IK.Jayanthi lal appointed as Commissioner   |    ஆர் கே செல்வமணியை எச்சரித்த தயாரிப்பாளர்கள் சங்கம்   |    பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா விஜயகுமார் நடிக்கும் 'தில்லு இருந்தா போராடு'   |    விவேக் & மெர்வினின் உணர்வுபூர்வமான இசையில் ஹரிஹரன் இயக்கத்தில் ‘என்ன சொல்ல போகிறாய்’   |   

சினிமா செய்திகள்

பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் ஆஷா சரத்
Updated on : 10 January 2022

நடிகை ஆஷா ஷரத் தனது நடிப்புதிறமை மூலம் தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்துள்ளார், வெகு  இயல்பான நடிப்பு என்பது, அவரது பலமாக மாறியுள்ளது. வெகு சில நடிகைகளே அம்மா கதாப்பாத்திரங்களில் சிறந்து விளங்கியும் அதே நேரம் பிரபலமாகவும் மாறியுள்ளார்கள். இதற்கு சமகால எடுத்துக்காட்டாக ஆஷா ஷரத் விளங்குகிறார். தாய்மை எப்போதும் கம்பீரத்தையும், உணரச்சி பிரவாகங்களையும் உள்ளடக்கியது, இதை ஒரு நடிகை செய்வதென்பது சுலபமான காரியம் அல்ல. இருப்பினும், இந்த குணங்களை இயல்பிலேயே பெற்றவராக ஆஷா ஷரத் பாராட்டப்படுகிறார். அதற்கு ஒரு உதாரணமாக Disney Plus Hotstar தளத்தில், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள 'அன்பறிவு' திரைப்படத்தில்,அம்மா பாத்திரத்தில் அவரது அருமையான நடிப்பிற்காக, ஆஷா சரத்  இப்போது பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார்.  இது குறித்து கூறிய நடிகை ஆஷா ஷரத்… தமிழ்த் துறையில் எனது நடிப்புக்கு கிடைத்து வரும்  அங்கீகாரத்தைப் காண மிகுந்த  மகிழ்ச்சி அளிக்கிறது. த்ரிஷ்யம் படத்தொடர்  எனது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, இயக்குனர் ஜீத்து ஜோசப் எனக்கு அற்புதமானதொரு பாத்திரத்தை வழங்கினார், அந்த கதாபாத்திரம் ஒரு வலுவான போலீஸாகவும், அதே நேரம் மனதளவில் உடைந்து போன  தாயாக, குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கும் பாத்திரமாகவும் இருந்தது. அதில் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன்  தமிழ் ரீமேக் மூலம் கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகருடன் திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது நடிப்பை விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் பாராட்டிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போது, அன்பறிவு படத்தில் எனது கதாப்பாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்து வருவது என்னை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தியுள்ளது என்கிறார்.  

 இவரது நடிப்பில்  சமீபத்திய வெளியீடான அன்பறிவு படத்தில் அம்மாவாக அவரது நடிப்பு, பாந்தமான பார்வை, அற்புதமான உடல்மொழியுடன்,  அனைவரையும் கவருவதாக இருந்தது. இந்த மாயாஜால நடிப்பு திறமையின் ரகசியத்தை அறிய தமிழ் உலகில் அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இது குறித்து கூறுகையில்… 

அடிப்படையில் நான் பரதநாட்டிய நடனக் கலைஞர், கேரளாவில் நடக்கும் அனைத்து சர்வதேச விழாக்களிலும் நான் பங்கேற்று நடனமாடியுள்ளேன். என் நடனத்திறமை குறிப்பிடத்தக்க வகையில், நடிப்பின் நுணுக்கங்களை வெளிப்படுத்தவும், நடிகையாக எனது வாழ்க்கையை வடிவமைப்பதிலும், எனக்கு பேருதவியாக இருந்துள்ளது.  அவர் மேலும் கூறுகையில்.. தமிழ் சினிமா எப்போதுமே திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் மையமாக உள்ளது. இது மற்ற மாநில திரைத்துறை நடிகர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஒரு அழகான பாத்திரத்தை அளித்து, அவர்களை அபிமான நடிகர்களாக மாற்றி வருகிறது. இங்குள்ள அனைவரின் அன்பையும் பாராட்டையும் நான் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்று கூறும் ஆஷா ஷரத் தற்போது தமிழ்திரைத்துறையில் பெரும் நட்சத்திரங்களின் படங்கள் பலவற்றில்  நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா