சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

விதார்த் நடிக்கும் வித்தியாசமான கதையம்சத்துடன் 'கார்பன்'.
Updated on : 10 January 2022

விதார்த் நடிப்பில் வரவிருக்கும் 25-ஆவது படம் 'கார்பன்'.விஜய் ஆண்டனியை வைத்து 'அண்ணாதுரை' படத்தை இயக்கிய சீனிவாசன்தான் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்.



 



விதார்த்துக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம்.அதற்கான தீவிர முயற்சியில் இருப்பவரின் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது அதிலிருந்து மீண்டாரா இலட்சியத்தை அடைந்தாரா என்பதுதான் கதை.



 



ஒரு இரவு விதார்த்துக்கு கனவு வருகிறது.அந்தக் கனவில் விதார்த்தின் அப்பாவுக்கு கார் ஆக்சிடென்ட் நடக்கிறது.இது வெறும் கனவுதானே என்று நினைக்கும் விதார்த் வாழ்வில் அடுத்தநாளே அப்படியொரு சம்பவம் நடக்கிறது. கனவில் பார்த்தமாதிரியே ஆக்சிடெண்ட் நடக்கும் இடம்,கார் எல்லாமே ஒரே மாதிரி இருக்கிறது. அப்பாவின்  உயிரைக் காப்பாற்ற தேவையான பணமும் இல்லாமல்,விபத்து ஏற்படுத்திய நபரின் முகம் தெரியாமல் அவர் படும் பாடுதான் 'கார்பன்' .



 





 



பெரும்பாலும் இரவில் நடக்கிற கதை. ஐம்பதுக்கும் மேற்பட்ட லொகேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கும். இந்தப்படத்தில் தான்யா பாலகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தவிர,இயக்குனர் மாரிமுத்து, மூணாறு ரமேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, ராம்சன் வினோத் சாகர், டவுட் செந்தில், பேபி ஜானு பிரகாஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.



 



ஒளிப்பதிவு - விவேக் ஆனந்தம் சந்தோஷ், இசை - சாம் சி எஸ்,எடிட்டர் பிரவின் கே.எல்.



 



"முதல் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி.!? " என்று இயக்குனரிடம் கேட்டபோது " இப்போல்லாம் இயக்குனர் , நடிகர் ,தயாரிப்பாளர் எல்லோருமே காம்பினேஷன் இருந்தால்தான் படம் பண்ணவே வர்றாங்க. கதையை மட்டும் நம்பி வர்றது சிலபேர்தான்! அப்படி எனக்கு கிடைத்தவர்தான் 'பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் ' ஜோதி முருகன் - பாக்கியலட்சுமி இரண்டு பேரும். ரெண்டு பேருமே நண்பர்கள்தான். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.லாக்டவுனுக்கு ஊருக்கு வந்திருந்த போது, இந்தக் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று ஆரம்பிச்சு இதோ ரிலீஸ்க்கு ரெடி படம் பார்த்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் கொடுத்த ஊக்கமும் ஆதரவும் என் படத்துக்கு கிடைத்த வெற்றி".என்கிறார்.



 



 



 









 





 




 




 









 



 


 


 























Share this Tweet


 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா