சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ்.கதாநாயகியாக நடிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் படம் பூஜையுடன் துவங்கியது
Updated on : 18 October 2021

ஜோக்கர், அருவி, காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த புதிய படத்தின் படபிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் ஆரம்பமாகியது. 



 



‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ என வித்தியாசமான கதையமைப்பில்  வெற்றிப்படங்களை டைரக்ட் செய்தவர்,நெல்சன் வெங்கடேசன். மீண்டும் ஒரு புதிய கதை வடியமைப்பில் இப்புதிய படத்தை டைரக்ட் செய்கிறார். 

இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்று வரும் இவருக்கு இப்படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக அமைதுள்ளது. 



 





 





 



மேலும்,  ‘ஜித்தன்’ரமேஷ், கிட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

ஏற்கனவே இயக்குனர் நெல்சன் வெங்கடேசனுடன் ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.



 



ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், எடிட்டர் சாபு ஜோசப், கலை இயக்குநர் சிவசங்கர் மீண்டும் இப்படத்தில் கை கோர்க்கிறார்கள். நிர்வாக தயாரிப்பு:அரவிந்த்ராஜ் பாஸ்கரன்.படபிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. 



 



தயாரிப்பு: S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா