சற்று முன்

பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |   

சினிமா செய்திகள்

நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை
Updated on : 18 October 2021

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான இவர் முன்னணி நடிகர்கள் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், சியான் விக்ரம், பிரபாஸ், ஜூனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி  நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.



 



சென்ற வருடம் இவர் நடன இயக்குனராக பணியாற்றிய  `சுஃபியும் சுஜாதாயும்' மலையாள திரைப்படம் வெளியாகி படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பலரது பாராட்டை பெற்றது. நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



 



தற்போது 51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்' படத்திற்காக நடன இயக்குனர் லலிதா ஷோபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



 



நடன இயக்குனர் லலிதா ஷோபி கூறுகையில், “இந்த விருதை நம்மை விட்டு மறைந்த இயக்குனர் நரணிபுழா ஷாநவாஸ் அவர்களுக்கு சமர்பிக்கிறேன். அவருடன் பணியாற்றிய நாட்கள் மறக்கமுடியாதவை. நான் பாடலுக்கு நடனம் அமைத்து கொடுக்கையில்,  இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கண்டிப்பாக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு  கூறியிருந்தனர்.  அது இன்று நிறைவேறியுள்ளது. கடவுளுக்கு நன்றி.



 



மேலும் `சுஃபியும் சுஜாதாயும்' படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கேரள மாநில திரைப்பட விருது குழுவினருக்கும் மற்றும் கேரள மாநில அரசுக்கும் இத்தருணத்தில் எனது  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா