சற்று முன்

நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |    அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!   |    கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!   |    'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |   

சினிமா செய்திகள்

19 திரைப்பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Updated on : 23 November 2021

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம்  என்கிற அழுத்தமான நம்பிக்கையோடு

'கிராண்மா' என்கிற படம்  உருவாகியுள்ளது.



 



இப்படத்தை  GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள்  ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர். ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.



 



பிரதான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.

மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ்  முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.



 



கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது .இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.



 



இப்படத்தின் மீது படக்குழு வைத்துள்ள நம்பிக்கைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரையுலகின் பிரபலங்கள்    சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பாவனா மேனன், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா ,சூர்யா ஜே. மேனன், ஆரதி சாஜன், லியானா லிஷாய், தீப்தி சதி, ஷிவதா , மரினா மைக்கேல் , கோகுல்சுரேஷ் , சரத் அப்பானி,ஹேம்நாத் மேனன், அன்சன் பால், மெஹ்பூல் சல்மான், முகமது ரபி என 19 திரைப் பிரபலங்கள்

தங்கள் சமூக ஊடகங்களில் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் படத்தைப் பல மடங்கு மேலே கொண்டு சென்று விட்டார்கள்.



 



இந்த பிரமாண்ட நிகழ்ச்சி பற்றித் தயாரிப்பாளர் ஜெயராஜ் கூறும்போது,







"முதலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அன்புடன் வெளியிட்டுள்ள திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களது அன்பு  அளவிட முடியாதது. இது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக உணர வைக்கிறது .இந்த நிகழ்வு படத்தைப் பலமடங்கு வெளிச்சத்துக்குக்  கொண்டு சென்றுள்ளது.



 



படத்தின் ஆடியோ ,டிரைலர் விரைவில் வெளியாக இருக்கின்றன.படத்தை உலக அளவில் திரையரங்குகளில் வெளியிடும் திட்டங்களை விரைவில்  அறிவிக்க இருக்கிறோம்."என்றார்.



 





 



படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் எஸ்.எஸ்  பேசும்போது,





" முதலில் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பட வாய்ப்பை அளித்த என் தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 19 பிரபலங்கள் தங்கள் அன்பையும் ஆதரவையும் காட்டும் வகையில், தங்களது சமூக ஊடகங்களில்  வெளியிட்டுள்ளது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இதை எங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய தொரு வெற்றியாக நான் உணர்கிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயமாகப் புது அனுபவமாக இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.படத்தில் பணியாற்றிய  நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே தங்களது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள்.ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு எங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தி உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. " என்றார்.



 



'கிராண்மா' கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட  சோனியா அகர்வால் ,சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். படத்திற்கு ஒளிப்பதிவு - யஸ்வந்த் பாலாஜி .கே , எடிட்டிங் - அஸ்வந்த் ரவீந்திரன், இசை- சங்கர் ஷர்மா, ஒப்பனை - அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம், ஸ்டண்ட் - முகேஷ் ராஜா,







 சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது. திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் 'கிராண்மா'  விரைவில் திரையில் ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா