சற்று முன்

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ள ZEE5 வின் 'விநோதய சித்தம்' திரைப்படம்   |    வரலட்சுமி சரத்குமார் வழக்கறிஞராக அவதாரமெடுக்கும் புதிய படம் ஆரம்பம்   |    கண்டெய்னருக்குள் படமாக்கப்பட்ட ஊமைச் செந்நாய் படத்தின் சண்டைக்காட்சிகள்   |    பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் வெளியிட்ட படக்குழு   |    ஆவலுடன் எதிர்பார்க்கும் சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர் அக்டோபர் 22 அன்று வெளியாகிறது   |    மாணவர்களுக்கான இலவச சினிமா பயிற்சி - தமிழகம் முழுவதும் 5 ஊர்களில் 2வது சுற்று தேர்வு   |    விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு   |    தனுஷ் படத்தை சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வு செய்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா   |    SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் ஸ்டோரிஸ் இணையும் படத்தில் நடிக்கும் கலையரசன்   |    தேவா பாடிய காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடல் அபார வெற்றி!   |    ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்ட பிரபல பாடல்   |    இளம் நடிகரின் காலில் விழுந்த பிரியா பவானிஷங்கர்!   |    நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை   |    ஐஸ்வர்யா ராஜேஷ்.கதாநாயகியாக நடிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் படம் பூஜையுடன் துவங்கியது   |    வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சமந்தா; தசரா பண்டிகையில் வெளியான அறிவிப்பு   |    நானி, சாய் பல்லவிக்கு இடையேயான காதலை ஒரு போஸ்டர் மூலமாக வெளியிட்ட படக்குழு   |    ஜெய் பீம் படத்தின் பவர்புல்லான ‘பவர்’ சாங் வெளியானது   |    சமந்தா Dream warrior Pictures நிறுவனத்தில் நடிக்கும் முதல் படம்   |    தனுஷ்,செல்வராகவன் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது!   |    அதர்வாமுரளி நடித்துள்ள 'அட்ரஸ் படபிடிப்பு முடிவடைந்தது.   |   

சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
Updated on : 09 October 2021

SATHYA JYOTHI FILMS T.G.தியாகராஜன், ஹிப்ஹாப் ஆதி கூட்டணியில் “அன்பறிவு”   திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும்  நிலையில், இந்த கூட்டணீ மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படம், மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர்  ARK சரவணன் இயக்கத்தில், மிகப்பெரும் பட்ஜெட்டில் பொழுதுபோக்கு, ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படத்தினை செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரிக்க, SATHYA JYOTHI FILMS சார்பில்  T.G. தியாகராஜன் வழங்குகிறார். இந்த புதிய திரைப்படம் ஆயுத பூஜை நன்நாளில் துவங்குகிறது. படத்தின் படப்பிடிப்பு  வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சென்னை பகுதிகளில், 75 நாட்களில் ஒரே கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.  முன்னணி நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நாயகியாக முன்னணி ஹிரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  

 தற்போது  இயக்குநர் அஷ்வின் ராம் இயகத்தில் உருவாகி வரும் “அன்பறிவு”  திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில்  ஹிப் ஹாப் ஆதி, நடிகர் நெப்போலியன், காஷ்மீரா பர்தேசி  இணைந்து நடித்துள்ளனர்.  

 
 

ImageShare this Tweet


 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா