சற்று முன்
சினிமா செய்திகள்
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு
Updated on : 20 October 2021
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் 'மோகன்தாஸ்' படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் 'மோகன் தாஸ்'. 'களவு' என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் 'மோகன்தாஸ்' படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். எடிட்டர் கிருபாகரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் தொகுப்பு மற்றும் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடையில் 'மோகன் தாஸ்' படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியாகி ஏராளமான பாராட்டுகளைக் குவித்த நிலையில், தற்போது ‘மோகன்தாஸ்’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நாயகன் விஷ்ணு விஷால் புதிரான- அழுத்தமான- அர்த்தத்துடன் கூடிய சிரிப்புடன் இருக்க, அவரது கையில் ரத்தம் தோய்ந்த ஆயுதம் ஒன்றும் இருக்கிறது. அத்துடன் மூன்று குரங்குகள் பொம்மைகளாக தொங்கிக் கொண்டிருக்கிறது. நான்காவதாக ஒரு குரங்கு வீழ்த்தப்பட்டுள்ளதைப் போல் அமைந்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
சமீபத்திய செய்திகள்
‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார்.
அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தினார்.
இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து உணவு உட்கொண்டு ஒரு நினைவிடத்தக்க நேரத்தை பகிர்ந்துகொண்டார். சமூக நலத்திற்கான தனது பற்றும், மனிதநேயத்தை மையமாக கொண்ட செயல்பாடுகளும் வெளிப்படுத்திய இந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அவரது வாழ்க்கையில் ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது.

அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்
புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் M உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி தேசீய ஓடிடித் தளமான ZEE5, தன் அடுத்த அதிரடி சீரிஸ் மூலம், உண்மை கண்முன்னே இருந்தும், நாம் கண்டுபிடிக்க முடியாத, ஒரு இருண்ட உலகிற்குள் பயணிக்கும் வகையிலான, புதிய அனுபவத்தைத் தரும் படைப்பை, ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஒவ்வொரு தடயமும் மேலும் குழப்பத்திற்குள் இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் ‘ரேகை’ சீரிஸ் நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது.
இந்த சீரிஸ், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய குற்றக்கதை உலகின் கருவை எடுத்து கொண்டாலும், ‘ரேகை’ முழுமையாக தினகரன் M உருவாக்கி – எழுதி – இயக்கிய ஒரிஜினல் படைப்பாகும். ராஜேஷ் குமார் உலகின் கதைகளின் தளங்களில் ஆழமாகச் சென்று, சைக்கலாஜிகலாக ஒரு புதிய தீவிரத்தை அவர் இந்தக் கதைக்கு வழங்கியுள்ளார்.
உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?
S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்.
அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில் அவரை இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு தேடலும் அதன் பதிலும் இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது.
இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்
எழுத்தாளர் ராஜேஷ் குமார் கூறியதாவது..,
“ஒவ்வொரு குற்றக்கதையும் முதலில் மனித மனதில் தான் பிறக்கிறது. ‘ரேகை’யில் என்னை ஈர்த்தது – சாதாரணமாகத் தோன்றும் ஒரு சிறு ஐடியா எவ்வாறு சமூகத்தின் இருண்ட மூலைகளுக்கு இழுத்துச் செல்கிறது என்பதே. என் உலகிலிருந்து ஒரு ஐடியாவை புதிய படைப்பாளர் எடுத்து, முற்றிலும் புதிதாக ஒரு படைப்பை உருவாக்கும்போது, அந்தக்கதை இன்னும் உயிர்ப்புடம் இருக்கிறது என்பதற்கான சான்று இந்த சீரிஸ்.”
எழுத்தாளர் / இயக்குநர் தினகரன் M கூறியதாவது..,
“நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு வன்முறையைக் குறித்து இந்தத் சீரிஸ் பேசுகிறது. போலீஸ் புகாராக கூட மாறாத அந்த வன்முறை, பலர் வாழ்க்கையைச் சிதைக்கிறது. அந்த அசௌகரியத்தையும், யாரை நம்புவது என்ற குழப்பத்தையும் பார்வையாளர்கள் உணர வேண்டும் என்பதே என் நோக்கம். ராஜேஷ் குமார் சார் கருவிலிருந்து தொடங்கியதாக இருந்தாலும், இந்த கிரைம் உலகின் சம்பவங்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவையாக இருந்தன. அதை பார்வையாளர்களும் உணர்வார்கள்”
முன்னணி நடிகர் பாலஹாசன்..,
“வெற்றி கதாப்பாத்திரம் எப்போதும் பதில்களைத் தேடி அலையும் ஒரு மனிதன். ஆனால் அவன் கண்டுபிடிக்கும் உண்மைகள் அவனையே பயமுறுத்துகின்றன. அந்த பயத்தை வெளிப்படுத்தாமல் உள்ளே வைத்துக்கொண்டு நடிப்பது சவாலானது. ‘ரேகை’ எனக்கு மனித உணர்வுகளின் பலவீனத்தை சுமந்து பார்க்கும், அவற்றை ஆராய்ந்து பார்க்கும் வாய்ப்பை வழங்கியது.”
ZEE5 தமிழ் மற்றும் மலையாளம் – வணிகத் தலைவர் & SVP South Marketing – லாய்டு C சேவியர் கூறியதாவது..,
“‘ரேகை’ ஒரு திரில்லர் மட்டுமல்ல, நம் பூர்வீகக் கதைகள் ஏன் முக்கியம் என்பதற்கான நினைவூட்டல். இது மர்மத்தின் பின்னால் இருக்கும் மௌனங்களை வெளியில் கொண்டுவருகிறது. மனிதர்களைக் காக்க வேண்டிய அமைப்புகள், சில சமயம் அவர்களை பகடையாக பயன்படுத்தும் உண்மையைத் தட்டி எழுப்புகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை எவ்வாறு பெரிய சக்திகளிடம் சிக்கிக்கொள்ளுகிறது என்பதை இந்தத் சீரிஸ், மிக நிஜமாக காட்டுகிறது. உண்மை, நேர்மை, எமோசன் மூன்றும் கலந்த கதைகளைத் தருவதே எங்களின் முக்கிய நோக்கம். ‘ரேகை’ சீரிஸ் அதைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது.”
ஒருமுறை நீங்கள் ‘ரேகை’யின் சதுரங்கத்தில் சிக்கிக்கொண்டால், அதில் குற்றம் உங்களை பயமுறுத்தாது — குற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை தான் மிகப்பெரிய பயத்தைத் தரும்.
‘ரேகை’ ZEE5-இல் நவம்பர் 28 முதல்!
நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்
சென்னை, நவம்பர் 14, 2025 — சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சி, நவீன டெர்மடாலஜி மற்றும் காஸ்மெடாலஜி நிபுணத்துவத்தால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை ஸ்கின் கேர் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் டெர்மிபியூரின் பார்வையை வெளிப்படுத்தியது. அறிவியல் புதுமைகள், தனிப்பயன் சிகிச்சைகள் மற்றும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட ஸ்கின் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு, இந்த கிளினிக் அழகு, நம்பிக்கை மற்றும் மருத்துவத் தரத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் நோக்கம் கொண்டுள்ளது.
நடிகை பிரியா ஆனந்த் கூறியதாவது:
“டாக்டர் சௌம்யா எனக்கு மிக நெருங்கிய தோழி. நான் முதல் முறையாக அவருடைய ஸ்கின் கிளினிக்கிற்கு வந்துள்ளேன். இது மிக அழகாகவும், சிறப்பாகவும் உள்ளது. ஸ்கின் கேர் தொடர்பான அனைத்துத் தொழில்நுட்ப வசதிகளும் இங்கு உள்ளன. எங்கள்போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று.
இங்கு அமெரிக்காவில் மட்டுமே பொதுவாக காணப்படும் பொலிலேஸ் லேசர் மெஷின் இருப்பதைப் பார்த்ததில் என்னால் மிகவும் மகிழ்ச்சி அடைய முடிந்தது. அதோடு, பல முன்னேறிய வசதிகளும் உள்ளன. பல கிளினிக்குகளுடன் ஒப்பிடும்போது, இங்கு இந்த சேவைகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இது அழகு துறைக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
நான் பல டெர்மடாலஜிஸ்ட்களை சந்தித்துள்ளேன்; பெரும்பாலோர் இத்தகைய தரமான மெஷின்களை வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு, நிபுணர்களால் கை ஓட்டமாக தயாரிக்கப்பட்ட லேசர் மெஷின்களைக் கொண்டு வந்துள்ளனர்.
என் தோழியின் கிளினிக்கை அனைவரும் பயன்படுத்தி பயன் பெற வேண்டுகிறேன். இது புதிய தலைமுறைக்கு ஒரு உண்மையான வரப்பிரசாதமாக இருக்கும். நன்றி.”
டாக்டர் சௌம்யா கூறியதாவது:
“இன்றைய தலைமுறைக்கு ஸ்கின் கேர் பற்றிய விழிப்புணர்வு அதிகம் உள்ளது; அதே நேரத்தில், பல்வேறு ஸ்கின் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே இந்த ஸ்கின் கிளினிக்கை தொடங்கியுள்ளோம்.
இங்கு பர்மனென்ட் ஹேர் ரிடக்ஷன், பிக்மென்டேஷன் நீக்கம் உள்ளிட்ட பல சிறந்த சிகிச்சைகள் மற்றும் வசதிகளை வழங்குகிறோம்.
பல ஸ்கின் கிளினிக்குகளில் லேசர் மெஷின்கள் இல்லாத சூழலில், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் இருந்து நவீன தொழில்நுட்பம் கொண்ட லேசர் மெஷின்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
எல்லோருக்கும் ஏற்ற விலையில் உயர்தர ஸ்கின் சிகிச்சைகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள். இந்த கிளினிக்கைத் திறந்து வைத்ததற்கு என் தோழி பிரியா ஆனந்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.”
டெர்மிபியூர் கிளினிக் பற்றி
டெர்மிபியூர் கிளினிக், பிரைம்லேஸ் நிறுவனத்தின் மேம்பட்ட எஸ்தெடிக் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பொலிலேஸ் லாங்-பல்ஸ்ட் Nd:YAG லேசர், பிக்மென்டேஷனுக்கான பயாக்சிஸ் ஜெர்மன் லேசர் மற்றும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட எஸ்திமேக்ஸ் ஹைட்ரோஜெல்லி மாஸ்க் ஆகியவை அடங்கும்.
இந்த முன்னோடியான தொழில்நுட்பங்கள் பிக்மென்டேஷன் திருத்தம், பர்மனென்ட் ஹேர் ரிடக்ஷன், ஸ்கின் ரீஜூவனேஷன், கல்லாஜன் ஸ்டிமுலேஷன் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய மீட்பு ஆகியவற்றுக்கு உலக தரத்திலான தீர்வுகளை வழங்குகின்றன — இது நவீன டெர்மடாலஜி மற்றும் எஸ்தெடிக் மருத்துவத்தில் புதிய தரத்தை அமைக்கிறது.
தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'
இந்த படத்தில்
அரசியல் பேசல..
ஆன்மீகம் பேசல ...
ஜாதி மதம் பேசல ...
வன்முறை பேசல...
மது போதை பீடி சிகரெட்
கலாச்சார சீர் கேட்ட பேசல...
சண்டை சச்சரவை பேசல...
டிஜிட்டல் பேசல...
கைப்பேசி காட்டல...
போலீஸ் அடிதடி பேசல..
துப்பாக்கி கத்தி இதுபோன்று ஆயுதம் பேசல...
ரத்தம் தெறிக்கல...
கொலை கொள்ளை கற்பழிப்பு பேசல....
ஆனால்...
வாழ்வியலை நயம்பட பேசி தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான
திரைக்கதையில் காட்டும் திரைப்படம்தான் * "ராட்ட ".
இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் சக்திவேல் நாகப்பன் கூறும் பொழுது
நான் பேசல...
எங்களின் படம் பேசும்... என்றும்
மேல் கண்ட எந்தவித தவறான பழக்கவழக்கங்களை காட்டாத
இத் திரைப்படத்தை மக்கள் ஆதரவு தர வேண்டும். திரை ரசிகர்களும் மக்களும் ரசித்து கைதட்டி ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது. ரத்தம் சிந்த வைத்து காட்சியை எடுப்பதை விட , சிந்திக்கும் திறனை வளர்க்கும் நோக்கத்தில் திரைக்கதையை அமைத்து படத்தை ஒரு சிலையை போல் செதுக்கி உள்ளேன்.
எந்தத் தவறையும் காட்டாத திரைப்படங்களுக்கு பெருமளவில் மக்களும், மீடியாக்களும் குரல் கொடுத்து ஆதரிக்க முன்வர வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்...
இத்திரைப்படத்தை எப் எம் எஸ் மீடியாஸ் நிறுவனம் தயாரித்து விரைவில் வெளிவர இருக்கிறது...
இதில் நாகசக்தி , ஹெலன் ,சித்தா தர்ஷன், சாப்ளின் பாலு, கல்பனா, வசந்தி, சுப்ரமணியம் , கிருஷ்ணன் ,சந்திரன், முத்துராஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்... இத்திரைப்படத்திற்கு லோகேஷ் எடிட்டிங் செய்ய வெற்றியின் ஒளிப்பதிவில் மணிகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார்... இந்த திரைப்படத்தின் பாடல்களை முன்னனி பாடகர்களான ராஜகணபதி, செண்பகராஜ், அபர்ணா நாராயணன், சபிக் போன்றோர் பாடி இருக்கிறார்கள்... பாடல்களை சரவண பிரியன் மற்றும் தமிழன் இலையா இருவரும் எழுதியிருக்கிறார்கள்.
கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார்... சக்திவேல் நாகப்பன் (ஏ) சிவசக்தி பிரபு
தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு நான்காவது முறையாக இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்ஷன் திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்”. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா , ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.நேற்று முழு பாடலும் மும்பை ஜூஹுவிலுள்ள PVR மாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது.
இசையமைப்பாளர் எஸ். தமன், நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு பிரத்தியேகமான அதிரடி மாஸ் பி.ஜி.எம் கள் வழங்குவதில் புகழ்பெற்றவர், இப்போது மீண்டும் வலிமையான பக்தி மணக்கும் அதிரடிப் பாடலைத் தந்துள்ளார். ஆரண்ய அகோரா அவதாரத்தில் பாலகிருஷ்ணா, பெரிய கோவில் அரங்கில் அகோரர்களின் ஓம் உச்சரிப்புகளின் நடுவே தெய்வீகமான சிவ தாண்டவத்தை ஆடும் காட்சிகள் – தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் இணைந்து ஒரு ஆழ்ந்த ஆன்மிக அனுபவத்தை உருவாக்குகின்றன.
கல்யாண் சக்ரவர்த்தி சிவ பெருமானின் பிரபஞ்ச ஆற்றலை வார்த்தைகளால் உயிர்ப்பிக்க, பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் மற்றும் கைலாஷ் கேர் ஆகியோரின் அற்புதமான குரலில் பாடலை பாடியுள்ளார். பாடல் முழுவதும் சிலிர்க்க வைக்கும் தருணங்களால் நிறைந்துள்ளது, இந்த ஆண்டின் மிக வலுவான பக்திப்பாடலாக இப்பாடல் இருக்கும்.
படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, ஆதி பினிசெட்டி வலிமையான எதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார்.
ஒளிப்பதிவு பணிகளை – C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே செய்துள்ளனர். எடிட்டிங் பணிகளை தம்மிராஜு மற்றும் கலை இயக்கத்தை A. S. பிரகாஷ் செய்துள்ளனர்.
பாலகிருஷ்ணாவின் அதிரடி தோற்றம், போயபட்டி ஸ்ரீனுவின் மாஸ் பிரசன்டேஷன் தமனின் அட்டாசமான இசை என பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் “அகண்டா 2: தாண்டவம்”, ரசிகர்கள் கொண்டாடும் ஆன்மிக அதிரடி மாஸ் அனுபவமாக இருக்கும்.
இந்த படம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!
ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'.
இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கை, ஊடக மற்றும் பண்பலை நண்பர்களை சந்தித்து, படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பேசியதாவது..,
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இறைவனை வேண்டிக்கொண்டிருந்தேன், இந்த விழா எப்படி நடக்கும் என நினைத்தேன், எல்லாம் ஒன்றாக இணைந்து இன்று விழா நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்கு ஒப்புதல் தந்து உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் பூ வித்து வளர்ந்தவன், நான் அர்ஜுன் சாரின் ஜெண்டில்மேன் படம் பார்த்துள்ளேன். அவரின் ரசிகன் இன்று அவரை வைத்துப் படமெடுத்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்குத் தேதி தந்து படத்தில் நடித்த ஐஸ்வர்யா மேடம், அபிராமி மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. அண்ணன் லோகு எனக்கு நிறைய உதவிகள் செய்தார். படத்தை வெளியிட உதவிய தேவராஜ் அண்ணாவுக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு பேசியதாவது..,
ஒரு படத்தின் டிரெய்லர் எவ்வளவு முக்கியம் என எல்லோருக்கும் தெரியும். படம் மிக நன்றாக வந்துள்ளது. அர்ஜூன் , ஐஸ்வர்யா மேடம் நிறைய சப்போர்ட் செய்தார்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
நடிகர் லோகு பேசியதாவது..,
ஒரு பெரிய படத்தில், இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளம் உள்ள படத்தில், எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் தினேஷுக்கு என் நன்றிகள். தயாரிப்பாளர் அருள்குமார் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்துள்ளேன், அவர் குழந்தை மனதுக்காரர், அவர் மனதுக்கு இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் பேசியதாவது..,
தினேஷ் அண்ணனை பல வருடங்களாகத் தெரியும். நான் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்தேன். நிறையப் படத்தில் வேலை பார்த்தாலும் கிரடிட் கிடைக்காது. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு தினேஷ் அண்ணனுக்கு நன்றி. தயாரிப்பாளர் அருள்குமார் சாருக்கு நன்றி. நான் நன்றாக வேலை பார்த்துள்ளேன் என நம்புகிறேன். அர்ஜூன் சார் படம் பார்த்து வளர்ந்தவன் நான் அவர் படத்திற்கு வேலை பார்த்தது மகிழ்ச்சி. படத்தில் நாலு பாடல்கள், எல்லாம் நன்றாக வந்துள்ளது. நேற்று அர்ஜூன் சாருக்காக ஒரு பாடல் செய்தோம், கெனிஷா பாடித்தந்தார். பாடல் அனைவருக்கும் பிடிக்கும், படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.
தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசியதாவது..,
இயக்குநர் தினேஷ் மிகக் கடின உழைப்பாளி. அவருக்கு இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் பூ வியாபாரி என்றார்கள். அவர் பெரிய வெற்றி பெற்று கோயம்பேட்டில் கடை போட வாழ்த்துக்கள். அர்ஜூன் சார் படம் பார்த்ததாக சொன்னார்கள். நான் சின்ன வயதில் சங்கர் குரு பார்த்தேன் இன்றும் அப்படியே இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படம் ஒத்துக்கொள்வது கடினம். இருவரும் சேர்ந்துள்ள இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பிராங்ஸ்டர் ராகுல் பேசியதாவது..,
தினேஷ் அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டார் என எனக்குத் தெரியும். இந்தப்படத்தில் ஒரு காமெடி கேரக்டர் செய்துள்ளேன், வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அர்ஜூன் சாருடன் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. நான் ஒரு படம் இயக்கி வருகிறேன் அதற்கும் ஆதரவு தாருங்கள், இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி
நடிகை அபிராமி பேசியதாவது..,
இயக்குநர் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஐஸ்வர்யா எப்போதும் மிக இனிமையானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. அர்ஜூன் சாரை எப்போது பார்த்தாலும் ஸ்டைலாக இருக்கிறார். அவர் படத்தில் இருப்பது மகிழ்ச்சி. நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன். குழந்தைகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வை இப்படம் தரும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நடிகர் தங்கதுரை பேசியதாவது..,
இயக்குநர் தினேஷ் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் எனக்கே தெரியாத பல லோகேஷன்களை சென்னையில் காட்டினார். எனக்கு நல்ல ரோல் தந்துள்ளார். அர்ஜூன் சாரின் தீவிர ரசிகன். சின்ன வயதில் அவரை நானும், என் நண்பர்களும் போலீஸ் எனத்தான் நினைத்தோம். அவர் படம் பார்த்தால் நாட்டுப்பற்று வரும். அவருடன் நான் நடித்தது எனக்கு பெருமை. ஐஸ்வர்யா ஒரு வெர்சடைல் ஆக்டர் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை பிரியதர்ஷிணி பேசியதாவது..,
தீயவர்கள் குலை நடுங்க இந்தப்படத்திற்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன், தயாரிப்பாளர் பேசியது மிக உணர்வுப்பூர்வமாக இருந்தது. நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன் மிக நல்ல ரோல். படத்தில் நடித்தது மிக நல்ல அனுபவமாக இருந்தது. அர்ஜூன் சார் எல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஐஸ்வர்யா மேடம் நேச்சுரல் ஆக்டர் அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. சமூகத்திற்கு முக்கியமான கருத்தைச் சொல்லும் படம். அனைவரும் இப்படம் பிடிக்கும் நன்றி.
பிரவீன் ராஜா பேசியதாவது..,
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்திருந்தேன். அதைப்பார்த்த என் நண்பர் மூலம் இப்பட வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் ஓகே சொன்ன பிறகு தான் அர்ஜூன் சார் ஐஸ்வர்யா மேடமுடன் நடிக்கப் போகிறேன் எனத் தெரிந்தது. உண்மையில் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் உடன் நடித்த போது இருவரும் அவ்வளவு ஆதரவாக இருந்தார்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது. 4 மொழிகளில் படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள்.
எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது..,
தமிழில் வரவர எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது, தமிழ் தலைப்பு வைத்துள்ள இந்த குழுவிற்கு நன்றி. தயாரிப்பாளரைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரி தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் வர வேண்டும். அர்ஜூன் சாரை திரையில் பார்க்கப் பொறாமையாக உள்ளது. உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மிக நல்ல நடிகை. இசையமைப்பாளர் மிக அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார். இந்தப்படம் வெற்றி பெற எல்லா அம்சங்களும் படத்தில் உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது..,
அறிமுக இயக்குநர் தினேஷுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. அர்ஜூன் சாரின் மிகப்பெரிய ரசிகன், தமிழ் நாட்டிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருக்கலாம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார் அர்ஜூன் சார் தான். அட்டகத்தி படத்திலிருந்து ஐஸ்வர்யா மேடம் வளர்ச்சியைப் பார்த்து வருகிறேன். இன்று சோலோ ஹீரோயினாக வளர்ந்துள்ளதற்கு அவரின் நம்பிக்கையும் உழைப்பும் தான் காரணம். அவர் ஒரு படத்தை ஓகே செய்தால் அந்தப்படம் வெற்றி எனலாம். சரியானதை மட்டுமே செய்யும் இருவர் இப்படத்தில் இருக்கிறார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரிய ஹீரோக்கள் படத்தில் வெற்றி தோல்வியில் பங்கு கொள்ள வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளார்கள் அதை நான் வரவேற்கிறேன். தமிழ் திரையுலகில் நிறையப் பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டியுள்ளது. புது தயாரிப்பாளர்கள் பலர் திணறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதற்குத் தீர்வு காண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
வேலூர் திரையரங்கு உரிமையாளர் வி எம் தேவராஜ் பேசியதாவது..,
நான் படம் பார்த்துவிட்டேன் அர்ஜூன் சார் மிக அற்புதமாக நடித்துள்ளார். படம் அருமையாக வந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தர வேண்டும். சக்ஸஸ் மீட்டில் இன்னும் அதிகம் பேசுகிறேன். தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும் நன்றி.
தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ் மோகன் பேசியதாவது..,
சினிமாவில் கனவுகளோடு அலைபவர் தான் தம்பி தினேஷ். அவர் சொன்ன கதையை நம்பி அவருக்கு வாய்ப்பு தந்த அர்ஜூன் சாருக்கு நன்றி. நடிகைக்கென போடப்பட்ட வட்டத்திற்குள் சிக்காத ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் மிக அற்புதமாக நடித்துள்ளார். வீடும் நாடும் நன்றாக இருக்க வேண்டுமானால் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் என ஒரு கருத்தைச் செய் நேர்த்தியுடன் செய்துள்ள தினேஷுக்கு வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
விசிக கட்சி துணை பொதுச் செயலாளர் திரு வன்னியரசு பேசியதாவது..,
தினேஷ் இலெட்சுமணனுக்கு என் வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். கலைஞர் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என அறிவித்தார். இப்போது அவரது மகன் ஆட்சியில் இருக்கிறார். இன்று அருமையான தமிழில் தலைப்பு வைத்துள்ள, நல்ல கருத்தைச் சொல்லும் இம்மாதிரி படங்களுக்கு வரிவிலக்கு தர வேண்டுமென முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் எப்படி எளிதாக தப்பிக்கிறார்கள், அரசும் அதிகார வர்க்கம் எப்படி துணை போகிறது என்பதை இப்படம் பேசுகிறது. இதில் உண்மையான நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறப்பான ஆக்சன் நாயகியாக நடித்துள்ளார். ஆக்சன் கிங் அர்ஜூனை பக்கத்தில் வைத்து அவர் ஆக்சனில் நடித்திருப்பது சிறப்பு. ஆக்சன் கிங் அர்ஜூன், இப்படத்திற்கு முழு ஆதரவு தரும் அவரது பண்புக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்து இப்படக்குழு மிகப்பெரிய படங்கள் செய்து ஜெயிக்க வாழ்த்துக்கள்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது..,
மீடியா நண்பர்களுக்கு என் முதல் நன்றி. எங்களை வாழ்த்த வந்த அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி. இப்படம் ஒரு உண்மையான சம்பவம், இயக்குநர் சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். அவர்களுக்குப் பெரிய விழிப்புணர்வை அது தரும். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி. அர்ஜூன் சார் ரியல் லைஃபில் உண்மையாகவே ஜெண்டில்மேன். அவர் மேஜிக்கை நேரில் பார்த்தது நல்ல அனுபவம். நான் நன்றாக ஃபைட் செய்ய அவர் தான் காரணம். அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோ. உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும். இப்படம் திரைக்கு வரும் போது, அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் பேசியதாவது..,
என் 15 வருட ஏக்கம் தான் இந்தப்படம். என்னவாக வந்தோம், என்னவாக இருக்கிறோம் என்னவாக போகிறோம் என்பது முக்கியம், என என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா அம்மாவிற்கு நன்றி. என் அப்பா தான் சினிமா ஆசையை என்னுள் தூண்டியவர். தயாரிப்பாளர் அருள்குமார் அவருக்கு ஊரில் அவ்வளவு மரியாதை, அவர் ரெண்டு படம் சரியாகப் போகவில்லை. ஆனால் அவர் உனக்கு ஒரு படம் தருகிறேன் என்றார். எனக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையை விட அவர் என் மேல் வைத்த நம்பிக்கை அதிகம். என்னிடம் எந்த கேள்வியும் கேட்க மாட்டார். அவர் நம்பிக்கைக்கு நன்றி. டெக்னீஷியன்ஸ் எல்லோரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள். இப்படம் பார்க்கும் போது இசையமைப்பாளரின் திறமை உங்களுக்குப் புரியும். எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் முழு உழைப்பைத் தந்தார். எழுத்தாளர் நவனீத்திற்கு நன்றி. அர்ஜூன் சார் ஷீட்டிங்கில் நிறைய கரக்சன் சொல்வார், அப்போது நிறைய விவாதிப்போம். அதெல்லாம் படம் முடிந்து பார்க்கும் போது தான் அவரின் எக்ஸ்பீரியன்ஸ் எனக்குப் புரிந்தது. அவ்வளவு ஆதரவாக இருந்தார். ஐஸ்வர்யா மேடம் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். அர்ஜூன் சாருக்கு சமமான பாத்திரம். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் நிறைய நடிகர்கள் எல்லோரும் கதைக்கு முக்கியத்துவமாக இருப்பார்கள். இந்தப்படத்தில் அனிகா குழந்தை நட்சத்திரம் முக்கியமான கேரக்டர் அதை அவ்வளவு தத்ரூபமாக சூப்பராக நடித்துள்ளார். லோகு சார் இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார். இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் அர்ஜூன் பேசியதாவது..,
எனக்கு இது மிக முக்கியமான படம், எனக்கு எல்லா படமுமே முதல் படம் போலத்தான். தயாரிப்பாளர் அருள்குமார் பூ வித்தாகச் சொன்னார்கள், ஆனால் அவர் சினிமா மீது வைத்திருக்கும் அன்பு தான் அவரை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளது. எல்லோரையும் மதிக்கும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதிற்காகவே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நான் நிறைய புதிய இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன், இயக்குநர் தினேஷ், என்னுடன் நிறைய விவாதித்தாக சொன்னார் ஆனால் எல்லாமே படத்திற்காகத் தான், படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோ அவர் தான், இவர் தான் என்றார்கள், ஆமாம் இப்படத்தில் மூன்று ஹீரோ, பிரவீன் ஒரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொரு ஹீரோ. ராஜேஷ் அவரது தந்தையின் பெயர், அவர் சின்ன வயதில் தவறிவிட்டார். அவரும் நடிகர் தான், அவருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன் அவர் எனக்கு சிறந்த நண்பர். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை, அவர் இன்னும் வளர வாழ்த்துக்கள். தங்கதுரையுடன் ஷீட்டிங்கில் அதிகம் சுற்றிக்கொண்டிருப்பேன் நல்ல மனிதர். எல்லோருடைய ஆசீர்வாதமும் அன்பும் இப்படத்திற்குக் கிடைக்க வேண்டும். நன்றி.
சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
'ஆக்சன் கிங்' அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு. Npks, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில், நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திர
ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்
Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை தென்னிந்தியாவின் சிறந்த மற்றும் வரலாற்று புகழ் பெற்ற இசை நிறுவனமான ‘லஹரி மியூசிக்’ அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது.
Behindwoods Founder & CEO மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் மூன்வாக், இசை, நடனம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கின் கொண்டாட்டமாக உருவாகி வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இதயத்தை வருடும் இசையுடன் வெளியாகும் இந்தப் படம், ரசிகர்கள் மற்றும் திரைத் துறையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த இணைப்பைப் பற்றி பேசும் போது, லஹரி மியூசிக் நிறுவனர் திரு. மனோஹரன் நாயுடு கூறுகையில்: “இது எங்களின் 50வது ஆண்டு; 'மூன்வாக்' படத்தின் இசை உரிமையை பெற்று இப்படத்துடன் இணைவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. மூன்வாக் படத்தின் பாடல்கள் உண்மையாகவே அந்தப்படத்தின் இதயத் துடிப்பு என்று கூறினால் அது மிகையாகாது. ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கிய இந்த அசாதாரணமான பாடல்கள் உலகின் எல்லா மூலையிலும் தகுந்த தரத்துடன் சேரும் என்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
நான் இப்படத்தின் 5 பாடல்களையும் கேட்டுள்ளேன், அவை அனைத்தும் தனித்தன்மை கொண்டவை மற்றும் வித்தியாசமானவை. மனோஜ் NS அவர்களின் நேர்மையான முயற்சி மற்றும் கடின உழைப்பைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இது ஒரு சிறந்த Blockbuster Album ஆகும் என நான் உறுதியாக நம்புகிறேன்.”
Behindwoods Founder & CEO மற்றும் இப்படத்தின் இயக்குனர் திரு. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் கூறுகையில்: “தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் கொண்டாடப்படும் இசை நிறுவனங்களில் ஒன்றான லஹரி மியூசிக், ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் முதல் ஆல்பமான ரோஜா-வை வெளியிட்ட பெருமை பெற்றது. அந்த படம் இந்திய இசை உலகில் ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்தது. பிரபுதேவா அவர்கள் நடித்த படங்களிலும் லஹரி மியூசிக் பல பிரபலமான ஆல்பங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது.
தென்னிந்திய படங்களுக்கான லஹரியின் சக்திவாய்ந்த Distribution Network மற்றும் இசை விளம்பரத்தில் உள்ள ஆழமான அனுபவம் 'மூன்வாக்' படத்திற்கு மிகப்பெரிய வலிமையாக இருக்கும். Behindwoods மற்றும் லஹரி மியூசிக் இணைப்பு, இந்தப் படத்தின் இசையை பல மொழிகளிலும் பல்வேறு தளங்களிலும் அதிகப்படுத்தும். லஹரி மியூசிக் முன்பு ஜென்டில்மேன் மற்றும் காதலன் (தெலுங்கு பதிப்பு ப்ரேமிகுடு) போன்ற மைல்கல் ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளது. இவ்விருவரும் இணையும் இது மூன்றாவது மிகப்பெரிய முயற்சி”.
மூன்வாக் படத்தில் பிரபுதேவா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அஷோகன், சதிஷ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொல்லு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்காக உருவாகும் மூன்வாக், உலக தர நடன அமைப்புகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை அழகாக இணைத்து, இந்திய அளவில் இசை, நடனம் மற்றும் காமெடியின் கொண்டாட்டமாக உருவாகி வருகிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 'மூன்வாக்' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு, 2026ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.
Storm – The Moonwalk’s Anthem, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்திருக்கும் முதல் பாடல் வீடியோ தமிழ் ராப் இசைகலைஞர் அறிவு பாடிய ராப்புடன் வரும் நவம்பர் 19, புதன்கிழமை அன்று, லஹரி மியூசிக் மற்றும் Behindwoods டிவி யூடியூப் சேனல்களில் மட்டும் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பழைய நினைவுகளைத் தூண்டும் உற்சாகத்தை வழங்கும்.
மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது!
LUMIERES STUDIOS நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராபின்ஹீட்”.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் H வினோத் இப்பட டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவை பாராட்டியுள்ளார்.
படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் H.வினோத் , படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரம்மாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
1980 களில், கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்சனைகளும் தான் இப்படத்தின் மையம்.
நாம் மறந்து போன லாட்டரி சீட்டு காலத்தை, கிராமப்புற பின்னணியில் மீட்டெடுத்து , கலகலப்பான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன்.
இன்று வெளியாகியிருக்கும் டிரெய்லர், 1980 களின் காலகட்டத்தை திரையில் பார்க்கும் குதூகலத்தை தருவதோடு, வயிறு வலிக்க சிரிக்க வைக்கும், ஒரு கலக்கலான எண்டர்டெயினராக இப்படம் இருக்கும் என்பதை, உறுதி செய்கிறது.
இப்படத்தில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் முதன்முறையாக நாயகனாக களமிறங்கியுள்ளார். எதிர் பாத்திரத்தில் மறைந்த RNR மனோகர் நடித்துள்ளார். இவர்களுடன் KPY சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அருப்புகோட்டை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
விரைவில் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!
கன்னடத் திரையுலகில் இருந்து புதிய இளைஞர்கள் படைப்பாளிகளாக வந்து இப்போது கவனிக்க வைக்கிறார்கள்.அப்படி அவர்களால் உருவாக்கப்பட்ட 'கேஜிஎஃப்', 'காந்தாரா ' படங்கள் பெரிய வெற்றி பெற்றுக் கவனம் ஈர்த்தன. அந்தப் படங்கள் பெற்ற வரவேற்பைப் போலவே கன்னடக் கலைஞர்கள் கூட்டணியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் 'கரிகாடன்' படத்தின் டீசரும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.படத்தின் டீசர் பார்வையாளர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கவனிக்க வைக்கிறது.
மாறுபட்ட வகைமையில் ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக ‘கரிகாடன் ‘ உருவாகியுள்ளது.
இசையையும் சிலிர்ப்பையும் இணைக்கும் ‘கரிகாடன்’ படத்தின் சாகச மற்றும் அதிரடிப் பயணத்தைத் திரையரங்கில் விரைவில் காணலாம்.
அதிரடி ஆக்சன் காட்சிகள். அசத்த வைக்கும் இசை என்று திரையில் ஒரு மாய அனுபவத்தை உணர வைக்கும் ஒரு படைப்பாக இந்தப் படம் உருவாகி உள்ளது.
கார்ப்பரேட் உலகத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள கலைஞரான கடா நட்ராஜ், தனது கனவைப் பெரிய திரையில் நனவாக்க வந்துள்ளார்.
இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ள காடா நடராஜ் கவனமாகத் திட்டமிடப்பட்டு இதன் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்.
ரித்தி என்டர்டெயின்மென்ட் ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கும் அவரது மனைவி தீப்தி தாமோதர், சகோதரர் ரவிக்குமார் எஸ்.ஆர். மற்றும் நண்பர் திவாகர் பி.எம். ஆகியோர் அவரது திரை உலகக் கனவை நிறைவேற்றத் துணை நின்றுள்ளனர்.
கரிகாடனின் படக்குழுவில் ஏராளமான திறமைசாலிகள் இணைந்துள்ளனர்.
சிறந்த இயக்குநரான கில்லி வெங்கடேஷ், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் தனது நிபுணத்துவத்துடன் ‘கரிகாட’னை உருவாக்கியுள்ளார்.
ஜீவன் கவுடாவின் ஒளிப்பதிவு சிக்கமகளூரு, கலாசா, குத்ரேமுக், மண்டியா மற்றும் சக்கராயபட்னாவின் அழகைப் படம்பிடித்திருக்கிறது. தீபக் சி.எஸ்.ஸின் எடிட்டிங் படத்தை சாகசம் நிறைந்த சங்கிலித் தொடராக இணைத்துள்ளது.
‘கரிகாடன்’ படத்தின் டீசர் இப்போது வெளியாகியுள்ளது. படத்தை ரசிக்கத் தயாராக இருக்குமாறு படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”
Covai Film Factory சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ” ( Yellow).
பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் பேசியதாவது..,
இது என்னுடைய முதல் படம். இந்தப் படம் இங்கு வரக்காரணம் தயாரிப்பாளர்பிரசாந்த் தான். தயாரிப்பாளராக முழு ஆதரவாக இருந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை 8 ஆண்டுகளாகத் தெரியும் அவர் முதன் முதலில் நடித்த குறும்படத்திற்கு நான் தான் கேமராமேன், இப்போது அவரது முதல் படத்திற்கு நான் கேமராமேன் என்பது மகிழ்ச்சி. நவம்பர் 21 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள்.
எடிட்டர் ஶ்ரீ வாட்சன் பேசியதாவது..,
இப்படம் ஆரம்பித்து 2 வருடம் ஆகிவிட்டது. படக்குழு அனைவரும் ஒன்றாக இருந்து இப்படத்தைக் கொண்டு வந்துள்ளோம். ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸிற்காக, நானும் ஹரி பூர்ணிமாவை பார்க்க போனோம், அதிலிருந்து இப்போது படம் வரை வந்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
கலை இயக்குநர் கார்த்திக் கிருஷ்ணன் பேசியதாவது..,
இந்தப்படம் ஆரம்பித்த போது கொஞ்சம் நெர்வஸாக இருந்தது. கதை கேட்கும் போது மிகவும் ஊக்கம் தருவதாக இருந்தது. பயணம் தான் படம் என்பதால் பல இடங்களைத் திரையில் சரியாகக் கொண்டு வர நிறைய உழைத்துள்ளோம். இப்படத்தில் உழைத்த அனைவரும் எல்லோரும் பெரிய அளவில் வந்து, பிஸியாக உழைக்க நான் சாபம் தருகிறேன். அனைவருக்கும் நன்றி.
உடை வடிவமைப்பாளர் மீரா பேசியதாவது..,
எனக்கு வாய்ப்புத் தந்த தயாரிப்பாளர், பூர்ணிமாவுக்கு நன்றி. சென்னைக்கு வந்து சாதித்த ஒரு இளம்பெண் பூர்ணிமா அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி.
இசையமைப்பாளர் கிளிஃபி கிரிஷ் பேசியதாவது..,
இது என் முதல் படம் எனக்கு வாய்ப்பு தந்த ஹரி பிரதருக்கு நன்றி. நான் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் பண்ணிக் கொண்டிருந்தேன் என்னைத் திரைத்துறைக்கு அழைத்து வந்ததற்கு நன்றி. பிரசாந்த் ப்ரோவுக்கு நன்றி. நான் இந்தப்படத்தில் நான்கு பாடல்கள் செய்துள்ளேன். பூர்ணிமாவுடன் நெருங்கிய நண்பராகிவிட்டேன். இந்தப்படம் கலர்ஃபுல் எண்டர்டெயினராக இருக்கும், அனைவருக்கும் நன்றி
இசையமைப்பாளர் ஆனந்த் காசிநாத் பேசியதாவது..,
இது என் முதல் மேடை, தயாரிப்பாளர் பிரசாந்த் அண்ணா அவரை இன்று தான் நேரில் பார்க்கிறேன். என்னை நம்பி வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஹரி அண்ணாவுடன் நாலைந்து வருடம் முன் ஆரம்பித்த நட்பு, இன்று வரை தொடர்கிறது. அவர் பெரும் உழைப்பில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். அபி ஆத்விக் விஷுவல் அற்புதமாக வந்துள்ளது. பாடல்கள் நன்றாக வந்துள்ளது. பாடலாசிரியர் மோகன்ராஜ் அண்ணாவிற்கும் சரண் குமாருக்கும் நன்றி. பூர்ணிமா அக்காவுடன் ஒரு வெப் சீரிஸ் வேலைபார்த்துள்ளேன், அது வளர்ந்து இன்று திரைக்கு வந்துள்ளது. வைபவ் நன்றாக நடித்துள்ளார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இது குழந்தைகள் ஃபேமிலி என எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
பாடகர் அந்தோணி தாசன் பேசியதாவது..,
இந்தப்படத்தில் எனக்கும் பாட வாய்ப்பு தந்த இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. யெல்லோ மஞ்சள் நிறம், மக்களை மகிழ்விக்கட்டும். திரையரங்கில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் சாய் பிரசன்னா பேசியதாவது..,
இந்தப்படம் ஆரம்பிக்கும்போது யாரையும் தெரியாது, ஆனால் இப்போது வா மச்சான் என பேசும் அளவு நெருக்கமாக ஆகிவிட்டோம். ஆரம்பத்தில் ஹரி அண்ணா கொரில்லா மேக்கிங்கில் கதை இல்லாமல் தோன்றுவதை எடுக்கலாம் என்றார், ஆனால் அதன்பிறகு உட்கார்ந்து பேசி எழுதி, நிறைய உழைத்து, ஜாலியாகவே இந்தப்படத்தை எடுத்துள்ளோம். பூர்ணிமா சிறப்பாக நடித்துள்ளார் படம் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
உத்ரா புரடக்சன்ஸ் உத்தாரா பேசியதாவது..,
நவம்பர் 21 ஆம் தேதி உத்ரா புரடக்சன்ஸ் சார்பில் தமிழகமெங்கும் யெல்லோ திரையரங்கில் வெளியாகிறது. இப்படி ஒரு தரமான படத்தை வெளியிட என்னிடம் கொண்டு வந்த அஹமத் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் எல்லோரையும் ஒரு டூர் கூட்டிப்போவது போல், எல்லோரையும் மகிழசிப்படுத்தும். இந்த காலத்தில் ஒரு படத்தை எடுத்து திரைக்குக் கொண்டு வருவது மிகப்பெரிய விசயம். இந்த குழுவில் அனைவரும் கடுமையாக உழைத்து, இப்படத்தை எடுத்துள்ளார்கள். மலையாளப்படம் போல் தமிழ்ப்படம் இல்லை என்பதைச் சொல்வதை மறந்து, இப்படத்தைப் பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் வைபவ் முருகேசன் பேசியதாவது..,
நான் பேட்டை படத்தில் பேக்ரவுண்ட் ஆர்டிஸ்டாக ஆரம்பித்து, வதந்தி முதல் பல படைப்புகளில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இப்போது நான் நாயகனாக நடித்து யெல்லோ படம் திரைக்கு வருகிறது. பிரசாந்த் பிரதர் பல தடைகளைத் தாண்டி, இப்படத்தை முடித்து திரைக்குக் கொண்டு வந்துள்ளார். ஹரி பிரதர், இப்படம் ஒரு டிராவல் படம் என்பதால் பல இன்னல்கள் இருந்தது, ஆனால் அதையெல்லாம் தாண்டி இப்படத்தை அருமையாக இயக்கியுள்ளார். பூர்ணிமா அவர் தான் இந்தப்படத்தின் மையமாக இருந்தார். அனைவரையும் ஒருங்கிணைத்தது அவர் தான். பாடல்கள் மிகச்சிறப்பாக வந்துள்ளது. ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கும். பிரபு சாலமன் எங்களை நம்பி, நாங்கள் கேட்டதால் ஒரு கதாப்பாத்திரம் நடித்துத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. இது என் முதல் படம் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் லோகி பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் ஹரி அண்ணாவுக்கு நன்றி. ஃபர்ஸ்ட் ப்ரேம் ஆசையாக நடிக்கத் தயாராகி டயலாக் கேட்டேன், நீயே பேசுடா என்றார். இப்போது வரை படத்தில் நான் இருக்கிறேனா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் படம் வேலை செய்தது மிக ஜாலியாக இருந்தது. படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் ஹரி மகாதேவன் பேசியதாவது..,
தயாரிப்பாளர் பிரசாந்த் அண்ணாவுக்கு நிறையக் கடமைப்பட்டுள்ளேன். பூர்ணிமா தான் அவரை அறிமுகப்படுத்தினார். கொரில்லா மேக்கிங் ஸ்டைலில் ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு பயணம் போவோம், என்ன கிடைக்கிறதோ அது தான் படம் என்றேன். இதைக்கேட்ட பிறகும் அவர் என்னை நிராகரிக்கவில்லை. என்னை முழுதாக நம்பினார். பின்னர் ஒரு திரைக்கதை முழுதாக எழுதி அவரிடம் காட்டினேன். நான் நினைத்ததை விடப் பெரிய அளவில் அவர் ஆதரவாக இருந்தார். அவர் கேமரா யூனிட் வைத்துள்ளார். அதை வித்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளார். நான் கொரோனா காலத்தில் பல திரைக்கதை எழுதி, பலரைத் தொடர்பு கொண்டேன், அதில் ஒப்புக்கொண்டு நடித்தவர் பூர்ணிமா மட்டும் தான். அவருடன் ஒரு படம் செய்யலாம் என டிஸ்கஸ் செய்தது தான் இந்தப்படம். இந்தப்படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் ஓய்வே இல்லாமல் இப்படத்தில் நடித்துத் தந்தார். வைபவ் பூர்ணிமா மூலமாக வந்தவர், சிறப்பாக நடித்துள்ளார். சாய் என்னுடைய நெருங்கிய நண்பர் இந்தப்படத்தில் அவர் நடித்ததைத் தாண்டி எல்லா டிபார்ட்மெண்டிலும் வேலை பார்த்துள்ளார் நன்றி. கிளிஃபி நானும் அவரும் டீக்கடையில் உட்கார்ந்து பலமுறை விவாதித்துள்ளோம். அவர் தந்த பாடல்களுக்கு நன்றி. ஆனந்த் என்னுடைய முகவரியான காத்தாடி பாடலை தந்தவன், அவனை நான் முழுதாக நம்புகிறேன். அபி இரவு பகல் பாராமல் கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல் கேமரா செய்து தந்துள்ளார். புரடக்சனிலும் நிறைய உதவியாக இருந்தார். காஸ்ட்யூம் செய்து தந்த மீராவிற்கு நன்றி. நல்ல பாடல்கள் தந்த மோகன்ராஜ், ராஜேஷ் இருவருக்கும் நன்றி. ஹரி உத்தாரா பல புரடக்சன் கம்பெனி ஏறி இறங்கிய பிறகு, எங்களை நம்பி, எங்கள் படத்தைப் பார்த்து வெளியிடுவதற்கு நன்றி. என்னுடன் திரைக்கதையிலிருந்து முழுதாக சப்போர்ட்டாக இருந்த ஹரிஷ்மாவிற்கு நன்றி. டெல்லிகணேஷ் சார் எங்களை நம்பி வந்து நடித்துத் தந்தார். அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகை பூர்ணிமா பேசியதாவது..,
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்த விழா நேற்று வரை கனவாக இருந்தது. எஙகள் படத்தின் இசை விழா என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. ஒரு படத்தின் வெற்றியாக நினைப்பது அடுத்தடுத்த வாய்ப்புகள், எக்ஸ்பீரியன்ஸ் பணம். ஆனால் இந்தப்படத்தில் எங்கள் எல்லோருக்கும் பல பாடங்கள் கிடைத்தது. நிறையக் கற்றுக்கொண்டோம். பலருக்குப் பெரிய படத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கும், நாங்கள் எங்களுக்கான வாய்ப்பை உருவாக்கி உழைத்துள்ளோம். இப்படத்தில் எல்லோருமே சின்ன ஸ்கிரீனுக்கு உழைத்து, இப்போது பெரிய திரைக்கு வந்துள்ளோம். எங்கள் டீமை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. தயாரிப்பாளர் பிரசாந்த்திற்கு எங்கள் வளர்ச்சியில் நிறையப் பங்கு உள்ளது. மீடியா படத்தைப் பார்த்து நல்ல கருத்துக்களை எழுதுங்கள். படம் கண்டிப்பாகப் பிடிக்கும். இது கொரில்லா மேக்கிங், பல தடைகள் இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம். பிரசாந்த் அண்ணா உறுதுணையாக இருந்தார். என் நண்பர்கள் குடும்பத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
இந்த உலகம் அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், அப்படியான ஆச்சரியங்கள் தான் இந்த படத்தின் மையம். மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நாயகனாக வைபவ் நடித்துள்ளார். பூர்ணிமா ரவி முதன்மை பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நமீதா கிருஷ்ணமூர்த்தி, சாய் பிரசன்னா, டெல்லி கணேசன், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் வரும் நவம்பர் 21 ஆம்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது . உத்ரா புரடக்சன்ஸ் தமிழகமெங்கும் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













