சற்று முன்

கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |    “சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்   |    எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!   |    Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்   |    விஜய் அரசியல் குறித்த அனு மோகன் கருத்துகள் தனிப்பட்டவை - ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர் விளக்கம்!   |    மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!   |    ‘பள்ளிச்சட்டம்பி’யில் விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர் கேரக்டர் போஸ்டர் வெளியீடு!   |    சென்னைக் கடற்கரையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘வித் லவ்’ படக்குழுவினர்!   |    சசிகுமாரின் ‘மை லார்ட்’ அதிகாரம், அன்பு, அரசியல் நையாண்டி கலந்து பிப்ரவரி 13 முதல் திரையில்!   |    அக்கு சிகிச்சையின் மகத்துவத்தைப் பேசும் சீனு ராமசாமி   |    'ஜீவாவின் கம்பேக் வெற்றி' - வெற்றி விழாவில் நடிகர் மகிழ்ச்சி!   |    படப்பிடிப்புக்கு முன்பே நடிகர் ஏகன் படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!   |    அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் 4K டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகும் ‘அமைதிப்படை’   |    ‘நீ நடி கண்ணா’ என்ற ஒரு வார்த்தை என் பயங்களை உடைத்தது – நடிகர் அபிஷந்த் ஜீவிந்த்   |    மெகா ஸ்டார் குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷம், ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலை!   |    25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!   |    மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

வட இந்தியாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் 'கபளீகரம்'.
Updated on : 03 December 2021

நாட்டில் எவ்வளவோ குற்றங்கள் நடக்கின்றன சில குற்றங்கள் காவல் துறைக்கே பெரும் சவாலாக இருக்கும். அப்படி காவல்துறையைக் கதிகலங்க வைத்த லாரி கொள்ளை என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'கபளீகரம்'.



 



வட இந்தியாவில் லாரிகளைத்  திட்டமிட்டு ஒரு கும்பல் திருடிக் கொண்டுபோகும் குற்றங்கள் நடைபெற்று வந்தன.பல்வேறு சவால்கள், சிரமங்களுக்கிடையே இதைக் காவல்துறை கண்டுபிடித்தது பரபரப்பூட்டியது. இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துத்தான் 'கபளீகரம்' படம் உருவாகியிருக்கிறது



 



இப்படத்தை மகிழ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தக்ஷன் விஜய் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார்



 



இப்படத்திற்கு ஒளிப்பதிவு செல்வம், இசை கார்த்திக்.



 



ஒரு நேர்மையான துடிப்பான காவல்துறை அதிகாரியாக நாயகன் தக்ஷன் விஜய் நடித்துள்ளார். மேலும் மைம் கோபி, யோகிராம் மற்றும் பலர்  நடித்துள்ளனர். 



 



 இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், கிருஷ்ணகிரி, ஓசூர், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. 



 



கதை கிருஷ்ணகிரியிலிருந்து கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில்  நடப்பதால் பெரும் பகுதி படப்பிடிப்பு நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.



 



"சில உண்மைச் சம்பவங்கள் கற்பனையை மிஞ்சும் அளவிற்கு இருக்கும். இப்படிப்பட்ட லாரி திருடும் கும்பல் கல்கத்தாவில் சிக்கியது. இந்தக்கும்பல் லாரிகளைத் திருடும் போது லாரி ஓட்டி வந்த ஓட்டுநரையும் உடனிருக்கும் கிளீனரையும் கொலைசெய்து எரித்து அடையாளம் தெரியாமல் ஆக்கி விடுவார்கள்.எந்தத் தடயமும் இருக்காது அவர்களின் செயல்களைப் பார்த்த போலீசார் அது கற்பனையையே மிஞ்சுவதாக இருந்ததாக வியந்துள்ளனர். அந்தச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது" என்கிறார் இயக்குநர் தர்ஷன் விஜய்.



 



இப்படத்தில்  சோகப் பாடல் ஒன்றும் மெலோடி பாடல் ஒன்றும் என இரண்டு பாடல்கள் உள்ளன. ஒன்றை மதுபாலகிருஷ்ணனும் இன்னொன்றை ஸ்ரீகாந்த் ஹரிசரணும் பாடியுள்ளனர்.சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளனர்.



 



படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா