சற்று முன்

ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |    23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!   |    டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!   |    நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |   

சினிமா செய்திகள்

ஜீவா-சிவா இணைந்து கலக்கவிருக்கும் கலகலப்பான ‘கோல்மால்’
Updated on : 12 October 2021

‘மிருகா' படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி வினோத் ஜெயின் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'கோல்மால்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குநர்கள் கே பாக்யராஜ், கே எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ள பொன்குமரன் இந்த தமிழ் திரைப்படத்தை இயக்குகிறார்.



 



“முழுநீள நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக கோல்மால் இருக்கும், இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும், ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும்,” என்று பொன்குமரன் தெரிவித்தார்.



 



“ஜீவாவும் சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும் பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும்.  பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் மற்றும் கே எஸ் ஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.



 





 



அதிக பொருட்செலவில் மொரிஷியஸில் 'கோல்மால்' முழு படமும் படமாக்கப்படும் என்று பொன்குமரன் மேலும் கூறினார். "இந்த படத்தை தயாரிப்பதற்கு வினோத் ஜெயின் மிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்துள்ளார்," என்று இயக்குநர் கூறினார்.



 



நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியிடப்படும், என்று அவர் தெரிவித்தார்.



 



அருள் தேவ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை எஸ் சரவணன் கையாளவுள்ளார். படத்தொகுப்பை டான் போஸ்கோவும், கலை இயக்கத்தை சிவாவும் மேற்கொள்ள, கவிஞர்கள் மதன் கார்க்கி மற்றும் விவேகா பாடல்களை இயற்றவுள்ளனர்.



 



எம் நரேஷ் ஜெயின் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார். எம் செந்தில் நிர்வாக தயாரிப்பு பணிகளை மேற்கொள்வார். டூனி வடிவமைப்பு பணிகளை செய்வார். படத்தின் மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிப்பார். 



 



தயாரிப்பு: ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: பொன்குமரன் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா