சற்று முன்

நெட்ஃபிலிக்ஸ் 2026 தமிழ் திரைப்பட வரிசை வெளியீடு   |    சாய் துர்கா தேஜ் கிராமத்து அவதாரத்தில் ‘SYG (சம்பரால எட்டிகட்டு)’ சங்கராந்தி போஸ்டர் வெளியீடு   |    பிரமாண்ட புராண ஆக்ஷன் ‘நாகபந்தம்’ – நபா நடேஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு   |    2026 கோடை வெளியீட்டிற்கு தனுஷ் நடிப்பில் தயாராகும் மெகா திரில்லர்!   |    காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’   |    ஜப்பானை கலக்க வரும் ‘புஷ்பா2: தி ரூல்’, டோக்கியோவில் புரமோட் செய்து வரும் அல்லு அர்ஜுன்!   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் கனவு கூட்டணி பிரம்மாண்ட மெகா திரைப்படம்!   |    Letterboxd வரலாற்றில் சாதனை – இந்திய அறிமுக இயக்குநராக உலக டாப் டென்னில் அபிஷன் ஜீவிந்த்!   |    ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது   |    ‘திரௌபதி 2’ – 14 ஆம் நூற்றாண்டை திரையில் பிரம்மாண்டமாக காட்டும் வரலாற்று ஆக்ஷன்!   |    சீனு ராமசாமியின் ‘நிலத்தவள்’ கவிதை நூல் வெளியீடு   |    கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் பிரம்மாண்ட பொங்கல் வெளியீடு “வா வாத்தியார்”   |    இரா. சரவணனின் ‘சங்காரம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது   |    வைரலாகும் ‘லக்கா லக்கா லடுக்கி’ ‘தீராப்பகை’ பட குத்து பாடல்!   |    திகில், திரில்லர், அதிரடி என 2026-ஐ அதிரடியாக தொடங்கிய ZEE5 தமிழ்   |    சர்வதேச திரைப்பட விமர்சன தள தரவரிசையில் ‘பைசன் காலமாடன்’ சாதனை!   |    சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!   |    100 நாட்கள் வெற்றி… உலகத் திரையரங்குகளை நோக்கி 'காந்தாரா சேப்டர் 1'   |    ’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |   

சினிமா செய்திகள்

A quiet place – 2 ஆங்கிலப்படத்தை பார்த்து வியந்து பாராட்டிய பிசாசு - 2 இயக்குனர்
Updated on : 09 October 2021

நேற்று  இரவு ஆங்கிலத் திரைப்படம் quiet place – 2வை எனது  பிசாசு - 2 குழுவினருடன் பார்த்து வியந்தேன். இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த  திரைப்படத்தின் முதல் பாகத்தைப் பார்த்து வியந்திருந்தேன். இரண்டாவது பாகம் வருகிறது என்று அறிவித்த பொழுது முதல் பாகம் அளவிற்குச் சுவராசியமாய் இருக்காது என நினைத்தேன்.ஆனால் இன்று பார்த்தவுடன் எனது கணிப்பு தவறானதென உணர்ந்தேன்.



 



quiet place - 2 நூறு சதவீதம் சுவராசியமாய் இருந்தது.என்னோடு படம்  பார்த்த அனைவரும் இருக்கையின் நுனியிலிருந்து பதட்டத்துடன் பார்த்து ரசித்தனர்.



 



திரைப்படத்தின் இயக்குநரும், எழுத்தாளருமான ஜான் கிரஸ்ன்ஸ்கி இந்த பத்து வருடத்தில் ஹாலிவுட் சினிமா கண்டு பிடித்த திறமையான படைப்பாளி. வேற்றுக்கிரக வாசிகள் மனித சமூகத்தை வேட்டையாடுவது தான் கதை.இந்த மெலிதான கருவை எடுத்துக் கொண்டு,திரைக்கதையில் மாயம் செய்திருக்கிறார்.



 





தாயும் மூன்று குழந்தைகளும் கொண்ட ஒரு குடும்பம்,அதிலும் ஒரு கைக்குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி வேற்றுக்கிரக வாசிகளைப் போராடி வெல்கிறார்கள் என்பதை ஓர் அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லியத்தோடு கையாண்டிருக்கிறார் இயக்குநர்.தாயாக நடிக்கும் எமிலி பிளெண்ட் மிக நேர்த்தியாக தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். இரண்டு குழந்தைகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். நடிகர் கிலியன் மர்பியும் தனது பாத்திரத்தைச் செம்மையாகச் செய்திருக்கிறார்.



 



இதன் இசையமைப்பாளர் மார்கோ பெல்டிரமியின் இசை உள்ளத்தை வருடுகிறது. பயத்தைக் கூட்டுகிறது. இத் திரைப்படம் ஓர் உணர்ச்சி குவியல்.இந்த திரில்லர் திரைப்படத்தைத் திரையரங்கில் வந்து பார்க்கும் பொழுதுதான் இதன் தொழில் நுட்பத்தையும்,பிரமாண்டத்தையும் உணர்வீர்கள். இந்த கோவிட்  வீடடங்கு காலத்தில் நமக்கு quiet place -2 ஒரு  திருவிழா தான். ரசிகர்களே திரையரங்கத்திற்கு வந்து இந்த திரைப்படத்தைப் பாருங்கள்.



நாமும் வேற்றுக்கிரக வாசிகளுடன் யுத்தம்செய்யலாம்.



- அன்புடன்



- மிஷ்கின்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா