சற்று முன்

டிசம்பர் 10 முதல் திரையரங்கில் ஆறு மொழிகளில் உருவாகும் 'மட்டி'   |    'உயிரே' RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியீடு!   |    சத்யராஜ் வெளியிட்ட 'உழைக்கும் கைகள்' படத்தின் ட்ரைலர்   |    'வாஸ்கோடகாமா' படத்தின் பூஜை போடப்பட்டு இன்று இனிதே துவங்கியது   |    சூர்யா மற்றும் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்   |    விஜய் ஆண்டனியும், 'தமிழ்படம்' புகழ் C.S.அமுதனும் இணையும் படம் இன்று பூஜையுடன் துவங்கியது!   |    மாநாடு ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்! மிகுந்த மன வருத்தத்தில் சுரேஷ் காமாட்சி   |    ஜி5 மற்றும் திங்க் பிக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 'அத்திலி சினிமா' நிறுவனம் நோட்டீஸ்   |    19 திரைப்பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குருப்’ மகிழ்ச்சியில் வசனகர்த்தா ஆர்.பி.பாலா   |    குடியரசு தினத்தன்று வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”   |    முதல்வர் மு க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த நடிகர் உதயா   |    சமுத்திரக்கனி நடிக்கும் 'சித்திரை செவ்வானம்' டிசம்பர் 3 முதல் ZEE5 ஒடிடி தளத்தில்..   |    மூவர் கூட்டணியில் ஐந்து மொழிகளில் உருவாகும் 'மைக்கேல்'   |    யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கும் 'நினைவோ ஒரு பறவை'   |    'சிம்புவிடம் சில சேஷ்டைகள் உண்டு' மேடையில் உண்மையை போட்டு உடைத்த பிரபல இயக்குனர்   |    கோட்டைமுனியாக R. K. சுரேஷ் நடிக்கும் புதியப்படம்   |    ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் இசை ஆல்பம்! விரைவில் சரிகமா ஒரிஜினல்ஸில்   |    நவம்பர் 20 அன்று,வெளி வருகிறது இந்த ஆண்டின் மிகச்சிறந்த பெப்பி பாடல்   |    தன்னுடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் செய்த செயலை கேள்விப்பட்டு நேரில் வந்த அருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

முதல்வர் மு க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த நடிகர் உதயா
Updated on : 22 November 2021

மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு,: அன்பு வணக்கம்.  பதவி ஏற்ற நாள் முதல் பம்பரமாக சுற்றி சுழன்று அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லாட்சி வழங்கி எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும் உழைப்புக்கு உதாரணமாகவும் விளங்கி வருகிறீர்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் தொடர்ந்து எடுத்து வரும் அற்புதமான நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி.  தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களை நேற்று முதல் திரையரங்குகள் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றன என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்து வர விரும்புகிறேன். இதனால் பல திரையரங்குகளில்  பார்வையாளர்களே இல்லை எனலாம்.  கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கான தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனமாரப் பாராட்டுகிறோம்.   தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்கள் திரையரங்குகள் மற்றும் மால்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறித்த விழிப்புணர்வை போதுமான அளவில் மக்களிடம் ஏற்படுத்த சிறிது கால அவகாசத்தை வழங்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.  ஏனென்றால், இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக புதிய திரைப்படங்களின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து திரையுலகம் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், இதனால் மீண்டும் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே, எனது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்குமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவை ஒழிப்பதற்கான தங்களின் முயற்சிகளுக்கு  மனமார்ந்த ஒத்துழைப்பை வழங்க திரையுலகம் உள்ளிட்ட அனைவரும் உறுதி கூறுகிறோம்.  மிக்க நன்றி,  பணிவன்புடன், 

நடிகர் உதயா

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா