சற்று முன்

போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |   

சினிமா செய்திகள்

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம், “FINALLY “ YouTube உடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் நுழைகிறது!
Updated on : 19 November 2021

Studio Green Films நிறுவன தயாரிப்பாளர்  K.E. ஞானவேல் ராஜா, தரமான கதைகள் மற்றும் வித்தியாசமான உள்ளடக்கம் கொண்ட கமர்ஷியல் படங்களை தயாரித்து, தொடர் வெற்றிகளை தந்ததன் மூலம், தமிழ் சினிமாவின் மதிப்பையே உயர்த்தியுள்ளார். சரியான உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட முழுமையான குழுவுடன் அதைச் செயல்படுத்துவதிலும், சரியான வெளியீட்டு உத்திகளை கடைப்பிடித்து, படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் உள்ள அவரது தனிச்சிறப்பு, அவரை திரைப்படத் துறையில் ஒரு அபிமான அடையாளமாக மாற்றியுள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான “மகாமுனி & டெடி” திரைப்படங்கள் இந்நிறுவனத் தயாரிப்பில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை குவித்து சாதனை படைத்துள்ளன. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஆவலை தூண்டும் பல வித்தியாசமான படைப்புகள் தற்போது தயாரிப்பு நிலையின் பல கட்டத்தில் உள்ளது.  இந்நிலையில் அடுத்ததாக ஒரு இனிய செய்தியாக இத்தயாரிப்பு நிறுவனம் “FINALLY “  YouTube சேனலுடன்  இணைந்து டிஜிட்டல் தளத்தில் கால்பதிக்கிறது. 



 



இது குறித்து Studio Green Films நிறுவன தயாரிப்பாளர் K.E.  ஞானவேல் ராஜா கூறும்போது…, ​​



 



Studio Green  எப்போதும் புதிய கதைகளை முயற்சிப்பதிலும், திறமையான புது இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றவுமே  விரும்புகிறது. இதுபோன்ற உண்மையான மற்றும் கடின உழைப்பாளிகளுடன் பணிபுரியும் அதிர்ஷ்டம் எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. டிஜிட்டல் தளம் உலகம் முழுதும், மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருவதால், இந்த டிஜிட்டல் உலகத்திற்குள் நாங்களும் ஒரு பயணத்தைத் தொடங்க விரும்பினோம். இந்த நோக்கத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களை  தனித்துவமான, பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை மிளிரும் கதைகளுடன் மகிழ்வித்து வரும், FINALLY போன்ற சூப்பர் லீக் சேனலுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.



 





 



பாரத், Founder-Director of Finally Pictures Pvt. Ltd கூறியதாவது.., 





இது மாதிரியான நிகழ்வு தமிழகத்தில் இதுவே முதல்முறை என்பதால் ‘FINALLY’ குழுவில் உள்ள  எங்கள் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம் ஆகும். ஒரு தயாரிப்பு நிறுவனம் YouTube சேனலுடன் இணைகிறது. Studio Green Films நிறுவனம் மற்றும் Finally Pictures Pvt. Ltd   எதிர்காலத்தில்  இனி  டிஜிட்டல்  சம்பந்தமான அனைத்து விசயங்களிலும் கூட்டாக செயல்படும்.  Studio Green நிறுவனத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சிறந்த   கதைகளை வழங்குவதற்கான இந்த புதிய முயற்சிக்கு,  நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதே சமயம் இதை மிகப்பெரும் பொறுப்பாகவும் நான் மதிக்கிறேன். பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கென தனி  YouTube சேனல்களை வைத்திருக்கின்றன, ஆனால் ஞானவேல்ராஜா சார் இந்த முறையிலிருந்து வெளியே வந்து, எங்களுடைய சேனல்கள் மூலம், இன்னும் சுவாரஸ்யமான உள்ளடக்கங்களைக் கொண்டு வர, எங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார். ஆரம்பத்தில், நாங்கள் YouTube உள்ளடக்கங்களில் கவனம் செலுத்தவுள்ளோம், அதைத் தொடர்ந்து OTT மற்றும் திரைப்பட தளங்களுக்கான உள்ளடக்கங்களை உருவாக்கவுள்ளோம். பல்வேறு தளங்களுக்கான மிகச்சிறந்த கதைகளுக்கான ஆரம்பகட்ட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம்.  மேலும் Studio Green அவர்களின் பக்கத்திலிருந்து அனைத்து விசயங்களிலும் முழு ஆதரவை தருவதாக எங்களுக்கு உறுதியளித்துள்ளனர். விரைவில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் மிகச்சிறந்த கதைகளை வெளியிடுவோம். 



 



தயாரிப்பு நிறுவனத்தின் படைப்புகளை பொருத்த வரையில் Studio Green Films நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர்  K.E. ஞானவேல் ராஜா தயாரித்து, பிரபுதேவா நடிப்பில்  உருவாகியுள்ள “தேள்” படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  இப்படம்  2021 டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா