சற்று முன்

இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

'சங்கம் நடத்துவது என்பது சாதாரணமான விஷயமல்ல..!' - சங்க பாராட்டு விழாவில் ஆர்.கே.செல்வமணி
Updated on : 08 October 2021

கலைமாமணி விருது பெற்ற  மூத்த பத்திரிகையாளரும், மக்கள் தொடர்பாளருமான நெல்லை சுந்தர்ராஜன், மற்றும் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மணவை பொன் மாணிக்கம்  ஆகியோரை பாராட்டும் விதமாகவும், டைமண்ட் 

பாபு தலைமையிலான சினிமா மக்கள் தொடர்பாளர் (PRO) யூனியனின் புதிய நிர்வாகிகளை பாராட்டும் விதமாகவும் சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில், பாராட்டு விழா நடத்தப்பட்டது.



 



சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வணி, இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தினா, இயக்குநர் வி.சேகர், 

சேலம் ஆர்.ஆர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன், மூத்த பத்திரிகையாளர்கள் ராம்ஜி, துரை ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.



 



நிகழ்ச்சியில், கலைமாமணி விருது பெற்ற, சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் கௌரவ ஆலோசகரான நெல்லை சுந்தர்ராஜன் மற்றும் துணைத்தலைவரான  மணவை பொன் மாணிக்கம்  ஆகியோருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதோடு, பொற்கிழியும் வழங்கப்பட்டது.



 



மேலும், டைமண்ட் பாபு அவர்களின் தலைமையிலான சினிமா மக்கள்  தொடர்பாளர்கள் (PRO) யூனியனின் புதிய நிர்வாகிகளுக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



 



நிகழ்ச்சியில் பேசிய சினிமா தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பான பெப்சி (FEFSI) அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ”சங்கம் நடத்துவது என்பது சாதாரணமான விஷயமல்ல.அதிலும், பத்திரிகையாளர்களை ஒன்றிணைத்து சங்கம் நடத்துவது என்பது மிகப்பெரிய சவலான விஷயம்..."  அந்த சவாலை 

மிக சிறப்பாக எதிர்கொண்டு சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.பாலேஸ்வர், செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக், பொருளாளர் மதிஒளி குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுக்கு எனது 

வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



 



கலைமாமணி வென்ற நெல்லை சுந்தரராஜன் மற்றும் நான் எப்போதும் மாணிக்கம் என்று அழைக்க கூடிய மணவை பொன் மாணிக்கம் ஆகியோர் விருது பெறக்கூடிய அத்தனை தகுதிகளும் உள்ளவர்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



 



சாதாரண செல்வமணியாக இருந்த என்னை ஆர்.கே.செல்வமணியாக உயர்த்தியவர்களில் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபுவும் ஒருவர். சினிமாவில் என்னை யாருக்கும் தெரியாத போது, நான் அறிந்த இருவர் சிங்காரவேலுவும் டைமண்ட் பாபுவும் தான். அதில் டைமண்ட் பாபு தலைமையிலான சினிமா மக்கள் தொடர்பாளர்கள் யூனியனின் இன்றைய புதிய நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துகளை 

தெரிவித்துக் கொள்கிறேன்.



 



சினிமா தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பான பெப்சி (FEFSI) அமைப்பின்  மூலம் பத்திரிகையாளர்களுக்கு முடிந்த உதவிகளை நான் செய்துக் கொண்டு தான் இருக்கிறேன். தற்போது கூட பெப்சி (FEFSI) தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட உணவு தானியம் கடையின் மூலம் பத்திரிகையாளர்களும் பயன்பெற 

வேண்டும், என்று பத்திரிகை நண்பர் ஒருவர் என்னிடம் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று, நான் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். எனவே விரைவில் நல்ல செய்தி வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன். அதேபோல், பெப்சி (FEFSI)

தொழிலாளர்களுக்காக கட்டப்படும் குடியிருப்பில் பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் தொடர்பாளர்களுக்கும் வீடு வழங்கும்  முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். ஆனால், அது குறித்து தற்போது எந்த ஒரு உறுதியும் அளிக்க முடியாது. வீடு கட்டும் 

பணி தொடங்கிய பிறகு அது குறித்து பேசலாம். ஆனால், நிச்சயம் பத்திரிகையாளர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை நான் எப்போதும் 

செய்துக்கொண்டு தான் இருப்பேன்.” என்று தெரிவித்தார்.



 



ஆர்.கே.செல்வமணி அவர்களைத் தொடர்ந்து இயக்குனர் வி.சேகர் , இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் இசைஞர்.தீனா சேலம் ஆர்.ஆர்.பிரியாணி குரூப் ஆஃப் கம்பெனிஸ்  உரிமையாளர் தமிழ்செல்வன், மூத்த பத்திரிகையாளர்கள் 

'மக்கள் குரல்' .ராம்ஜி , 'ரோஜா தமிழ் டி.வி'  துரை ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பாரட்டு பெறுபவர்களையும் பத்திரிகையாளர்களையும் பாராட்டி பேசினர். கலைமாமணிகள் நெல்லை சுந்தர்ராஜன் , மணவை பொன் மாணிக்கம் பி.ஆர்.ஓ யூனியன் தலைவர் டைமண்ட் பாபு , செயலாளர் யுவராஜ் உள்ளிட்டோர் ஏற்புரையாற்ற முன்னதாக .,  சினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.ஆர்.பாலேஷ்வர் வரவேற்புரை ஆற்றிட முடிவில் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார். விழாவினை  இனிதாக சினிமா பத்திரிகையாளர் விஜய் ஆனந்த் தொகுத்து வழங்கிட விழா இனிதே நிறைவுற்றது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா