சற்று முன்
சினிமா செய்திகள்
அஜித்தின் விசுவாசம் படத்தை நினைவுபடுத்தும் அண்ணாத்த படத்தின் பாடல்!
Updated on : 09 October 2021
சன்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் சிவா இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும் படம் 'அண்ணாத்த'.
இந்த படத்திற்கு இசை இமான் ஒளிப்பதிவு வெற்றி,, கலை இயக்கம் மிலன், எடிட்டிங் ரூபன்
‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
ஏற்கனவேஅக்டோபர் 4 ஆம் தேதி அண்ணாத்த அண்ணாத்த எனும் முதல் சிங்கிள் பாடல் ரிலீசானது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த ’சார சார காற்றே’ என்ற பாடல் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகியுள்ளது.

யுகபாரதி எழுதிய இந்த பாடலை சித் ஸ்ரீராமுடன், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.இந்த பாடல் முதல்முறை கேட்கும்போதே மனதை சுண்டி இழுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரஜினிக்கு என்னவோ சித் ஸ்ரீராமின் குரல் பொருந்தாதது போல் உள்ளது. மேலும் இந்த பாடலில் ஒருசில காட்சிகள் விசுவாசம் படக்காட்சிகளை நினைவுபடுத்துகிறது.
சமீபத்திய செய்திகள்
பால் தினகரன் தலைமையில் கேக் வெட்டி கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு புது வருட பிரார்த்தனை
புது வருட ஆசீர்வாதத்திற்காக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களின் கூடுகையில் எல்லா கிறிஸ்தவ சபை தலைவர்களும், கிறிஸ்தவ சமூக சேவகர்களும், ஊடகத்துறை தலைவர்களும், வழக்கறிஞர்களும், கல்வி ஸ்தாபனங்களின் தலைவர்களும் மற்றும் சமூக பிரமுகர்களும், சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஒன்றாக கூடி, 40 அடி நீளம் கொண்ட கேக் வெட்டி புதுவருடத்தை கொண்டாடினார்கள்.
இதனை இயேசு அழைக்கிறார் நிறுவன தலைவரும், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு நிறுவன தலைவருமான பால் தினகரன் ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த மகாப் பெரிய கிறிஸ்தவர்களின் கூடுகை புது வருட பேரின்ப பெருவிழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளை சேர்ந்த 100 பேர் கொண்ட பாடகர் குழு பாடல்களை பாடி சிறப்பித்தார்கள்.
3 ஆம் தேதி சாமுவேல் பால் தினகரன் தலைமையில் வாலிபர்களுக்காக விசேஷித்த கூடுகை நடைபெற்றது. இந்த புதிய வருடத்தில் எல்லா ஜனங்களுடைய கண்ணீரும் துடைக்கப்பட வேண்டுமென்றும், தேசம் மற்றும் மாநிலங்களின் நிர்வாகம் இறைவனால் வழி நடத்தப்படவும், அதன் நிமித்தம் எல்லா இந்தியர்களும் சமமாக பராமரிக்கப்படவும், இந்திய பிரஜைகள் எல்லாரும் சமாதானத்தோடு வாழ்வு நடத்தவும், இறையாசி பெருகி, செழிப்பு உண்டாகவும், யாவருடைய வீடும், குடும்பமும், பொருளாதாரமும், வணிகமும், சமூக சேவையும் கட்டப்படவும், பால் தினகரன், ஸ்டெல்லா தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன், சாமுவேல் பால் தினகரன், ஷில்பா தினகரன், ஷேரன் தினகரன், ஸ்டெல்லா ரமோலா மற்றும் டேனியல் டேவிட்சன் இணைந்து பாடல்களோடு விசேஷித்த பிரார்த்தனை நடத்தினார்கள்.

நிகழ்ச்சி குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பால் தினகரன்,
“சுவேஷித்த இந்த புதிய வருடத்தில் இயேசுவின் ஆசி அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைக்கவும், அனைத்து மக்களும் சமாதானமாக வாழவும், மக்கள் அனைவரும் சமமாக வாழ்வதோடு, அவர்களிடத்தில் சகோதரத்துவம் நிலைத்திறுக்கவும், சகோதரத்துடனும் வாழவும், தேசத்தில் பொருளாதாரம் பெருகி, அனைத்து மக்களிடன் குடும்பங்கள் பல நன்மைகளை பெறவும், அனைத்து கிறிஸ்தவ சபைகளும், அனைத்து கிறிஸ்தவ சபை தலைவர்களும், சாதி மதம் இன வேறுபாடின்றி பிரார்த்தனை செய்திருக்கிறோம். அதன் பலன் நிச்சயம் மக்களுக்கு கிடைக்கும்.
இது மாத்திரம் அல்லாமல், அனைத்து கிறிஸ்தவ தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த தேசத்திற்கும் மக்களுக்கும் இன்னும் கூடுதலான நன்மைகள் செய்யலாம் என்று ஆலோசித்திருக்கிறோம். கல்வி, மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு வகையில் பல முன்னேற்ற பணிகளை இந்த தேச மக்களுக்கு செய்ய இருக்கிறோம்.” என்றார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கேரள மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், தற்போது தென் இந்தியாவில் மத ரீதியான சர்ச்சைகள் உடுவெடுக்க தொடங்கியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் ? என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த பால் தினகரன், “தேசத்தில் பலவிதமான சம்பவங்கள், முக்கியமாக கிறிஸ்தமஸ் நாளில் நடந்ததை பார்க்கிறோம். ஆண்டவர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாம், உங்களுக்காக ஜெபம் செய்கிறவர்களுக்கு ஜெபம் செய்வது மட்டும் அல்ல, நன்மை செய்தவர்களுக்கு நன்மை செய்வது மட்டும் அல்ல, உங்களுக்கு தீமை செய்தவர்களாக இருந்தாலும், நன்மை செய்தவர்களாக இருந்தாலும், எந்தவித பாகுபாடின்றி நீங்கள் ஜெபம் செய்து அவர்களுக்கு இன்னும் கூடுதலான நன்மை செய்யுங்கள், அதற்கான பலனை நான் கொடுப்பேன், நான் அனைவரது இருதயங்களையும் மாற்றி, மக்களை ஒன்றிணைப்பேன், என்று சொல்லியிருக்கிறார். அதனால், யார் என்ன செய்தாலும், அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இன்னும் அதிகமான பிரார்த்தனைகள் மற்றும் சேவைகளை செய்ய எங்களை நாங்கள் அர்ப்பணிக்கப் போகிறோம்.” என்று தெரிவித்தார்.
இயேசு விடுவிக்கிறார் நிறுவன தலைவர் மோகன் சி.லாசரஸ், சி.எஸ்.ஐ சென்னை மண்டல பேராயர் பால் பிரான்சிஸ், கத்தோலிக்க பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, அருள்தந்தை ஜி.ஜே.அந்தோணிசாமி, போதகர் டி.மோகன், பேராயர் கதிரொளி மாணிக்கம், ஆயர் லாரன்ஸ் பயஸ், அசம்பிளி ஆஃப் காட் தேசிய தலைவர் போதகர் ஆபிரகாம் தாமஸ், எஸ்.பி.சி.பேராயர் கே.பி.எடிசன், போதகர் ஜான் எப் காலேஃப், சத்தியம் டிவி தலைவர் ஐசக் லிவிங்ஸ்டன், மாதா டிவி தலைவர் அருள்திரு டேவிட் ஆரோக்கியம், AICC பேராயர் மோகன்தாஸ், பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், போதகர் சாம் பி.செல்லத்துரை, TELC போதகர் ஜெயசிங், பேராயர் தினத்தூது ராஜா, போதகர் சுவர்ணராஜ், போதகர் ஆனந்த், பேராயர் மோஷாக், பேராயர் லியோ நெல்சன், அருள்திரு பெனடிக், சுவிசேஷகர் ஜி.பி.எஸ்.ராபின்சன், போதகர் கல்யாண் குமார், கல்வாரி போதகர் பிரேம்நாத் சாமுவேல், MCC முதல்வர் பால் வில்சன், WCC முதல்வர் லில்லியன் ஜாஸ்பர், என்.ஜி.சி பேராயர் கிங்ஸ்லி, போதகர் ராஜன் ஜான் மற்றும் அநேக கிறிஸ்தவ பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
இதில், மோகன் சி.லாசரஸ் தேசத்திற்காகவும், மாநிலத்திற்காகவும் விசேஷித்த பிரார்த்தனை நடத்தினார். சி.எஸ்.ஐ சென்னை மண்டல பேராயர் பால் பிரான்சிஸ் புது வருட ஆசீர்வாதத்திற்கான பிரார்த்தனை நடத்தினார். இயேசு அழைக்கிறார் நிறுவன தலைமை நிர்வாகி முனைவர் எஸ்.ஜே.கிங்ஸ்லி ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!
செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து துல்லியமாக விவாதிக்கும் ‘நித்திலன் வாக்குமூலம்’ என்ற நாவல் இன்று வெளியானது. எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து இதனை எழுதியுள்ளார்.
முதல் இரண்டு பாகங்களை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா, நிறைவு பாகத்தையும் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜா நூலை வெளியிடும் காட்சி, ஒரு சில தினங்களுக்கு முன் அவரது இல்லத்தில் படமாக்கப்பட்டது.
பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்தை மையமாகக் கொண்ட கபிலன்வைரமுத்துவின் ஆகோள் என்ற நாவல் 2022ஆம் ஆண்டு வெளியானது.
அதன் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் 2024ஆம் ஆண்டு வெளியானது. ஆகோள் தொடரின் மூன்றாவது மற்றும் நிறைவு பாகமான நித்திலன் வாக்குமூலம் இன்று வெளியானது.
ஆகோள் முதல் பாகம், பிரிட்டிஷ் அரசின் கை ரேகை சட்டத்திற்கு எதிராகப் போராடி உயிர் நீத்த மதுரை பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியது. மாக்கியவெல்லி காப்பியம் என்ற இரண்டாம் பாகம் மாநில சுயாட்சி குறித்த அறிவியல் பார்வையைப் பதிவு செய்தது. நித்திலன் வாக்குமூலம் என்ற இந்த மூன்றாம் பாகம், குற்ற இனச் சட்டம் தோன்றிய வரலாறையும், எதிர்கால செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் செயல்பாடு குறித்தும் ஆழமாக விவாதிக்கிறது.
ஆகோள் தொடரின் மூன்று நாவல்களையும் டிஸ்கவரி பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது. வருகிற ஜனவரி 04ஆம் நாள் நித்திலன் வாக்குமூலத்திற்கான ‘ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி’, சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.
ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'
'பிரியமுடன்', 'யூத்', 'ஜித்தன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் 'சுப்ரமணி'.
தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான கிரைம் திரில்லரான 'சுப்ரமணி' திரைப்படத்தில் இயக்குநர் செல்வாவின் உதவியாளராக தளபதி விஜய் நடித்த 'யூத்' மற்றும் ஜித்தன் ரமேஷ் நடித்த 'ஜித்தன்' திரைப்படங்களில் பணியாற்றிய மிஷ்கின் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ரிச்சர்ட் ரிஷி மற்றும் நட்டி என்கிற நட்ராஜன் சுப்பிரமணியம் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'சுப்ரமணி' திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் ஆர் கே செல்வா, "இப்படத்தில் மிஷ்கினை இயக்கியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை ஏற்றிராத மிக முக்கிய கதாபாத்திரத்தை அவர் இப்படத்தில் ஏற்று நடித்துள்ளார், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் என்னுடைய உதவி இயக்குநராகவே மீண்டும் மாறி அவர் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சில காட்சிகளையும் அவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் ரிஷி மற்றும் நட்டியும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். ஐந்து கொடூர கொலை சம்பவங்களை மூன்று காவல் அதிகாரிகளின் பார்வையில் வெவ்வேறு கோணங்களில் அணுகி இந்த படு பாதக சம்பவங்களை செய்யும் இருண்ட அரக்கனை மேலும் குற்ற சம்பவங்கள் நிகழ்வதற்குள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை விவரிக்கும் வகையில் திரைக்கதையை இப்படத்தில் அமைத்துள்ளோம். வித்தியாசமான கதைக்களங்களை எப்போதும் வரவேற்கும் தமிழ் ரசிகர்கள் இப்படத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.
ஆர் கே செல்வா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் 'சுப்ரமணி' திரைப்படத்தில் பிரணவ் மற்றும் பாலாஜி ப்ராஜெக்ட் ஹெட் ஆகவும் இணை தயாரிப்பாளர்கள் ஆகவும் பணியாற்றியுள்ளனர். அப்சல் பெய்க் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். தயாரிப்பு நிர்வாகி: எம். ஜெ. பாரதி
தெலுங்கு பிக்பாஸ் புகழ் திவ்யா 'சுப்ரமணி' படத்தின் நாயகியாக நடித்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ் புகழ் ஜாஸ்பர், லொள்ளுசபா சுவாமிநாதன் இப்படத்தில் நடித்துள்ளனர். அகிலேஷ் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணன் 'சுப்ரமணி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' புகழ் சனுக்யா இசையமைக்க அஸ்மின் பாடல்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை டான் மேக்ஸின் உதவியாளரான சுஜிர் பாபு கையாள சண்டை பயிற்சிக்கு ராம்போ விமல் பொறுப்பேற்றுள்ளார். எஃபக்ட்ஸ்: சேது, விஎஃப்எக்ஸ்: சுனில் (69 ஷேட்ஸ்), டிசைன்ஸ்: குமரன் கே, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின், ரிச்சர்ட் ரிஷி, நட்டி நடிக்கும் 'சுப்ரமணி' திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடும் பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை 'நாய் சேகர்' திரைப்படத்தை இயக்கியவரும், 'கோமாளி', 'கைதி', 'விஐபி 2', 'இமைக்கா நொடிகள்', மற்றும் 'கீ' உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், நிறைய குறும்படங்களையும் யூடியூப் வீடியோக்களை உருவாக்கியவருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட பணிகளை முடித்து படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். திரைப்படத்தின் பெயர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெகு விரைவில் செய்யப்படும்.
அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வைகையில் இப்படம் உருவாகியுள்ளது, தொடக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாத வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என்று குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகையும் 'கொட்டுக்காளி' தமிழ் படத்தில் நடித்தவருமான அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
திரைப்படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், "காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாக்யராஜ் சார் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும்," என்றார்.
மேலும் பேசிய அவர், "ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். மிகவும் திறமையான நடிகை என பெயரெடுத்த அன்ன பென் உடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி," என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்ற, படத்தொகுப்பை ராம் பாண்டியன் கையாள்கிறார். இவர்கள் இருவரும் சதீஷ் நாயகனாக அறிமுகமாகி கிஷோர் ராஜ்குமார் இயக்கிய 'நாய் சேகர்' படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. கலகலப்பான பாடல் ஒன்றுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஶ்ரீ சசிகுமார் கலை இயக்குநர் ஆவார். ஆடை வடிவமைப்பு - கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு - எஸ். என். அஸ்ரப்/நரேஷ் தினகரன்.
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!
துபாயில் Kannan Ravi Group நிறுவனத்திற்கு சொந்தமான புதிய பிரம்மாண்ட பொழுதுபோக்கு மையமான Panther Club-ஐ, கிங் கான் ஷாருக் கான் நேற்று திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்வு, துபாயின் நைட்லைஃப் வரலாற்றில் முக்கியமான தருணமாக மாறி, புத்தாண்டு கொண்டாட்டங்களின் உச்சமாக அமைந்தது.
துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group), வணிகம், ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் (Hospitality), பொழுதுபோக்கு மற்றும் லக்ஷரி சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. தரமான சேவை, நவீன அணுகுமுறை மற்றும் சர்வதேச தரத்திலான நிர்வாக முறைகள் ஆகியவற்றின் மூலம், இந்த குழுமம் துபாயின் வளர்ந்து வரும் வணிக சூழலில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் தமிழ் திரையுலகிலும் கால்பதித்து பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது.
Marriott Marquis Dubai Creek வளாகத்தில் அமைந்துள்ள Panther Club, கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோரின் முன்னெடுப்பில் உருவாகியுள்ளது. அவர்களது அழைப்பை ஏற்று, நெருங்கிய நண்பரான பாலிவுட் கிங் கான் ஷாருக் கான் இந்த கிளப்பை திறந்து வைத்தார். அவரது வருகை நிகழ்விற்கு கூடுதல் சிறப்பையும் பெருமையையும் சேர்த்தது.
கிங் கான் ஷாருக் கான் வருகை ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கு கூட்டிச் சென்றது. கடும் பாதுகாப்பு சூழலில் நடந்த அந்த நிகழ்வில், அவரது எளிமையும் கவர்ச்சியும் ரசிகர்களை மெய்மறக்க செய்தது. இந்த நிகழ்வு, பாந்தர் கிளப் ( Panther Club ) தொடக்க விழாவை துபாயின் நைட்லைஃபில் முக்கியமான தருணமாக மாற்றியது.
துபாயின் பிரமாண்ட நைட்லைஃப் கலாச்சாரத்தில் புதிய மைல்கல்லாக உருவெடுத்துள்ளது Panther Club. நவீன வடிவமைப்பு, உலகத் தரத்திலான இசை, ஒளி அமைப்புகள் மற்றும் லக்ஷரி அனுபவத்தை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த கிளப், உயர்தரமான பொழுதுபோக்கை விரும்பும் மக்களுக்கான புதிய அடையாளமாக மாறியுள்ளது.
சர்வதேச தரத்திலான சேவை, பாதுகாப்பு, மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, உலகளாவிய பிரபலங்கள் வருகை தரும் அளவிற்கு இந்த இடத்தை உருவாக்கியுள்ளது கண்ணன் ரவி குழுமம்.
துபாயின் வளர்ந்து வரும் வர்த்தக சூழலில், உலகளாவிய தரத்தில் பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கும் நோக்குடன் செயல்படும் கண்ணன் ரவி குழுமம், Panther Club போன்ற திட்டங்களின் மூலம் சர்வதேச அளவில் தனது முத்திரையை பதித்து வருகிறது. இதன் மூலம், கண்ணன் ரவி குழுமம் இன்று துபாயின் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க வணிக அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
கண்ணன் ரவி குழுமம், துபாயில் மட்டுமல்லாது, தமிழ் திரையுலகிலும் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தி, பல புதிய திரைப்படங்களை தயாரித்து வருவதன் மூலம், தமிழ் சினிமா உலகிலும் தனது வலுவான தடத்தை தொடர்ந்து பதித்து வருகிறது.
பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் 'வித் லவ்'!
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நவீன இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி வெளியான படம் டீசர், சிங்கிள் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், அசத்தலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு திரையரங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது படக்குழு.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )” படத்தில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார். “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இப்படத்தை இயக்கி உள்ளார்
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!
Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் Million Dollar Studios, 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறது.
Million Dollar Studios மற்றும் Neo Castle Creations நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கின்றனர்.
'ஜமா' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
படத்தின் முக்கிய சிறப்பம்சமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா நடிப்புக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவருடன் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசையமைப்பை 'மண்டேலா', 'மாவீரன்' புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் கையாள, ஒளிப்பதிவை 'அருவி', 'சக்தி திருமகன்' பட ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர் கேலிஸ்ட் மேற்கொள்கிறார். மேலும் படத்தொகுப்பை பார்த்தா செய்ய, மகேந்திரன் கலை இயக்கத்தை செய்கிறார். பாடலாசிரியர்கள் மோகன்ராஜன், பாக்கியம் சங்கர் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கவனிக்கிறார்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படைப்பு, அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பேமிலி என்டர்டெயின்ராக உருவாகிவருகிறது.
பூஜையுடன் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிற சூழலில், இப்படம் வருகிற சம்மரில் ரசிகர்களை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, அழகு, ஆற்றல் என அனைத்தையும் ஒருங்கே தாங்கிய இந்த தோற்றம், யாஷின் கனவுப் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதி செய்கிறது.
தனித்துவமான நடிப்பு திறமை, உணர்வுப்பூர்வ வெளிப்பாடு மற்றும் வலுவான திரை ஆளுமை கொண்ட நடிகையாக நீண்ட காலமாக கோலோச்சி வரும் நயன்தாரா, டாக்ஸிக் படத்தில் இதுவரை தோன்றாத ஒரு புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இருள் நிறைந்த இந்த உலகத்தில், அவரது இருப்பே ஒரு வலுவான அடையாளமாக திகழ்கிறது.
கங்கா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா, அச்சமற்ற துணிச்சலுடனும், கம்பீரமான அமைதியுடனும் திரையில் தோன்றுகிறார். கையில் துப்பாக்கியுடன், செழுமையான கேசினோ ( grand casino) பின்னணியில் நின்று கொண்டு, அந்த இடத்தையே கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் காட்டுகிறார். அழகும் ஆபத்தும் கலந்த அந்த தோற்றம், கதாபாத்திரத்தின் ஆழத்தையும் மர்மத்தையும் வலுவாக வெளிப்படுத்துகிறது.
இந்தக் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) கூறுகையில்,
“நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம். ஆனால் டாக்ஸிக் படத்தில், இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில்தான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார். அதைவிட அழகானது, அந்த பயணத்தில் ஒரு நெருங்கிய நண்பரையும் நான் பெற்றேன்,” என தெரிவித்துள்ளார்.
KGF: Chapter 2 மூலம் இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றிய யாஷ், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மூலம் மீண்டும் ஒரு புதிய உயரத்தை நோக்கி பயணிக்கிறார். இந்த படம், தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கருப்பொருளால் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. முன்னதாக, கியாரா அத்வானி நடித்த ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரம் வெளியானபோது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ஹூமா குரேஷியின் ( Huma Qureshi’s ) மர்மமான ‘எலிசபெத்’ தோற்றம், பழமையான கோத்திக் அழகுடன் கூடிய புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது.
யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள Toxic: A Fairytale for Grown-Ups திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. ஒளிப்பதிவை தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி மேற்கொள்ள, இசையமைப்பை ரவி பஸ்ரூர் செய்துள்ளார். படத்தொகுப்பில் உஜ்வல் குல்கர்னி, கலை இயக்கத்தில் டி.பி. அபித் பணியாற்றியுள்ளனர். ஆக்ஷன் காட்சிகளை ஹாலிவுட் புகழ் ஜே.ஜே. பெர்ரி (John Wick) உடன் இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்டி அமைத்துள்ளனர்.
யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) உடன் இணைந்து இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்டி (Kecha Khamphakdee)அமைத்துள்ளனர்.
வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் மார்ச் 19, 2026, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
ஜனவரி 23 அன்று திரைக்கு வரும் 'மாயபிம்பம்'!
“மாயபிம்பம்” 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம். K.J. சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம், Self Start Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜானகி, ஆகாஷ், ஹரிகிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் சிறப்பம்சமாக, நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பக் குழுவும் முழுவதுமாக புதிய முகங்களைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் ஆகியோர் தங்கள் முதல் முயற்சியாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர்.
2005-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் காதல் கதை, அந்த காலத்து உணர்வுகளையும் நினைவுகளையும் உயிர்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல் மட்டுமின்றி, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளும் அழகாக பின்னியமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும், 90-களில் வளர்ந்தவர்களுக்கு இனிய நினைவுகளாகவும் இந்த படம் அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் ஹிட் பாடலான “எனக்குள்ளே” பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகை வாணி போஜன் வெளியிட்டனர். இருவரும் பாடலை பாராட்டி, படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும், முன்னணி இயக்குநர் சுந்தர் சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, பாடல்களையும் கேட்டுப் பாராட்டியுள்ளார்.
ஒரு அழகான காதல் அனுபவமாக உருவாகியுள்ள “மாயபிம்பம்” – வரும் 2026 ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகும் தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை நிகழ்வு!
தமிழ் ரசிகர்களுக்காக ZEE5 ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை வழங்குகிறது. தளபதி விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது.
H. வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன், அரசியல் பின்னணியுடன் கூடிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாகும். தளபதி விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். KVN நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம், நடிகராக விஜய் மேற்கொள்ளும் இறுதி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ரசிகர்களின் நினைவில் என்றும் பதியும் வகையில் அமைந்தது. வெளிநாட்டில் நடைபெற்றதால் நேரில் பங்கேற்க முடியாத ரசிகர்களுக்காக, இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வை ZEE5 நேரடியாக ரசிகர்களின் இல்லங்களுக்கே கொண்டு வருகிறது.
இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டதுடன், தளபதி விஜய் நடிகராக தனது திரை வாழ்க்கையின் இறுதி மேடை உரையை வழங்கி, ரசிகர்களை உருக வைத்தார். அவரது திரைப்பயணத்திற்கு மரியாதையாக, அவரது பிரபலமான பாடல்களும் நடனமும் கூடிய நேரடி மேடை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும், இயக்குநர்கள் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஒரு உட்ச நட்சத்திரத்தின் விடைபெறும் நிகழ்வு மட்டுமல்ல — தமிழ் சினிமாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்.
‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டை ஜனவரி 4, மாலை 4.30 மணிக்கு, தமிழ் ZEE5-ல் தளத்திலும் ZEE தமிழ் தொலைக்காட்சியிலும் தவறாமல் காணுங்கள்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













