சற்று முன்

டிசம்பர் 10 முதல் திரையரங்கில் ஆறு மொழிகளில் உருவாகும் 'மட்டி'   |    'உயிரே' RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியீடு!   |    சத்யராஜ் வெளியிட்ட 'உழைக்கும் கைகள்' படத்தின் ட்ரைலர்   |    'வாஸ்கோடகாமா' படத்தின் பூஜை போடப்பட்டு இன்று இனிதே துவங்கியது   |    சூர்யா மற்றும் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்   |    விஜய் ஆண்டனியும், 'தமிழ்படம்' புகழ் C.S.அமுதனும் இணையும் படம் இன்று பூஜையுடன் துவங்கியது!   |    மாநாடு ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்! மிகுந்த மன வருத்தத்தில் சுரேஷ் காமாட்சி   |    ஜி5 மற்றும் திங்க் பிக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 'அத்திலி சினிமா' நிறுவனம் நோட்டீஸ்   |    19 திரைப்பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குருப்’ மகிழ்ச்சியில் வசனகர்த்தா ஆர்.பி.பாலா   |    குடியரசு தினத்தன்று வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”   |    முதல்வர் மு க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த நடிகர் உதயா   |    சமுத்திரக்கனி நடிக்கும் 'சித்திரை செவ்வானம்' டிசம்பர் 3 முதல் ZEE5 ஒடிடி தளத்தில்..   |    மூவர் கூட்டணியில் ஐந்து மொழிகளில் உருவாகும் 'மைக்கேல்'   |    யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கும் 'நினைவோ ஒரு பறவை'   |    'சிம்புவிடம் சில சேஷ்டைகள் உண்டு' மேடையில் உண்மையை போட்டு உடைத்த பிரபல இயக்குனர்   |    கோட்டைமுனியாக R. K. சுரேஷ் நடிக்கும் புதியப்படம்   |    ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் இசை ஆல்பம்! விரைவில் சரிகமா ஒரிஜினல்ஸில்   |    நவம்பர் 20 அன்று,வெளி வருகிறது இந்த ஆண்டின் மிகச்சிறந்த பெப்பி பாடல்   |    தன்னுடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் செய்த செயலை கேள்விப்பட்டு நேரில் வந்த அருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

கோட்டைமுனியாக R. K. சுரேஷ் நடிக்கும் புதியப்படம்
Updated on : 20 November 2021

ட்ரீம் லைட்  பிக்சர்ஸ் (பி) லிமிடெட் சார்பாக சிங்கப்பூர் N. ஹபீப் மிகுந்த பொருட்ச் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் கோட்டைமுனி. புதுமுக இயக்குனரான ந.இளைய பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.  1980 காலகட்டத்தில் இராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் கடல் அரசனாக நிஜத்தில் வாழ்ந்த கோட்டைமுனி என்பவரின் வாழ்க்கையில், இலங்கை தனுஷ்கோடி பகுதிக்கு இடையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி கேங்க்ஸ்டர் படமாக கோட்டைமுனி திரைப்படம் உருவாகிறது. இதில் கோட்டைமுனியாக முற்றிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் R.K.சுரேஷ் நடிக்கிறார்.  நீண்ட நெடுநாளைக்குப் பிறகு முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் 

வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் முக்கிய கதாப்பாத்திரம்

ஏற்றிருக்கிறார். மேலும் சைத்தான் படப் புகழ் அருந்ததி நாயர் கதைநாயகியாக நடிக்க,

ஷரவணசக்தி, ராஜசிம்மன், நிழல்கள் ரவி, சச்சு, தாமு, முத்துராமன், முத்துக்காளை, திருமுருகன்,  உள்பட பலர் நடிக்கின்றனர்.  கடலும் கடல் சார்ந்த பகுதிகளில் நடக்கும் கதை என்பதால், இதன் படப்பிடிப்பு  இராமேஸ்வரம், வேதாரண்யம், நாகப்பட்டிணம் ஆகிய கடற்கரைப் பகுதியில் நடக்க இருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத அளவிற்கு ஆழ்கடல் சண்டைக் காட்சிகளை புதிய தொழில்நுட்பத்துடன் வித்தியாசமான முறையில் படமாக்குவதற்கு படக்குழு  திட்டமிட்டு இருக்கிறது. 

 ஒளிப்பதிவு: A.M.M. கார்த்திகேயன்,  இசை: M.S.பாண்டியன், கலை: SK, படத்தொகுப்பு:  நெல்சன் ஆண்டனி,  நடனம்: சிவராக் சங்கர்,  பாடல்கள்: ப.கருப்பையா, சண்டைக்காட்சிகள்: டைகர் ஜான்மார்க், மக்கள் தொடர்பு: S.ப்ரியா, தயாரிப்பு நிர்வாகம்: K.S.வெங்கடேஷ்  அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கோட்டைமுனி திரையில் வெளியிடப்படும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா