சற்று முன்

டிசம்பர் 10 முதல் திரையரங்கில் ஆறு மொழிகளில் உருவாகும் 'மட்டி'   |    'உயிரே' RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியீடு!   |    சத்யராஜ் வெளியிட்ட 'உழைக்கும் கைகள்' படத்தின் ட்ரைலர்   |    'வாஸ்கோடகாமா' படத்தின் பூஜை போடப்பட்டு இன்று இனிதே துவங்கியது   |    சூர்யா மற்றும் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்   |    விஜய் ஆண்டனியும், 'தமிழ்படம்' புகழ் C.S.அமுதனும் இணையும் படம் இன்று பூஜையுடன் துவங்கியது!   |    மாநாடு ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்! மிகுந்த மன வருத்தத்தில் சுரேஷ் காமாட்சி   |    ஜி5 மற்றும் திங்க் பிக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 'அத்திலி சினிமா' நிறுவனம் நோட்டீஸ்   |    19 திரைப்பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குருப்’ மகிழ்ச்சியில் வசனகர்த்தா ஆர்.பி.பாலா   |    குடியரசு தினத்தன்று வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”   |    முதல்வர் மு க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த நடிகர் உதயா   |    சமுத்திரக்கனி நடிக்கும் 'சித்திரை செவ்வானம்' டிசம்பர் 3 முதல் ZEE5 ஒடிடி தளத்தில்..   |    மூவர் கூட்டணியில் ஐந்து மொழிகளில் உருவாகும் 'மைக்கேல்'   |    யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கும் 'நினைவோ ஒரு பறவை'   |    'சிம்புவிடம் சில சேஷ்டைகள் உண்டு' மேடையில் உண்மையை போட்டு உடைத்த பிரபல இயக்குனர்   |    கோட்டைமுனியாக R. K. சுரேஷ் நடிக்கும் புதியப்படம்   |    ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் இசை ஆல்பம்! விரைவில் சரிகமா ஒரிஜினல்ஸில்   |    நவம்பர் 20 அன்று,வெளி வருகிறது இந்த ஆண்டின் மிகச்சிறந்த பெப்பி பாடல்   |    தன்னுடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் செய்த செயலை கேள்விப்பட்டு நேரில் வந்த அருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் வெளியிட்ட படக்குழு
Updated on : 20 October 2021

வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 23 அன்று வெளியாகிறது.  பிரபாசின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும். பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு இது வெளியாகும்.  பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷியாம், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

 அக்டோபர் 23 அன்று டீசர் வெளியாவதை அறிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஸ்டைலான போஸில் பிரபாஸ் எதையோ யோசிப்பதை இதில் காணலாம். 'விக்ரமாதித்யா யார்?' என்ற கேள்வியோடு இது வெளியாகியுள்ளது. சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் சிறப்பு போஸ்டர் அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. இப்போது பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  பல்வேறு மொழிகளில் ஜனவரி 14, 2022 அன்று வெளியாகவுள்ள ராதே ஷியாம் திரைப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா