சற்று முன்

'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |    இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது 'ஆபிரகாம் ஓஸ்லர்'!   |    அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கும் அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படம்!   |    தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் Behindwoods   |    டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள் - நடிகர் கலையரசன்   |    பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் - நடிகர் ஜெகன்   |    பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !!   |    பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில் - எஸ்.எஸ்.கார்த்திகேயா   |    திகில் நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷியின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட 'திருட்டு பாடம்' டீஸர்   |    காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும் - நடிகை ஆண்ட்ரியா   |    பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் 'கங்கணம்'   |    நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது   |    திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற 'பைக் டாக்சி' பூஜை!   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள RKFI   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” அமேசான் பிரைமில் வெளியாகிறது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |   

சினிமா செய்திகள்

தேவா பாடிய காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடல் அபார வெற்றி!
Updated on : 19 October 2021

'டேக் டைவர்ஷன்'  என்கிற படத்தை இயக்குநர் சிவானி செந்தில்  இயக்கியுள்ளார்.

80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல் கதையாக இது உருவாகி உள்ளது.



 



இப்படத்திற்காக தேவா பாடிய   'மஸ்தானா மாஸ் மைனரு 'என்கிற கானா பாடல் இணைய உலகில்  லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.அந்தப் பாடலுக்குப் பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி நடனமாடியிருக்கிறார்.அதே போல 'யாரும் எனக்கில்லை ஏனடி ? ' என்கிற  காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது.



 



இப்படத்தில்'பேட்ட', 'சதுரங்கவேட்டை' படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். இப்படத்தில் அறிமுக நாயகனாக சிவகுமார் நடிக்க, நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளார்கள்.



 





ஜான் விஜய் தான்  வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய்,  பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும்  நடித்துள்ளனர்.



 



படத்திற்கு இசையமைத்துள்ளவர்  ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே  'நெடுநல்வாடை', 'என் பெயர் ஆனந்தன்' படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர்.



 



இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில்  பணியாற்றியுள்ளார்.  படத்தொகுப்பு - விது ஜீவா.



 



ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அனைவரையும் கவரும் முழுநீள எண்டர்டெய்னராக  இது உருவாகி உள்ளது.படத்தைப் பார்த்த நாயகன் ராம்சும் ஜான்விஜய்யும்  படத்தில் உள்ள கலகலப்பையும்  கமர்சியல் அம்சங்களையும் கண்டு வியந்து இயக்குநரைக் கட்டிப்பிடித்துப் பாராட்டியுள்ளனர்.



 



இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா